Featured post

Introducing Shruti Haasan from the world of Dulquer Salmaan’s Aakasamlo Oka Tara;

 Introducing Shruti Haasan from the world of Dulquer Salmaan’s Aakasamlo Oka Tara; Presented By Geetha Arts & Swapna Cinema, Produced By...

Thursday, 30 July 2020

சண்டாளி அழகியே பாடல் ஆல்பத்தை

சண்டாளி அழகியே பாடல் ஆல்பத்தை நடிகர் நட்டி வெளியிட்டார்.

அகில் ஆடி நடித்த "சண்டாளி அழகியே " பாடல் வீடியோ ஆல்பத்தை நடிகர் நட்டி வெளியிட, ஆல்பத்தை தயாரித்த திரை நட்சத்திரம் மலர், தொலைக்காட்சி தொடர் வசனகர்த்தா குமரேசன், டி.வி. நடிகர் மோகன், திரைப்பட தயாரிப்பாளரும், திரைப்பட மக்கள் தொடர்பாளர்கள் சங்க தலைவருமான விஜயமுரளி ஆகியோர் முன்னிலையில் திரைப்பட இயக்குனரும் தயாரிப்பாளரும் பெப்சியின் முன்னாள் தலைவருமான பெப்சி சிவா வெளியிட்டார்.

Click here to watch Video: 



































" இந்த பாடலில் நடித்துள்ள அகில் சிறப்பாக நடனமாடி உள்ளார்.முகபாவங்களை கச்சிதமாக வெளிப்படுத்தி உள்ளார். இந்த ஆல்பம் மூலம் இவர் சினிமாவிற்குள் நுழைந்து சாதிப்பார்" என்று நட்டி பாராட்டி வாழ்த்தினார்.

"அகிலுக்கு நடனம் சிறப்பாக வருகிறது. அவருடன் நடித்தவர்கள் மற்றும் இசையமைப்பாளர், இயக்குனர், கேமராமேன் எல்லாரும் அருமையாக அவரவர் வேலையை கனகச்சிதமாக செய்துள்ளார்கள். அனைவருக்கும் வாழ்த்துக்கள். குறிப்பாக அகில் திரை உலகில் நுழையும் காலம் மிக அருகில் உள்ளது" என்று பெப்சி சிவா பாராட்டி பேசினார்.

Video Link:
 https://fromsmash.com/Sandali-Azhagiye

No comments:

Post a Comment