Featured post

En Kadhale Movie Review

En Kadhale Movie Review  ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம என் காதலே ன்ற படத்தோட review அ தான் பாக்க போறோம். jayalakshmi கதை எழுதி இந்த படத்தை dire...

Monday, 5 September 2022

6 விருதுகளை தட்டி சென்ற “பண்ணையாரும் பத்மினியும்

 6 விருதுகளை தட்டி சென்ற “பண்ணையாரும் பத்மினியும்”.


சிம்பு நடித்த ‘வானம்’ படத்தை தயாரித்த கணேஷ் M.R தயாரித்த படம் “பண்ணையாரும் பத்மினியும்”. 

எல்லா பாடல்களும் ஹிட்டான இப்படம் சிறந்த விமர்சனங்களையும் பெற்றது. 


2013ம் ஆண்டிற்கான தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகளில் 6விருதுகளை தயாரிப்பாளர் 

கணேஷ் M.R தயாரித்த “பண்ணையாரும் பத்மினியும்” தட்டி சென்றது. 

சிறந்த படம் 3வது பரிசு, 

சிறந்த நடிகர் சிறப்பு பரிசு - 

விஜய் சேதுபதி, 

சிறந்த குணச்சித்திர நடிகர் - ஜெயபிரகாஷ், 

சிறந்த குணச்சித்திர நடிகை - துளசி,

சிறந்த பின்னணி பாடகர் - எஸ்.பி.சரண்,

சிறந்த பின்னணி பாடகி - சந்தியா ஆகியோருக்கு கிடைத்தது. 

 









இப்படத்தை S.U. அருண்குமார் டைரக்ட் செய்திருந்தார். 

இசை அமைத்தவர்

 ஜஸ்டின் பிரபாகரன். 


இதை தொடர்ந்து அரவிந்த்சாமி நடித்து வரும் ‘வணங்காமுடி’ படத்தை தயாரித்து வருகிறார். இதில், சிம்ரன், ரித்திகா சிங், நந்திதா, சாந்தினி மற்றும் பலர் நடித்து வருகிறார்கள். டி.இமான் இசையில், செல்வா டைரக்ட செய்கிறார். 

படபிடிப்பு முடிந்து, இறுதி கட்ட வேலைகள் நடந்து வருகிறது.


விருது பற்றி தயாரிப்பாளர் 

கணேஷ் M.R   கூறும் போது.. 

திரைப்பட கல்லூரியில் படித்து, கதானாயகனாக சில படங்களில் நடித்து அதன் பின்பு தயாரிப்பாளராக முடிவெடுத்தேன். 


நல்ல கதை அம்சம் கொண்ட படங்களை தயாரிக்க வேண்டும் என நினைத்து, பின்பு சிம்புவின் அன்பினால்.. ஆதரவால் நல்ல படமாக..  சிம்பு நடித்த ‘வானம்’ படத்தை எடுத்தேன். 

இதையடுத்து, அனைவரும் பாராட்டிய ‘பண்ணையாரும் பத்மினியும்’ படத்தை எடுத்தேன். 

இப்படத்திற்கு தமிழ்நாடு அரசு திரைப்பட  6 விருதுகள் கிடைத்துள்ளது. நல்ல படங்களுக்கு இப்படி பட்ட விருதுகள் ஒரு எனர்ஜியை கொடுக்கும். விருதுகள் வழங்கிய தமிழக அரசுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன் . நாயகனாக நடித்து எனக்கு  உறுதுணையாக இருந்த விஜய்சேதுபதி அவர்களுக்கு நன்றி. டைரக்டர் அருண்குமார் மற்றும் படத்தில் பங்கு பெற்ற நடிகை நடிகைகள், டெக்னீஷியன் அனைவருக்கும் நன்றி. ஊக்கம் அளித்த பத்திரிகை, ஊடகம் நண்பர்கள் அனைவருக்கும் நன்றி. 


மீண்டும், நல்ல திரைப்படமாக அரவிந்த்சாமி நடிக்கும் ‘வணங்காமுடி’ இறுதிகட்ட  பட வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது. உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி!

No comments:

Post a Comment