Featured post

தமிழர் பாரம்பரிய மல்லர் கம்ப கலையில் கலக்கும் மாஸ்டர்

 தமிழர் பாரம்பரிய மல்லர் கம்ப கலையில் கலக்கும் மாஸ்டர் ராகவா லாரான்ஸ் - ன்  கை கொடுக்கும் கை மாற்றுத்திறனாளி குழுவினர்!!  மாஸ்டர் ராகவா லாரன...

Tuesday 19 November 2019

கிறிஸ்மஸ் விருந்தாக வருகிறது 'அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா'


ஆரா சினிமாஸ் காவ்யா வேணு கோபால் தயாரிப்பில், அவினாஷ் ஹரிஹரன் இயக்குகத்தில், வீரா - மாளவிகா இணைந்து நடிக்கும் 'அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா' திரைப்படம் டிசம்பர் 27ஆம் தேதி திரைக்கு வருகிறது. நகைச்சுவைப் படமான இதில் பசுபதி, ரோபோ சங்கர், ஷாரா, நான் கடவுள் ராஜேந்திரன் என்று ஒரு நட்சத்திர கூட்டமே இணைந்திருக்கிறது.


இப்படம் குறித்து விவரித்த இயக்குநர் அவினாஷ் ராஜேந்திரன், "எங்களது கனவுப் படமான 'அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா' படம் குறித்து அறிவிப்பதில் பெரும் மகிழ்ச்சியடைகிறோம்.பொழுது போக்கு அம்சங்கள் நிரம்பிய இப்படம், விலா நோகச் சிரிக்க வைக்கும் காட்சிகள் நிரம்பியது. பல்வேறு பாத்திரங்களை மையப்படுத்தி சுற்றி வரும் இப்படம், நகைச்சுவை மூலம் அவர்கள் எவ்வாறு ஒருவரோடு ஒருவர் பின்னிப் பிணைந்திருக்கின்றனர் என்பதை சுவைபடச் சொல்லும்.

நூறு சதவீதம் நகைச்சுவைக்கு உறுதியளிக்கும் இப்படத்தில் சில விசேடங்களும் உண்டு. படத்தின் பிரதான பாத்திரங்களான வீரா, மாளவிகா மற்றும் பசுபதி ஆகியோர் நடித்து வெளிவந்த முந்தைய படங்களில் சீரியஸ் வேடங்களில் சித்தரிக்கப்பட்டவர்கள். எனவே இப்போது அவரகளை நகைச்சுவை வேடங்களில் நடிக்க வைத்த காரணம் என்ன என்று இயக்குநர் அவினாஷ் ஹரிஹரனிடம் கேட்டபோது கூறினார்

இவர்கள் நடித்த முந்தைய படங்களை ஊன்றி கவனித்துப் பார்த்தால் ஏதேனும் ஒரு விதத்தில் நகைச்சுவையின் சாயல் இருக்கும். குறிப்பாக பசுபதி சாரைப் பற்றி சொல்லவேண்டும் என்றால், அவர் எந்த வகையான வேடம் என்றாலும், மிகப் பிரமாதமாக நடித்து அந்தப் பாத்திரத்துக்கு நியாயம் செய்வார். வீராவைப் பொறுத்தவரை முழு நீள நகைச்சுவை வேடம் ஏற்றிருப்பதால் இந்தப் படத்துக்குப் பிறகு அவரது பாணியே மாறிவிடும். மாளவிகாவைப் பொறுத்தவரையில் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் பலதரப்பட்ட வேடங்களை ஏற்று நடித்து தன் திறமையை நிரூபித்தவர். குக்கு தமிழ்ப் படத்தில் உணர்ச்சிபூர்வமாக நடித்து நம் உள்ளங்களைக் கொள்ளை கொண்டவர், யவடே சுப்ரமணியம் படத்தில் நடிப்பின் மற்றொரு பரிமாணத்தை வெளிப்படுதியிருந்தார். எனவே இவர்கள் அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா படத்திலும் உயிரோட்டமிக்க நகைச்சுவை நடிப்பை வழங்கியிருக்கிறார்கள். மேலும் ரோபோ சங்கர், ஷாரா, நான் கடவுள் ராஜேந்திரன் மற்றும் பலரும் நகைச்சுவைக் காட்சிளுக்கு சுவை கூட்டியிருக்கின்றனர்" என்றார்.
அவினாஷ் ஹரிஹரன் எழுதி இயக்கியிருக்கும் 'அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா' படத்துக்கு மேட்லி புளூஸ் இசையமைக்க, சுதர்சன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். பிரவீண் ஆன்டனி படத்தொகுப்பை கவனிக்க, எட்வர்ட் கலைமணி கலை இயக்குநர் பொறுப்பை ஏற்க, திலீப் சுப்பராயன் சண்டைக் காட்சிகளை அமைக்கிறார். ஆரா சினிமாஸ் நிறுவனம் சார்பாக காவ்யா வேணுகோபால் இப்படத்தைத் தயாரித்திருக்கிறார்.

No comments:

Post a Comment