Featured post

வடிவேலு - பகத் பாசில் நடிக்கும் 'மாரீசன்' ஜூலை 25ஆம் தேதி வெளியாகிறது

 *வடிவேலு - பகத் பாசில் நடிக்கும் 'மாரீசன்' ஜூலை 25ஆம் தேதி வெளியாகிறது* தமிழ் திரையுலகின் பிரபல நடிகர்களான வடிவேலு - பகத் பாசில் இர...

Sunday, 12 July 2020

மறைந்த பாடலாசிரியர்

மறைந்த பாடலாசிரியர் நா.முத்துக்குமாரின் பிறந்தநாளையொட்டி அவரின் மகன் ஆதவன் தனது தந்தைக்கு எழுதிய கவிதை


என் தந்தை

என் தந்தை பிறந்த இடம் காஞ்சிபுரம்.

அவர் என் தந்தையாக கிடைத்தது எனது வரம்

என் தந்தையின் பாடல்கள் சொக்கதங்கம்

அவர் எங்கள் காட்டில் சிங்கம்

என் தந்தையின் வரிகள்  முத்து






அவர்தான் எங்களின் சொத்து

என் தந்தை எனக்கு ரொம்ப பிடிக்கும்

அவர் இல்லை என்று நெஞ்சம் சில நேரம் வலிக்கும்

என் தந்தைக்கு என் அம்மா ஒரு அழகிய ரோஜா

எப்பொழுதும் அவர் பாடல்களில் அவர் தான் ராஜா

எனக்கும் என் தங்கைக்கும் நீங்கள் தான் அப்பா

இன்னும் கொஞ்சம் நாள் உயிரோடு இருந்தால் என்ன தப்பா

    மழலை கவிஞர் ஆதவன்  முத்துக்குமார்

No comments:

Post a Comment