Featured post

Rajini Gang Movie Review

Rajini Gang Movie Review ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம ரஜினி gang ன்ற படத்தோட review அ தான் பாக்க போறோம். இந்த படத்தை இயக்கி இருக்கிறது  Ramesh...

Sunday, 22 November 2020

ஊடகத் தோழர்களுக்கு வணக்கம்,

 ஊடகத் தோழர்களுக்கு வணக்கம்,


விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் - 2021 சட்ட மன்றத்தேர்தல் பரப்புரை திமுகவின் 15 தலைவர்களுடன் தொடங்குகிறது.


75 நாட்கள்...

15 தலைவர்கள் ....

234 தொகுதிகள் ....

15000+ கூட்டங்கள்...

15,000 கி.மீ பயணம்...

500+ உள்ளூர் நிகழ்வுகள் 

10,00,000+ நேரடி மக்கள் கலந்துரையாடல் 


15 தலைவர்களில் ஒருவராக திரு. கார்த்திகேய சிவசேனாதிபதி அவர்களும் மாநிலம் தழுவிய மாபெரும் பரப்புரை பயணம் மேற்கொள்கிறார்.








கார்த்திகேய சிவசேனாதிபதி என்பவர் முன்னாள் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக நிர்வாக உறுப்பினரும், சல்லிக்கட்டு, நாட்டு மாடுகள் தன்னார்வலரும் ஆவார். இவர் காங்கேயம் மாடுகள் ஆராய்ச்சி மையத் தலைவராக உள்ளார். சல்லிக்கட்டிற்காக ஆவணப்படம் எடுத்தல், வழக்குகளை நடத்துதல், நாட்டு மாடுகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துதல் போன்ற பணிகளைச் செய்து வருகிறார். பல கோடி ரூபாய் செலவு செய்து காங்கேயம் காளைகளின் விந்தணுக்களைச் சேமித்து வைத்திருக்கிறார். 

இவர் 2013ல் மெரினா கடற்கரையில் மிகச்சில நபர்களுடன் இணைந்து சல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்டார். பிறகு 2017 மெரினா புரட்சியில் ஏற்பட்ட மிகப்பெரும் போராட்டத்தில் குறிப்பிடத்தகுந்த பங்கு ஆற்றியவர். தொடர்ந்து மரபு சார்ந்த கால்நடை பாதுகாப்பை உறுதி செய்ய போராடி வருகிறார்.ஜல்லிக்கட்டை தடை செய்யத்துடிக்கும் சக்திகளுக்கு எதிராக தொடர்ந்து களமாடி வருகிறார்.


சாதி எதிர்ப்பு, மாநில சுயாட்சி, பாசிச எதிர்ப்பு, மாநில நலனுக்கான குரலாக சுயமரியாதையுடன் ஒலித்து வருகிறார்...!   தற்பொழுது 2021 விடியலை நோக்கி நிகழ்வின் மூலம் உங்களில் ஒருவராக உங்களுடன் உரையாடவிருக்கிறார்.

No comments:

Post a Comment