Featured post

தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம்

 தமிழ்நாடு  இயல்  இசை  நாடக  மன்றம்  பொங்கல்  கலைவிழா    கலைச்  சங்கமம்  தமிழக அரசால்  1955 ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்ட்ட தமிழ்நாடு சங்கீத நாடக...

Saturday, 24 September 2022

கல்லூரி மாணவிகளுடன் பிறந்த நாளை கொண்டாடிய துருவ் விக்ரம்

 *கல்லூரி மாணவிகளுடன் பிறந்த நாளை கொண்டாடிய துருவ் விக்ரம்*


தமிழ் திரையுலகின் நம்பிக்கை நட்சத்திரமாக வளர்ந்து வரும் இளம் நடிகர் துருவ் விக்ரம், சென்னையில் உள்ள கிறிஸ்துவ மகளிர் கல்லூரியில் 'Battle Fest 2022' என்ற பெயரில் நடைபெற்ற விழாவில், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.






ஒவ்வொரு நட்சத்திர நடிகர்களும் தங்களது பிறந்த நாளை ரசிகர்களுடன் கொண்டாடுவது இயல்பு. இந்த விசயத்தில் மில்லியன் கணக்கிலான ரசிகர்களை கொண்டிருக்கும் இளம் நடிகர் துருவ் விக்ரம், ரசிகைகள் மற்றும் மாணவிகளின் கோரிக்கைகளுக்கு ஏற்ப, பிறந்தநாளான இன்று சென்னை கிறிஸ்தவ மகளிர் கல்லூரியில் நடைபெற்ற 'Battle Fest 2022'  எனும் விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தார்.


அதன் போது, இன்று துருவ் விக்ரமின்  பிறந்த நாள் என்பதை அறிந்த கல்லூரி மாணவிகள், கேக் வெட்டி, அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். 


இதனையடுத்து மாணவிகளின் வேண்டுகோளுக்கிணங்க அவரின் இசையில் வெளியான 'மனசே..' என்ற சுயாதீன இசை ஆல்பப் பாடலை பாடினார். பாடி முடித்ததும் மாணவிகள் கரவொலி எழுப்பி அவரை பாராட்டினர்.


இதனிடையே இன்று சர்வதேச இதய நாள் என்பதாலும், ஏராளமான இதயங்களை வென்ற துருவ் விக்ரமின் பிறந்த நாள் என்பதாலும், அவர் எழுதிய ’மனசே..’ எனும் பாடல் பாடியது பொருத்தமாகயிருந்தது என கல்லூரி மாணவிகள் பாராட்டியதும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment