Featured post

Aaryan Movie Review

  Aaryan Movie Review Aaryan Movie Rating: 4.5/5  ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம aaryan படத்தோட review அ தான் பாக்க போறோம். Vishnu விஷால், செல்வ...

Saturday, 25 July 2020

வனிதா மன்னிப்பு கேட்க வேண்டும் -

வனிதா மன்னிப்பு கேட்க வேண்டும் - தயாரிப்பாளர் சொ.சிவக்குமார் பிள்ளை எச்சரிக்கை

வனிதா விஜயகுமாரின் 3 வது திருமணம் குறித்து பலர் விமர்சித்து வரும் நிலையில், வனிதாவும் இது தொடர்பாக பல பேட்டிகள் கொடுத்து வருகிறார். இதற்கிடையே, சமீபத்திய பேட்டி ஒன்றில், தஞ்சாவூரில் இருக்கும் பெரும்பாலான ஆண்களுக்கு இரண்டு மனைவிகள் இருப்பார்கள், அங்கு இது சாதரண விஷயமாகவே எடுத்துக் கொள்ளப்படும், என்று கூறினார்.



வனிதாவின் இத்தகைய கருத்துக்கு பலர் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், ’ஆடவர்’ திரைப்படத்தின் தயாரிப்பாளரும், மக்கள் செயல் பேரவை தலைவருமான சொ.சிவக்குமார், வனிதாவுக்கு கண்டனம் தெரிவித்ததோடு, தஞ்சை மக்களை இழிவுப்படுத்தும் விதமாக பேசிய நடிகை வனிதா, மன்னிப்பு கேட்க வேண்டும், இல்லை என்றால் அவருக்கு எதிராக மக்களை திரட்டி மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும், என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து சொ.சிவக்குமார் கூறுகையில், “தஞ்சாவூர் என்பது உலக அளவில் வரலாறு நிறைந்த கலாச்சார பின்ணணி கொண்ட மாவட்டம். சமூக அக்கறையை பின்பற்றி வாழக்கூடிய எங்கள் தஞ்சை மக்களை பற்றி எதுவுமே தெரியாமல்

எங்கள் மக்களை அவமான படுத்தக்கூடிய வகையில்
எல்லோரும் இரண்டு மனைவிகள் கட்டுவார்கள், அங்கு போய் பார்த்தாலே தெரியும் என்று ஊடகத்தில் பேட்டி கொடுத்திருக்கும் சகோதரி வனிதா விஜயகுமார் அவர்கள் தஞ்சாவூர் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். இது போன்று தவறான செய்திகளை சொல்லக்கூடாது. கண்டிப்பாக அவர்கள் மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும். இல்லை என்றால் அவருக்கு எதிராக போராட்டம் நடத்தப்படும்.” என்று தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment