Featured post

Teja Sajja Starrer Mirai Crosses 100 Cr Gross Worldwide, Breaches $2 Million Mark In USA

 *Teja Sajja Starrer Mirai Crosses 100 Cr Gross Worldwide, Breaches $2 Million Mark In USA* Teja Sajja is proving true to his super hero ima...

Sunday, 31 January 2021

தன்னைக் கைது செய்த போலீஸை

*தன்னைக் கைது செய்த போலீஸை சிறைப்பிடித்த மன்சூர் அலிகான்! யூ டியூப் ஏரியாவில் பரபரப்பு!!*

 

*கிறங்கடிக்கும் இசையில் 'ஏண்டா என்னப் போட்டு சாவடிக்கிற...' கொல்கத்தா ரசகுல்லாவோடு ஆட்டம்போட்டு சூடேத்தும் மன்சூர் அலிகான்!*










தனது சமூக அக்கறையை, மக்களின் மீது அக்கறை கொள்ளாத ஆட்சியாளர்கள் மீதான கோபத்தை, நம் மண்ணின் வளங்களை அழித்தொழிக்க நினைப்பவர்களுக்கு துணை போகிற அரசின் மீதான கண்டனத்தை பாடல்களாக உருவாக்கி, 'டிப் டாப் தமிழா' யூ டியூப் சேனலில் வெளியிட்டு பரபரப்பு கிளப்பிக் கொண்டிருக்கிறார் மன்சூர்.


அந்த வகையில் ஏற்கனவே வந்த 'வந்தேமாதரம் என்போம்', 'ஏமாத்துறான் ஏமாத்துறான்' என இரண்டு பாடல்கள் வெளியாகி பெரியளவில் வரவேற்பு பெற்றதையடுத்து, மூன்றாவது பாடலை படு ரகளையாக உருவாக்கி வெளியிட்டிருக்கிறார்.


மன்சூர் அலிகானை ஏதோவொரு விஷயத்துக்காக அந்த பெண் போலீஸ் கைது செய்து, லாக்கப்பில் அடைக்கிறாள். மன்சூர் அலிகான் அவளை தன் இதயச் சிறைக்குள் அடைக்கிறார். அந்த லவ் மூடுக்கு ஏற்றபடி ஒரு பாட்டு. 'கைதி - மன்சூர் அலிகான் வெர்சன்' என்பது தான் கான்செப்ட்!  


'ஏண்டா என்னப் போட்டு சாவடிக்கிற..' என்ற அந்த பாடல் செம ஹாட். பாடலில் மன்சூர் அலிகானுடன் தனது டேஞ்சரான, செழிப்பான வளைவு நெளிவுகளைக் காட்டி சூடேற்றுகிறார் மேற்கு வங்காளத்து ரசகுல்லா சுபாங்கி!


பாடல் வரிகள், இசை, நடனம் என ஏற்கனவே வந்த ஆல்பத்தின் அத்தனை அம்சங்களையும் உருவாக்கிய மன்சூர் அலிகானின் அசத்தல் கிரியேடிவிடி, இந்த பாடலிலும் தொடர்கிறது படு கலக்கலாக!


பாடல் குறித்து மன்சூர் அலிகானிடம் கேட்டோம்...


''கடந்த சில வருஷங்களாத்தானே மியூசிக் ஆல்பம்லாம் பண்றாங்க. நான் 94-லேயே 'சிக்குச்சா சிக்குசிக்கு'னு 7 பாடல்கள் கொண்ட ஆல்பம் பண்ணேன். இப்போ ரொம்ப ஃபேமஸா இருக்கிற பாடகி கல்பனா, அந்த பாடல்களை பாடியிருந்தாங்க. 

அது தவிர, நான் இயக்கிய எல்லா படங்களுக்கும் பாடல், இசை எல்லாமே நான்தான். வரவேற்புக்காக பாடல்கள் காட்சிகளை தாறுமாறா அமைச்சாலும் அதுல ஒரு வரியாச்சும் சமூகத்துக்கு கருத்து சொல்ற விதமா இருக்கும். இப்போ ரிலீஸாகியிருக்கிற 'ஏண்டா என்னப் போட்டு சாவடிக்கிற..' பாட்டுலயும் கொரோனாவ இழுத்து விட்டிருக்கேன். பாருங்க உங்களுக்கே புரியும்'' என்கிறார்.


படு சூடான அந்த பாடலைப் பார்த்து ரசிக்க லிங்க்:- https://youtu.be/T4MeK3Ggfkw

No comments:

Post a Comment