Featured post

*A Proud Moment for Vels University (VISTAS) at the 16th Annual Convocation! Held on 12th September 2025 at our Pallavaram campus,

 *A Proud Moment for Vels University (VISTAS) at the 16th Annual Convocation! Held on 12th September 2025 at our Pallavaram campus, the Conv...

Saturday, 24 September 2022

அசோக்செல்வன்- ரித்துவர்மா- அபர்ணா பாலமுரளி- ஷிவாத்மிகா நடிப்பில்

 *அசோக்செல்வன்- ரித்துவர்மா- அபர்ணா பாலமுரளி- ஷிவாத்மிகா நடிப்பில் 'நித்தம் ஒரு வானம்'*


நடிகர் அசோக்செல்வன், தனது சமீபத்திய படங்கள் மூலம் பாக்ஸ் ஆஃபிஸின் வெற்றி நாயகனாக வலம் வந்து கொண்டிருக்கிறார். அந்த வரிசையில் அவரது அடுத்த படம் 'நித்தம் ஒரு வானம்'. இந்த திரைப்படம்  நல்ல உணர்வை தரக்கூடிய ஒரு பயண படமாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை. Ra. கார்த்திக் இயக்கியுள்ள இந்தப் படத்தை ரைஸ் ஈஸ்ட் ஸ்ரீநிதி சாகர், Viacom 18 ஸ்டுடியோஸ்ஸூடன் இணைந்து தயாரித்துள்ளது. 

























படம் குறித்து இயக்குநர் பேசுகையில், "நம்முடைய தமிழ் சினிமாவை பொறுத்தவரை இது போன்ற பயணம் தொடர்பான படங்கள் அரிதாகதான் வரும். 'நித்தம் ஒரு வானம்' நிச்சயம் நல்ல உணர்வைத் தரக்கூடிய படமாக இருக்கும். மூன்று வித்தியாசமான நிலபரப்பில் மூன்று வித்தியாசமான உணர்வுகளை இதில் கொடுத்திருக்கிறோம். இந்தப் படத்தில் நிறைய கதாநாயகிகள் இருந்தாலும் , இது ஒரு காதல் கதை போன்ற தோற்றத்தைக் கொடுத்தாலும் இதை எல்லாம் தாண்டி நம் வாழ்வின் தருணங்களை கொண்டாடும் வகையில் 'நித்தம் ஒரு வானம்' இருக்கும். 


அசோக்செல்வன் தன்னுடைய சிறப்பான நடிப்பை இந்தப் படத்தில் கொடுத்திருக்கிறார். இந்தப் படத்தின் கதாநாயகிகளான ரித்து வர்மா, அபர்ணா பாலமுரளி மற்றும் ஷிவாத்மிகா ராஜ்சேகர் மூவருக்கும் சமமான கதாபாத்திரம் கதையில் கொடுக்கப்பட்டுள்ளது. மூவரும் அதை சிறப்பாக செய்துள்ளனர்.  இவர்களது கதாபாத்திரம் அனைத்து வயதில் உள்ள பெண்களுக்கும் நிச்சயம் பிடிக்கும்" என்றார். 


மேலும் இந்தப் படம் குறித்து இயக்குநர் பேசுகையில், "நிறைய பாசிட்டிவான விஷயங்களை படத்தில் சேர்த்துள்ளோம். எப்போதெல்லாம் நாம் சோர்வாகவோ அல்லது மன அழுத்தமாகவோ உணர்கிறோமோ அப்போது  பயணம் செல்வது நம்முடைய எண்ணங்களை நேர்மறையாக்கும். கொரோனாவால் கடந்த இரண்டு ஆண்டுகளாக வீட்டுச் சுவருக்குள் அடைந்து கிடக்கும் நமக்கு ஃபீல் குட் படங்கள் பெரும் உறுதுணையாக அமைந்திருக்கிறது.  திரையரங்குகளுக்கு படம் பார்க்க வரும் பார்வையாளர்கள் படம் முடித்து வெளியேறும் போது புத்துணர்ச்சியோடும் புன்னகையோடும் வெளியேற வேண்டும் என்ற எண்ணத்தோடுதான் 'நித்தம் ஒரு வான'த்தை உருவாக்கியுள்ளோம்" என்கிறார் உற்சாகமாக. 


'நித்தம் ஒரு வானம்' திரைப்படம் மூன்று வித்தியாசமான காலக்கட்டம் மற்றும் நிலப்பரப்புகளில் அதாவது சென்னை, சண்டிகர், மணாலி, கோபிச்செட்டிப்பாளையம் மற்றும் கொல்கத்தா ஆகிய இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது.  


*படத்தின் தொழில்நுட்பக் குழு விவரம்:*


இசையமைப்பாளர்: கோபி சுந்தர்,

ஒளிப்பதிவு: விது அய்யனா,

எடிட்டிங்: ஆண்டனி, 

கலை: கமல் நாதன்,

பாடலாசிரியர்: கிருத்திகா நெல்சன்,

நடன இயக்குநர்: லீலாவதி குமார்,

நிர்வாகத் தயாரிப்பு: S. வினோத் குமார்,

ஒலிக்கலவை: T. உதயகுமார்,

உடை வடிவமைப்பாளர்: நவதேவி ராஜ்குமார்,

சண்டை பயிற்சி: விக்கி,

படங்கள்: ஷேக்,

மக்கள் தொடர்பு: சுரேஷ் சந்திரா, ரேகா (D'One),

விளம்பர வடிவமைப்பு: ஏஸ்தெடிக் குஞ்சம்மா,

ப்ரொடக்‌ஷன் எக்ஸிகியூட்டிவ்: G கண்ணன்,

நிர்வாகக் கட்டுப்பாடு: மோகன் கணேசன்,

விஷூவல் புரோமோஷன்ஸ்: Feed Of Wolf

No comments:

Post a Comment