Featured post

Aamir Khan launches his latest theatrical superhit film 'Sitaare Zameen Par' on YouTube

 *Aamir Khan launches his latest theatrical superhit film 'Sitaare Zameen Par' on YouTube* In an unprecedented move to democratize c...

Friday, 24 July 2020

ஜுலை. 31 முதல் பத்து இணையதளத்தில் "ஹவாலா " திரைப்படம் |

ஜுலை. 31 முதல் பத்து இணையதளத்தில் "ஹவாலா " திரைப்படம் |

நண்பர்கள் இருவர் நிழல் உலக தாதாக்களாக மாற அதற்கான முயற்சியில் இறங்குகிறார்கள் இருவரும் கடுமையாக அடிதடி மற்றும் துப்பாக்கி கலாசாரத்தில் ஈடுபடுகிறார்கள். அதேசமயம் இருவருக்கும் அழகான காதலிகளும் உண்டு.  அவர்கள் தாதாக்கள் ஆனார்காளா? காதலர்களாக வாழ்ந்தார்களா?
என்பதை முழுநீள ஆக்சனுடன் விடை தாங்கி வரும் படம்தான்  "ஹவாலா". இதில் சீனிவாஸ் கதாநாயகனாகவும் அமித்ராவ் இன்னொரு கதாநாயகனாகவும் நடிக்க , அமுல்யா சஹானா இருவரும் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள். மேலும், இதில் நிழல்கள் ரவி சூரியோதயா, சீனிவாஸ் வசிஷ்டா, பிரவீன்ஷெட்டி, ராஜ்கிருஷ்ணா, ராஜேந்திரநாத், மஞ்சு டைவக்னியா, ரஞ்சன், சிவஷாகுல், குருகவுடா, கமில்ஷேக், இதிதாஸ், வெங்கடேஷ் பாபு, ஜெயக்குமார், ஆகியோர் நடித்துள்ளார்கள்.






உலகெங்கும் தெரிந்த வார்த்தை "ஹவாலா" இந்த பெயரில் வெளிவரும் படத்தை சசிகுமார் பண்டிட் வழங்க, ஆப்பிள்ஸ் அண்ட் பியர்ஸ் பிலிமி மிஸ்டிக்ஸ்  நிறுவனம் சார்பில் பிரவீன் குமார் ஷெட்டி தயாரித்துள்ளார்.. நிழல் உலகத்தில் நடைபெறும் சம்பவங்களை விறுவிறுப்பான கதையாக்கி பரபரப்பான திரைக்கதை அமைத்து அமித் ராவ் இயக்கியுள்ளார். சூரியகாந்தி ஒளிப்பதிவையும், சிவராஜ் மேகு படத்தொகுப்பையும், கிஷோர் எக்ஸா பாடல் எழுதி இசையையும், குன்றத்தூர் பாபு சண்டை பயிற்சியும், பாலாஅகுள் நடனப் பயிற்சியையும், எஸ்பி.செல்வம்- அம்மித் ஆர். கே. இருவரும் வசனத்தையும், ரஞ்சித் தயாரிப்பு நிர்வாகத்தையும் கவனித்துள்ளனர்.

இம்மாதம் 31 (ஜுலை) முதல் "ஹவாலா" திரைப்படம் கீழ்கண்ட பத்து இணையதளத்தில்
HUNGAMAPLAY
MC PLAYER
VODAFONE PLAY
AIRTEL XTREAM
IDEA MOVIES
AMAZON FIRE TV
MI TV
TATA SKY BINGE
V4 STREAM
CARU ORIGINALS
(OTT யில்) உலகெங்கும் வெளிவருகிறது.

OTT-யில் தமிழில் வெளிவரும். முதலாவது முழு நீள ஆக்க்ஷன் படம் " ஹவாலா " என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment