Featured post

KRG கண்ணன் ரவியின் தயாரிப்பில் நடனப்புயல் பிரபு தேவா மற்றும் வைகைப் புயல் வடிவேலு நடிக்கும் "பேங் பேங்" (Bang Bang )

 *KRG கண்ணன் ரவியின் தயாரிப்பில் நடனப்புயல்  பிரபு தேவா மற்றும் வைகைப் புயல் வடிவேலு நடிக்கும் "பேங் பேங்" (Bang Bang ) படத்தின் ட...

Wednesday, 22 July 2020

நடிகையும் பாடகியுமான ஸ்ருதி ஹாசன்

நடிகையும் பாடகியுமான ஸ்ருதி ஹாசன், சமூக ஊடகத்தில் தனது ரசிகர்களுடன் உரையாட நிறைய நேரம் செலவிட்டு வருகிறார்.  தற்போது தன்னைப் பற்றி ரசிகர்கள் இன்னும் கூடுதலாகத் தெரிந்து கொள்ள புதிய தளத்தில் காலடி வைக்கிறார்.

ஆரோக்கியம், உடற்பயிற்சி, சமையல்கலை, ஒப்பனை குறிப்புகள் என தனது சமூக ஊடக ரசிகர்களுக்காக செய்து வரும் ஸ்ருதி, தனது இசை சுற்றுப் பயணத்திலிருந்து இதுவரை யாரும் பார்த்திராத காணொலிகளையும், தான் மெட்டமைத்திருக்கும் பாடல்களின் முன்னோட்டங்களையும் தனது யூடியூப் சேனல் வழியாக வெளியிடவிருக்கிறார்.












ஸ்ருதி, பிரிட்டைன் முழுவதும் இசை நிகழ்ச்சிகளுக்காக சுற்றுப் பயணம் செய்துள்ளார். தனது முதல் ஆல்பத்துக்கான வேலைகளிலும் ஓய்வின்றி ஈடுபட்டு வருகிறார். தனது யூடியூப் சேனல் மூலமாக தான் உருவாக்கிய படைப்புகளையும், உலகம் முழுவதும் அவர் மேடையேற்றிய இசை நிகழ்ச்சிகளிலிலிருந்து, பார்த்திராத காணொலிகளையும் வெளியிடவிருக்கிறார்.

"திரைப்படங்கள் மற்றும் இசை என இரண்டு தளங்களிலும் ஸ்ருதி நிறைய செய்து வருகிறார். அதைப் பற்றிய அத்தனை விஷயங்களையும் அவரது ரசிகர்கள் தெரிந்து கொள்ள, யூடியூப் சேனல் என்பது சரியான இடமாக இருக்கும்" என்கின்றனர் ஸ்ருதியின் நண்பர்கள்.

இதைப் பற்றி பேசியிருக்கும் ஸ்ருதி, "சமூக ஊடகத்தில் ரசிகர்களுடன் உரையாடியது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது. தொடர்ந்து இயங்கும் ஒரு யூடியூப் சேனல் தான் அடுத்த சரியான படியாக இருக்கும் என்று நினைக்கிறேன். எனது அசல் படைப்புகள் , எனது இசை நிகழ்ச்சிகளின் காணொலிகள், இசை நிகழ்ச்சிகளுக்கு பின்னால் நடந்த ஏற்பாடுகள் குறித்த காணொலிகள் என அனைத்தும் என் யூடியூப் சேனலில் இருக்கும்" என்கிறார்

https://www.youtube.com/channel/UCymeXH2TJW58p5WcSeyDc3g

No comments:

Post a Comment