Featured post

Stone Bench Films & Zee Studios South in association with Invenio Origin present

 *Stone Bench Films & Zee Studios South in association with Invenio Origin present, Hari directorial, Actor Vishal starrer 'Rathnam&...

Friday 2 September 2022

வரும் ஞாயிற்றுக்கிழமை நகைச்சுவை நிறைந்த

 வரும் ஞாயிற்றுக்கிழமை நகைச்சுவை நிறைந்த

அறிவியல் புனைகதை திரைப்படம் ‘கூகுள் குட்டப்பா’:

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது

 

~செப்டம்பர் 4–ந்தேதி மதியம் 2 மணிக்கு கலர்ஸ் தமிழை டியூன் செய்யுங்கள் படத்தை பார்த்து மகிழுங்கள்

மனிதர்கள் மற்றும் தொழில்நுட்பத்துடன் நகைச்சுவை நிறைந்த திரைப்படமான ‘கூகுள் குட்டப்பா’ திரைப்படம் வரும் 4–ந்தேதி ஞாயிற்றுக்கிழமை மதியம் 2 மணிக்கு கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிரப்பாகிறது. அறிவியல் புனைக்கதையான இந்த படம் மனைவியை இழந்த கே.எஸ். ரவிகுமார், ரோபோவுடன் எப்படி அன்பான உறவை வளர்த்துக் கொள்கிறார் என்பதைப் பற்றியதாகும். மனிதர்களும் ரோபோக்களும் ஒன்றாக இணைந்து வாழ்வதையும் அதனால் ஏற்படும் மகிழ்ச்சியையும் காண இந்த ஞாயிறு மதியம் 2 மணிக்கு கலர்ஸ் தமிழை டியூன் செய்யுங்கள்; படத்தை பார்த்து மகிழுங்கள்.




இந்த படத்தை புதிய இயக்குனர் சபரி சரவணன் இயக்கி உள்ளார். இதில் நடிகரும் இயக்குனருமான கே.எஸ். ரவிகுமார், அவருடன் நடிகர்கள் தர்ஷன் தியாகராஜா, லாஸ்லியா மரியநேசன் மற்றும் முக்கிய கதாபாத்திரத்தில் யோகி பாபா, நடிகை பவித்ரா லோகேஷ் மற்றும் சுரேஷ் சந்திர மேனன் மற்றும் நடிகர் ஆர். பார்த்திபன் ஆகியோர் நடித்துள்ளனர்.  

ஒரு ரோபோ பொறியியல் பட்டதாரியான தனது மகன் ஆதித்யாவுடன் (தர்ஷன்) முழு நேரத்தையும் செலவிட விரும்பும் உறுதியான பழமைவாத நிறைந்த மனைவியை இழந்த சுப்ரமணியை (கே.எஸ். ரவிக்குமார்) சுற்றி இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது. ஜெர்மனியில் உள்ள ஒரு ரோபோட்டிக்ஸ் நிறுவனத்தில் பணிபுரிய அவரது மகனுக்கு வேலை கிடைக்கும்போது, அதை சுப்ரமணி எதிர்க்கிறார். இந்த நிலையில் சுப்ரமணியின் வெறுப்பான மனப்பான்மை காரணமாக, அவரை கவனித்துக் கொள்ள நியமிக்கப்பட்டவர்கள் யாரும் நீண்ட காலம் அந்த பணியில் நீடிக்கவில்லை. இதனைத் தொடர்ந்து இறுதியில் ஆதித்யா தனது தந்தையை கவனித்துக் கொள்வதற்காக ஒரு முன்மாதிரி ரோபோவான கூகுள் குட்டப்பாவை வீட்டிற்கு அழைத்து வருகிறார்.

ஆரம்பத்தில் கூகுள் குட்டப்பாவை பிடிக்காத சுப்ரமணி இறுதியில் அதை விரும்பத் தொடங்குகிறார், ஒரு கட்டத்தில், அதை தனது சொந்த மகனாகக் கருதி அதன் மீது பாசம் காட்டுகிறார். இந்த நிலையில் ரோபோவால் ஏற்படும் ஆபத்துகளை அறிந்த ஆதித்யா, அது குறித்து பயந்து, வீட்டிற்குத் திரும்பி வந்து தனது தந்தையை எச்சரிக்கிறார். ஆனால் அதை அவர் ஏற்கவில்லை. ரோபோவினால் ஏற்படும் ஆபத்து குறித்து சுப்ரமணிக்கு புரிகிறதா? அதை அவர் என்ன செய்கிறார் என்பதே இப்படத்தின் மீதி கதையாகும்.

இது குறித்து இயக்குனர் சபரி சரவணன் கூறுகையில், எனது முதல் படமான கூகுள் குட்டப்பா, பிரபல சேனலான கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இந்தப் படத்தில் நான் சொல்லியிருப்பது என்னவென்றால், அதிகப்படியான ஒன்று ஆபத்தானது என்பதாகும். எனவே இயந்திரங்கள் நம் வசதிக்காக இருந்தாலும், அவை மோசமான விளைவுகளையும் கொண்டு வரக்கூடும். மேலும், ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குப் பிறகு முதியவர்கள் அனுபவிக்கும் உணர்ச்சிகளை நான் இந்தப் படத்தில் தெரிவித்திருப்பதோடு, மேலும் அவர்கள் தனியாக இருக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் என்பதையும் வலியுறுத்தி உள்ளேன். என்னை நம்பி இந்த படத்தைத் தயாரித்ததற்காக கே.எஸ்.ரவிக்குமாருக்கு நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். மேலும் இந்தப் படத்தை வெற்றியடையச் செய்த எங்கள் நடிகர்கள் மற்றும் குழுவினருக்கு நான் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். வார இறுதி நாளில் ஒளிபரப்பாக உள்ள இந்த படத்தை குடும்பத்துடன் பார்த்து மகிழுங்கள் என்று தெரிவித்தார்.

இது குறித்து கே.எஸ். ரவிகுமார் கூறுகையில், நான் நடிக்கும் வழக்கமான கதாபாத்திரங்களைத் தவிர்த்து ஒரு வித்தியாசமான வேடத்தில் இந்த படத்தில் நடித்தது மிகவும் அருமையாக இருந்தது. கோபமான கதாபாத்திரத்தில் நான் நடிப்பது என்பது புதிதல்ல என்றாலும், தனிமைக்கு பயந்து தன் குழந்தை மீது கோபத்தைக் காட்டும் கதாபாத்திரத்தில் நடிப்பது அவ்வளவு சுலபம் இல்லை. கதையும் செய்தியும் சிதைந்துவிடக் கூடாது என்ற உறுதியுடன் சுப்ரமணியாக இந்தப் படத்தில் நடித்துள்ளேன். எனவே இந்த வார இறுதியில் கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகும் இந்த படத்தை குடும்பத்துடன் பார்த்து மகிழ்ச்சியாக பொழுதைப் போக்குங்கள் என்று தெரிவித்தார்.

கூகுள் குட்டப்பாவுடன் வார இறுதி நாளை மகிழ்ச்சியாக அனுபவியுங்கள். ஞாயிறு மதியம் 2 மணிக்கு கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியை டியூன் செய்யுங்கள் படத்தை பார்த்து மகிழுங்கள்.

No comments:

Post a Comment