Featured post

ZEE5 தீபாவளியை ஒளியூட்டுகிறது – “Bharat Binge Festival: இந்த தீபாவளி, சிர்ஃப் ZEE5 பர் ப்ளாட் பதலேகா… ரெடியாக வாங்க

 ZEE5 தீபாவளியை ஒளியூட்டுகிறது – “Bharat Binge Festival: இந்த தீபாவளி, சிர்ஃப் ZEE5 பர் ப்ளாட் பதலேகா… ரெடியாக வாங்க!” ~ திருப்பங்களும் கொண்...

Monday, 18 November 2019

வெற்றி களைக்கட்டும் புதிய கூட்டணி. “வானம் கொட்டட்டும்” முதல் பாடல் வெளியீடு.


மணிரத்னம் வழங்கும் மெட்ராஸ் டாக்கீஸ் ‘வானம் கொட்டட்டும்’ படத்தின் படப்பிடிப்பு சென்னை, திருநெல்வேலி பகுதிகளில் நடைபெற்று முடிவடைந்தது.

பாடகர் சித்ஸ்ரீராம் இசை அமைப்பாளராக அறிமுகமாகும் இப்படத்தின் முதல் பாடல் வெளியானது. முதல் பாடலை ஏ.ஆர்.ரஹ்மான் அறிமுகம் செய்தார். புது கவிஞர் சிவா அனந்த் எழுதிய வரிகள் அனைத்தும் மக்களிடையே வெகுவாக கவர்ந்துள்ளது. மெலோடி பாடலான

‘கண்ணு தங்கம் ராசாத்தி..
உன்ன கண்டாலே
நெஞ்சு மூச்சூடும் தீவாளி..
சொன்னா வம்பு மகராசி
ஒம் பேரு சொல்லாட்டி..
மழை ஊருக்கு பெய்யாது டீ..
தனியில நடக்கையில்..
எனக்கு நீ துணையிரு..
மடியில... மனசுல...
உறங்கிட... யெடங்கொடு...’

இந்த பாடல் வரிகள் ஹிட்டாகி உள்ளது. இந்த புது காம்பினேஷனான சித்ஸ்ரீராம் - சிவா அனந்த் கூட்டணியின் மற்ற பாடல்களும் விரைவில் வெளியிடுகிறார்கள் சோனி மியூசிக்.

டிசம்பர் முதல் வாரத்தில் இதன் பாடல் வெளியீட்டு விழா நடைபெறுகிறது.

ஒவ்வொரு உடஞ்ச கண்ணாடியிலும்
உன் உருவம் தெரியுது..
ஒவ்வொரு மழை துளியிலும் உன் உருவம்...
எப்பவும் நான் பார்த்துக் கொண்டேயிருக்கேன்..

இப்படி கவிதையாய்..  படமும் முற்றிலும் மாறுபட்ட குடும்பம் - காதல் கதை அமைப்புடன் உருவாகி வருகிறது. 2020 ஜனவரி வெளியீட்டுக்கான வேலைகள் நடைபெற்று வருகிறது.

நடிகர்கள்:-

ஆர்.சரத்குமார்
ஆர்.ராதிகா சரத்குமார்
விக்ரம் பிரபு
ஐஸ்வர்யா ராஜேஷ்
சாந்தனு பாக்யராஜ்
மடோனா செபாஸ்டியன்
நந்தா
அமித்ஷா
பாலாஜி சக்திவேல்
மதுசூதனா ராவ்

தொழில்நுட்ப கலைஞர்கள்:-

தயாரிப்பு நிறுவனம் - மெட்ராஸ் டாக்கீஸ்
தயாரிப்பாளர் - மணிரத்னம்
இயக்குநர் - தனா
எழுத்து - மணிரத்னம் & தனா

ஒளிப்பதிவு - பிரிதா ஜெயராமன்
இசை - சித்ஸ்ரீராம்
கலை இயக்குநர் - கே.கதிர்
படத்தொகுப்பு - சங்கதமிழன்
பாடல்கள் - சிவா அனந்த்
ஆடை வடிவமைப்பு - ஏகா லக்கானி குழு
நடனம் - விஜி சதீஷ்
சண்டை இயக்குநர் - சாம்
நிர்வாக தயாரிப்பு - சிவா அனந்த்
pro: ஜான்சன் .

No comments:

Post a Comment