Featured post

Stone Bench Films & Zee Studios South in association with Invenio Origin present

 *Stone Bench Films & Zee Studios South in association with Invenio Origin present, Hari directorial, Actor Vishal starrer 'Rathnam&...

Saturday 20 June 2020

பத்திரிக்கை செய்தி

“ பத்திரிக்கை செய்தி”

கொரோனா பாதித்த நோயாளிகளை தொலைவில் இருந்து கண்காணிக்கும் அதிநவீன கருவியை ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனைக்கு வழங்கிய ஸ்டேசிஸ் நிறுவனம்
கொரோனா தொற்று பாதித்த நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கென தொலைவில் இருந்து நோயாளிகளை கண்காணிக்கும் அதி நவீன கருவி ஒன்று சென்னை ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த கருவியை பயன்படுத்தி சிகிச்சையளிப்பதன் மூலம் தொற்று பாதித்த நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கு மருத்துவர்களுக்கும், செவிலியர்களுக்கும் நோய் தொற்று ஏற்படுவதை தடுக்க முடியும் என்று அந்த கருவியை வடிவமைத்துள்ள  ஸ்டேசிஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட நோயாளியின் செயல்பாடுகளை இந்த கருவியின் மூலம் தொலைவில் செவிலியர்களும், வெளியில் இருந்து மருத்துவர்களும் தெரிந்து கொள்ளும் வகையில் இந்த கருவி வடிவமைக்கப்பட்டுள்ளது. புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ள தொலைவில் இருந்து நோயாளிகளை கண்காணிக்கும் அதி நவீன கருவியுடன் ப்ளூடூத் தொழில்நுட்பம் மூலம் செவிலியரிடம் இருக்கும் Tablet கருவியுடன் இணைக்கப்பட்டு நோயாளியின் உடல்நிலையின் இயக்கத்தை உடனுக்குடன் அறிந்துகொள்ள முடியும். நோயாளியின் உடல் இயக்க செயல்பாடுகளை உடனுக்குடன் மருத்துவருக்கு செவிலியர்கள் தகவல்களை அனுப்பலாம்.

முழுக்க முழுக்க இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இந்த அதிநவீன கருவியை யு.எஸ்.எஃப்.டி.ஏ அங்கிகரித்துள்ளது. இந்த தொலைவில் இருந்து நோயாளியை கண்காணிக்கும் கருவி மூலம் மருத்துவர்கள் தங்கள் ஸ்மார்ட்போன்கள் அல்லது ஒரு மைய டாஷ்போர்டில் நிகழ்நேர நோயாளி உயிரணுக்கள் மற்றும் உயர்-தெளிவுத்திறன் போக்குகளைக் தெரிந்துகொள்ளலாம்.  இதன் மூலம் COVID-19 நோயாளிகளுக்கு சிகிச்சையும் முறையாக கிடைக்கும், நோயாளியிடம் இருந்து செவிலியருக்கு, மருத்துவருக்கு கொரோனா பரவுவதை தடுக்க முடியும்.







ஏற்கெனவே பயன்படுத்திவரும் நோயாளியை கண்காணிக்கும் கருவியை தவிர்ப்பதன் மூலம் செவிலியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படுவதை தடுப்பதுமட்டுமல்லாமல், PPE கிட் போன்ற உபகரணங்களுக்கு செலவிடும் தொகையை தடுக்கலாம் என்கிறது ஸ்டேசிஸ் நிறுவனம்.

புதிதாக உருவாக்கப்பட்டுள்ள இந்த தொலைவில் இருந்து நோயாளியை கண்காணிக்கும் கருவி மூலம், நோயாளிகளின் இதய துடிப்பு, ECG, ரத்தத்தில் உள்ள காற்றின் அளவு, ரத்த அழுத்தம், உடல் வெப்பம் என 6 அளவுகளை மருத்துவர்கள் அறிந்துகொள்ள முடியும்.

அதுமட்டுமல்லாமல், நோயாளிகளுக்கு ஏதேனும் பாதிப்புகள் ஏற்படுவதுபோல் இருந்தால் அவற்றை முன்கூட்டியே மருத்துவர்களுக்கு எச்சரிக்கும் அதிநவீன தொழில்நுட்பமும் இந்த கருவியில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக ஸ்டேசிஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து Stasis Health Pvt Ltd நிறுவனத்தின் இயக்குனர் மருத்துவர் ரோகித் கூறுகையில்,
நோயாளிகளுக்கு ஏற்படவிருக்கும் பாதிப்புகளை முன்கூட்டியே இந்த கருவிகள் தெரிவிப்பதன் மூலம் மருத்துவர்களும் விரைவாக அவர்களுக்கு தேவையான சிகிச்சையை அளிக்க முடியும் என்றார்.

இது குறித்து சுகாதாரத்துறை செயலாளர்  ஜெ. ராதாகிருஷ்ணன் கூறுகையில், இதுபோன்ற அதிநவீன கருவிகள் கண்டுபிடித்து அறிமுகம் செய்திருப்பதன் மூலம், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும்போது, செவிலியர்கள், மருத்துவர்களுக்கு ஏற்படும் தொற்றுகள் குறையும் என்றார். ஓமந்தூரார் மருத்துவமனையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது மகிழ்ச்சியான ஒன்று என்றும் அவர் குறிப்பிட்டார். முன்னதாக இந்த கருவியை வடிவமைத்துக்கொடுத்த ஸ்டேசிஸ் நிறுவனத்துக்கும், மெடிமிக்ஸ் குழும தலைவர் மருத்துவர் அனுப்புக்கும், வின் ஆராய்ச்சி அறக்கட்டளையின் நிறுவனர் வர்ஷா அஷ்வனிக்கும் அவர் நன்றியை தெரிவித்து கொண்டார்.

No comments:

Post a Comment