Featured post

Nayanthara’s first look as Ganga unveiled from Yash’s Toxic: A Fairytale for Grown-Ups

 Nayanthara’s first look as Ganga unveiled from Yash’s Toxic: A Fairytale for Grown-Ups* As Yash's Toxic: A Fairytale for Grown-Ups inch...

Thursday, 26 November 2020

பாடல்: எங்கள் தலைவன் ஒருவனே

பாடல்: எங்கள் தலைவன் ஒருவனே
தேசியத் தலைவரின் 66வது (26.11.2020) பிறந்தநாளில் இசையமைப்பாளர் உதயன் விக்டரின் இசையில், வசீகரனின் வரிகளில், கனடா நாட்டில் வாழ்கின்ற பாடகர் செந்தூரன் அழகையாவின் குரலில் இன்று வெளியாகின்றது புதிய பாடல் !

பாடலை கேட்க:
பல்லவி:
எங்கள் தலைவன் ஒருவனே
தமிழ் ஈழம் தந்த முருகனே
அன்னைத் தமிழின் அழகனே
பிரபாகரன் எங்கள் முதல்வனே
கார்த்திகை மாதப் புதல்வனே
காலம் தந்த தலைவனே
வல்லமை தந்திடும் சூரியனே
வலிமை பொருந்திய ஆயுதமே
பொங்கிடும் கடலே பிரபாகரன்
தமிழரின் முகமே பிரபாகரன்

சரணம் 1:
கரிகாலன் உங்கள் பெயர் சொல்லி
சொல்லி சொல்லி
எங்கள் வீரநிலம் விளைகிறது
மௌனித்த உங்கள் ஆயுதங்கள்
காத்திகைப் பூவாய் மலர்கிறது
ஐம்பது ஆண்டுகள் ஆண்ட படை - இன்னும்
ஆயிரம் ஆண்டுகள் ஆண்டிடுமே
இளைய தலைமுறைக்கு ஒளிஊட்டி நீ
உலகாளும் தமிழனின் வழிகாட்டி

சரணம் 2:
மாவீரன் உங்கள் புகழ் பாடி
பாடிப் பாடி
எங்கள் தமிழினம் மகிழ்கிறது
வரிப்புலி உங்கள் சாதனைகள்
வரலாற்றில் தேனாய் இனிக்கிறது
முப்படை கட்டியே உயர்ந்தவனே - எங்கள்
பேச்சிலும் மூச்சிலும் வாழ்பவனே
இலட்சியப் போரினை நீ வென்றாய்
உன் பார்வையில் மலர்ந்திடும் தமிழீழம்

இசைமொழி: உதயன் விக்டர்
குரல்மொழி: செந்தூரன் அழகையா
தாய்மொழி: வசீகரன்
காணொளி: எ.எஸ்.துலபன்
ஓளிவீச்சு: மனோதீபன்
தயாரிப்பு - வெளியீடு : வசீகரன் ஆக்கம் தமிழ்
ஏட்டில்: 19.11.2020
வெளியீடு: 26.11.2020

Song name: Engal Thalaivan Oruvane
Music - Udayan Victor
Singer: Senthuran Algaiya
Lyrics: Vaseeharan 
Video: A.S.Thulapan
Editor: Manotheepan
Producer: Vaseeharan Sivalingam 
Music Label: Vaseeharan Creations Tamil 
Released on : 26.11.2020

No comments:

Post a Comment