Featured post

ARC 33rd National Tenpin Bowling Championships

 ARC 33rd National Tenpin Bowling Championships  25th November – 30th November 2024 Amoeba, Church Street, Bangalore 2nd December 2024 Akaas...

Thursday, 15 December 2022

டெரர் போலீஸ் அதிகாரியாக சத்யராஜ் நடிக்கும் அங்காரகன்

 *டெரர் போலீஸ் அதிகாரியாக சத்யராஜ் நடிக்கும் அங்காரகன்*


*அங்காரகன் மூலம் மீண்டும் வில்லன் அவதாரம் எடுக்கிறாரா சத்யராஜ் ?*


ஜூலியன் & ஜெரோமா இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் ஜோமோன் பிலிப் மற்றும் ஜீனா ஜோமோன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘அங்காரகன்’. 







இந்த படத்தின் கதாநாயகனாக ஸ்ரீபதி நடித்துள்ளார். மேலும் இந்த படத்தின் திரைக்கதையை எழுதியுள்ளதுடன், கிரியேட்டிவ் இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார் ஸ்ரீபதி. இவர் பிரபல சாப்ட்வேர் நிறுவனம் ஒன்றில் சீனியர் மேலாளராக பணியாற்றியவர். சினிமாவின் மீது, குறிப்பாக நடிப்பின் மீதுள்ள ஆர்வத்தால் இந்த படத்தின் மூலம் கதாநாயகனாக களமிறங்கியுள்ளார்.


இந்த படத்தை மோகன் டச்சு என்பவர் இயக்குகிறார். இவர் பிரபல பாலிவுட் இயக்குநர் ராம்கோபால் வர்மாவிடம் சர்க்கார்-3, கில்லிங் வீரப்பன் மற்றும் சின்ட்ரெல்லா ஆகிய படங்களில் உதவி இயக்குனராக, ஒளிப்பதிவாளராக  பணிபுரிந்த அனுபவம் கொண்டவர்.


இந்த படத்தில் டெரர் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் சத்யராஜ் நடித்துள்ளார். மலையாள நடிகை நியா இந்த படத்தில் கதாநாயகியாக நடிப்பதன் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். சமீபத்தில் மலையாளத்தில் இயக்குனர் வினயன் இயக்கத்தில் வெளியாகி வெற்றி பெற்ற பத்தொன்பதாம் நூற்றாண்டு படத்தில் கதாநாயகியாக நடித்துள்ள நியா, தெலுங்கில் காமெடி நடிகர் அலியுடன் இணைந்து லாயர் விஸ்வநாத் படத்திலும் நடித்துள்ளார்.


மேலும் அங்காடித்தெரு மகேஷ், ரெய்னா காரத், ரோஷன், அப்புக்குட்டி, தியா, நேகா ரோஸ், குரு சந்திரன், கேசிபி பிரபாத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்


பீஸ்ட் படத்தில் இடம்பெற்ற ஹிட் பாடலான ஜாலியோ ஜிம்கானா உள்ளிட்ட 125க்கும் மேற்பட்ட சூப்பர்ஹிட் பாடல்களை எழுதிய கு.கார்த்திக் இந்த படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.


சூது கவ்வும், இன்று நேற்று நாளை, மரகத நாணயம் உள்ளிட்ட படங்களில் வசனங்களில் பங்களிப்பு செய்த கருந்தேள் ராஜேஷ் இந்த படத்தின் வசனங்களை எழுதியுள்ளார்.


இந்த படம் 2023 கோடை விடுமுறைக்கு வெளியாகும் வரையில் தயாராகி வருகிறது  என கூறியுள்ளார் படத்தின் நிர்வாக தயாரிப்பாளர் S.கிறிஸ்டி


*தொழில்நுட்பக் குழுவினர் விபரம்*


ஒளிப்பதிவு & இயக்கம் ; மோகன் டச்சு


திரைக்கதை ; இயக்கம் (கிரியேடிவ்)  ; ஸ்ரீபதி


ஒளிப்பதிவாளர் (2வது) ; மாநில அரசு விருது பெற்ற ஆர்.கலைவாணன் 


வசனம் ; கருந்தேள் ராஜேஷ் 


படத்தொகுப்பு ; மதுரை வளர் பாண்டியன் 


இசை இயக்குநர்: கு. கார்த்திக் 

சண்டை காட்சிகள் ; ஜாக்கி ஜான்சன் 


நடனம் ; வாசு நவநீதன் 


கலை இயக்குனர் ; கே மதன் 


நிர்வாக தயாரிப்பாளர் ; S.கிறிஸ்டி


தயாரிப்பு வடிவமைப்பு ; L. விவேக் (Primerose Entertainment)


மக்கள் தொடர்பு ; A.ஜான்

No comments:

Post a Comment