Featured post

*'A Beautiful Breakup’ Teaser Unveiled – A Haunting Love Story Set for Valentine’s Day 2026

 *'A Beautiful Breakup’ Teaser Unveiled – A Haunting Love Story Set for Valentine’s Day 2026* A Beautiful Breakup is a romantic supernat...

Wednesday, 15 July 2020

30 நடமாடும் மருத்துவ

*30 நடமாடும் மருத்துவ வாகனங்கள் ஜெயின் மிஷன் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில் ஒமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனைக்கு அளிக்கப்பட்டது.*

கொரோனா இல்லாத நகரமாக உருவாக்கும் விதமாக வீடுகளுக்கே சென்று கொரோனா பரிசோதனை செய்யும் அனைத்து வசதிகளுடன் கூடிய 30 நடமாடும் வாகனங்கள் ஜெயின் மிஷன் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில் ஒமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனைக்கு அளிக்கப்பட்டது.

சென்னை தி.நகரில் உள்ள சங்கர்லால் சுந்தேர்பாய் சசுன் ஜெயின் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கொரோனா பரிசோதனை செய்யும் அனைத்து வசதிகளுடன் கூடிய 30 நடமாடும் வாகனங்கள் தமிழக அரசுக்கு அளிக்கப்பட்டன. ஜெயின் மிஷன் அமைப்பு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில் வழங்கப்பட்ட இந்த 30 நடமாடும் மருத்துவ வாகனங்களின் இயக்கத்தை சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் ஆகியோர் கொடியசைத்து தொடங்கிவைத்தனர்.
























நிகழ்ச்சியில் பேசிய சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், மக்கள் தொகை அடர்த்தி அதிகமுள்ள சென்னை மாநகரில், நோய்த்தொற்றினை கட்டுப்படுத்த காய்ச்சல் முகாம்கள் பெரிதளவில் பயனளித்துள்ளதாக கூறினார். இந்நிலையில் அனைத்து வசதிகளும் கொண்ட இந்த நடமாடும் மருத்துவ வாகனங்கள் நோய் தொற்று உள்ளவர்களுக்கு எந்த சிரமமின்றி இந்த வாகனத்தின் மூலம் கொரோனா பரிசோதனையை இலவசமாக செய்துகொள்ளலாம் என்றார்.

தொடர்ந்து பேசிய பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், சென்னையில்  8,16,653 பேர் தனிமைபடுத்தப்பட்டுள்ளதாகவும்
3,80,421 பேர் குணமடைந்துள்ளதாகவும் கூறினார். மேலும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள்  4,24,452 பேர் தற்பொழுது தனிமைபடுத்தப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறினார். நோய் தொற்று ஏற்பட்டவர்கள் சிரமமின்றி பரிசோதித்து சிகிச்சை பெற்றுக்கொள்ள இது போன்ற நடமாடும் வாகனங்கள் உதவியாக இருக்கும் என்றார்.

இந்த நிகழ்ச்சியில் ஜினிஸ்வர் இன்ப்ரா வென்ச்ர்ஸ் நிறுவத்தின் தலைவர் பிரமோத் சோரிடியா, கீழ்பாக்கம் ஜெயின் சங்க துணை தலைவர் கிம்ராஜ் சக்காரியா, மெட்ராஸ் ஸ்டீல் மற்றும் பைப் உரிமையாளர் சங்க தலைவர் நரேந்திர சக்காரியா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment