RAJ TV நெட்வொர்க் RAJ DIGITAL TV APPஐ அறிமுகப்படுத்தியதன் மூலம் டிஜிட்டல் OTT தளத்திற்குள் அடியெடுத்து வைக்கிறது*
ராஜ் தொலைக்காட்சி நெட்வொர்க் (RAJTV) தமிழ், தெலுங்கு மற்றும் பிற மொழித் திரைப்படங்கள் என அருமையான திரைப்படங்களின் தொகுப்புடன் கூடிய முன்னணி தனியார் தொலைக்காட்சிகளில் ஒன்று. ராஜ் டிஜிட்டல் டிவியை அறிமுகப்படுத்தியதன் மூலம் சந்தா அடிப்படையிலான வீடியோ ஆன் டிமாண்ட் சந்தையில் இந்நிறுவனம் நுழைகிறது, மற்ற சந்தா சேவைகளைப் போலவே, இதுவும் Android, iOS மற்றும் இணையத்தில் கிடைக்கும்.
RAJ DIGITAL TV OTT, AIRTEL IQ உடன் தொழில்நுட்பக் கூட்டணி அமைத்துள்ளது. ராஜ் டிஜிட்டல் டிவி OTT ஆனது சிறந்த தொழில்நுட்பத்துடன் Airtel IQ ஆல் உருவாக்கப்பட்டது. ராஜ் டிஜிட்டல் டிவி தமிழ் மொழியில் 1000 க்கும் மேற்பட்ட திரைப்படங்களின் தொகுப்பை வழங்குகிறது,
தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய 4 தென்னிந்திய மொழிகளில் இசை வீடியோக்கள், சுவாரசியமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் நேரடி தொலைக்காட்சி (Live Television) பார்க்கும் வாய்ப்பு ரசிகர்களுக்கு கிடைக்கும், இந்த சேவையின் சந்தாதாரர்களுக்கு தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் தவிர மேலும் பல சுவாரசியமான நிகழ்ச்சிகளும் காத்திருக்கிறது . RAJ DIGITAL TV சந்தாத் திட்டங்கள் தினசரி ரூ.1 என்ற அடிப்படையில் சந்தாதாரர்களுக்கு கிடைக்கும், மேலும் மாதாந்திர அடிப்படையிலும் வருடாந்திர சந்தா திட்டத்திலும் பணம் செலுத்தி பயனாளர்கள் கண்டு களிக்கலாம். மேலும் Airtel Xtream App மூலமாகவும் ராஜ் டிஜிட்டல் டிவி OTTயை பார்த்து மகிழலாம்.
ஏற்கனவே ராஜ் டெலிவிஷன் நெட்வொர்க் லிமிடெட் சேனல்களில் இரண்டு கோடி சந்தாதாரர்கள் இருக்கும் நிலையில் , மேலும் வருவாயை கூட்ட OTT தளமும் உருவாக்கப்பட்டிருக்கிறது, இதனால் அதிகமான சந்தாதாரர்கள் பல்வேறு சேனல் பார்ட்னர்கள் மூலம் இணைக்கப்பட உள்ளனர்.
இந்நிறுவனம் மேலும், கேமிங், RAJ METAVESRE பொழுதுபோக்கு தளங்கள் மற்றும் பொழுதுபோக்கு பிரிவுக்கான கூடுதலாக பணமாக்குதல் தளங்களுக்கு விரிவடைகிறத
No comments:
Post a Comment