Featured post

Heartfelt greetings and gratitude to my beloved fans, my dear friends, and the general public

 Heartfelt greetings and gratitude to my beloved fans, my dear friends, and the general public  Today sept 10th i complete 21 years of my jo...

Friday, 29 November 2019

நடிகர் பிரபாஸ் வரிசையில் வரலாற்று படத்தில் நடிக்கிறார் நடிகர் ஆரி


*அம்மன்யா மூவிஸின் புரடக்ஷன் நெ.1 படத்தின் படப்பிடிப்பு  இன்று பூஜையுடன் இனிதே டி.ஆர் கார்டனில் துவங்கியது*


நடிகர் ஆரி நடிக்கும் புதிய படத்தின்  பூஜையுடன் கூடிய படப்பிடிப்பு இன்று காலை 5 மணிக்கு டி ஆர் கார்டனில் இனிதே துவங்கியது.

இப்படத்தை அம்மன்யா மூவிஸ் சார்பில் சி.வி மஞ்சுநாதன் தயாரிக்கிறார்.

எஸ்.காளிங்கன் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் இவர் என்றென்றும் புன்னகை, ரிச்சி போன்ற படத்தில் இணை இயக்குனராக பணியாற்றியவர்
இப்படத்திற்கு ளிப்பதிவு முருக சரவணன் இவர் தீரன் மற்றும் விஜய் 64 படத்திற்கு 2nd யூனிட் கேமராமேனாக பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கதுமேலும் இப்படத்திற்கு யாகாவாராயினும் நாகாக்க படத்தின் இசையமைப்பாளர் பிரசன் இசை அமைக்க படத்தொகுப்பை ரிச்சி படத்தில்  படத்தொகுப்பாளரான  அதுல் விஜய் கவனிக்கிறார்,கலை இயக்குனராக  காற்று வெளியிடை மாரி 2  போன்ற பல வெற்றிப் படங்களில் பணியாற்றிய அமரன்  பணியாற்றுகிறார்.

சண்டைப்பயிற்சி மாரி 2 , வி ஐ பி உள்ளிட்ட  வெற்றி படங்களில் பணியாற்றிய  ஹரி தினேஷ் கவனிக்கிறார் ..

இப்படத்தைப் பற்றி தயாரிப்பாளர் சி.வி மஞ்சுநாதன் கூறுகையில் இந்த படத்தின் கதையை இயக்குனர் எஸ்.காளிங்கன் எங்களுக்கு கூறிய உடனே இப்படத்தை தயாரிக்க நாங்கள் முடிவு செய்தோம் காரணம் ஹாலிவுட் திரைப்படங்களிலெல்லாம் மித்த லாஜிக்கல் வகையை சார்ந்த திரைப்படங்கள் அதிகப்படியாக வருகின்றன ஆனால் தமிழ் சினிமாவில் இத்தகைய  மித்தலாஜிக்கல் திரைப்படங்கள் அதிகமாக வரவில்லை.

 இந்த வகை திரைப்படங்களை  சரியான கமர்ஷியல் படமாகவும் தமிழில் எடுக்கவில்லை அதனை நிவர்த்தி செய்யும் படமாக இப்படம் அமையும்.

 இது தமிழ் ரசிகர்களுக்கான படமாக மட்டுமல்லாமல் இந்திய ரசிகர்களுக்கான படமாகவே அதிக பொருட்செலவில் மிக பிரமாண்டமாக உருவாக்குகிறோம் இந்தப் படத்தை மித்த லாஜிக்கல் பீரியட் பிலிம் என்றே கூறலாம்.

இப்படத்திற்காக ஆரி தனது உடல் எடையை 10 கிலோ வரை குறைத்து வருகிறார்இதில்  முதன்முறையாக அவர் ஒரு மித்தலாஜிக்கல் பீரியட் பிலிமில் நடிக்கிறார் இப்படம் அவருக்கு மிக முக்கிய படமாக அமையும்.

நாயகியாக ஐதராபாத்தைச் சேர்ந்த பூஜிதா பொன்னாடா நடிக்கிறார் இவர் தெலுங்கில் ரங்கஸ்தலம்  படத்தில் நடித்தவர் மேலும் இப்படத்தில் நடிகர் யோக் ஜேபி முக்கிய  கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவர்களுடன் இணைந்து இன்னும் பல முன்னணி நட்சத்திரங்கள்  நடிக்க உள்ளார்கள் இப்படத்தின் தலைப்பு விரைவில் அறிவிக்கப்படும் என்றவர் இப்படத்தைத் தொடர்ந்து *எங்கள் நிறுவனம் சார்பாக வருடத்திற்கு இரண்டு, மூன்று தரமான திரைப்படங்களை தயாரிக்க உள்ளோம்.* என  தெரிவித்தார்.

No comments:

Post a Comment