Featured post

When the Master Filmmaker Mani Ratnam Applauded the Young "18 Miles" Team

 *When the Master Filmmaker Mani Ratnam Applauded the Young "18 Miles" Team* Over the past few weeks, the poignant love story of 1...

Thursday, 29 September 2022

ஆஹா தமிழுடன் இயக்குநர் வெற்றிமாறன் இணைந்திருக்கும் 'பேட்டைக்காளி' தீபாவளிக்கு வெளியாகிறது

 *ஆஹா தமிழுடன் இயக்குநர் வெற்றிமாறன் இணைந்திருக்கும் 'பேட்டைக்காளி' தீபாவளிக்கு வெளியாகிறது* (vetrimaran pettaikili)

சென்னை (செப்டம்பர் 28, 2022): ஆஹா தமிழுடன்  இயக்குநர் வெற்றிமாறன் இணைந்திருக்கும் 'பேட்டைக்காளி' படத்தின் மோஷன் போஸ்டருக்கான முதல் பார்வை இன்று வெளியிடப்பட்டுள்ளது. 'ஜல்லிக்கட்டு' உலகத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்படும் முதல் வெப் சீரிஸ் இது என்பது குறிப்பிடத்தக்கது. 


தனித்துவமான கதைகள் மற்றும் ஒரிஜினல் கண்டெண்ட் என்ற அடிப்படையில் பல அசத்தலான படைப்புகளை பார்வையாளர்களுக்கு கொண்டு சேர்க்கும் ஆஹா தமிழின் அடுத்த படைப்பான 'பேட்டைக்காளி', ஜல்லிக்கட்டு கதையை அடிப்படையாகக் கொண்டது. 


சமகால தமிழ் சினிமாவில் கவனிக்கத்த இயக்குநர்களில் ஒருவரான  வெற்றிமாறன் படைப்பாக வரும் இந்த இணைய தொடரில் மக்கள் இதற்கு முன்பு பார்த்திராத ஒரு ஜல்லிக்கட்டு உலகத்தை பார்ப்பார்கள். ஏற்கனவே 'பேட்டைக்காளி' என்ற இந்தத் தலைப்பு, பார்வையாளர்காளிடையே 'யாரந்த பேட்டைக்காளி' என்ற ஆர்வத்தை உருவாக்கி உள்ளது. 


இந்த இணையத் தொடர், நல்ல கதையம்சத்துடன் கூடிய நடிகர்கள் மற்ற தொழில்நுட்பக் குழுவை கொண்டது. இயக்குநர் வெற்றிமாறன் இதன் ஷோ-ரன்னராக இருந்தாலும் 'பேட்டைக்காளி' படத்தை வெற்றிமாறனின் நீண்ட கால உதவி இயக்குநரான ராஜ்குமார் இயக்கி உள்ளார். படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார், வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். 


படத்தின் மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழு குறித்தான விவரம் விரைவில் வெளியிடப்படும். 


*ஆஹா தமிழ் பற்றி:*


தமிழ் பார்வையாளர்களுக்கு ஏற்றது போல, 100%  எண்டர்டெயின்மண்ட் கண்டெண்ட் தருவதை ஆஹா தமிழ் தனது தெளிவான நோக்கமாகக் கொண்டுள்ளது. 'ஆகாஷ்வாணி', 'அம்முச்சி2', 'குத்துக்கு பத்து' மற்றும் பல நல்ல கதையம்சம் கொண்ட படங்கள் மற்றும் வெப் சீரிஸ் போன்றவை வெளியாக இருக்கிறது. திரையரங்குகளில் வெளியாகி வெற்றி பெற்ற 'டைரி', 'மன்மதலீலை', 'மாமனிதன்' மற்றும் 'ஜீவி2' போன்ற பல சரியான கதைகளை மக்களின் இல்லங்களிலும் கொண்டு போய் சேர்க்கும் முனைப்பையும் காட்டி வருகிறது. 


ஆஹா தமிழில் அடுத்து வர இருக்கும் 'Mad Company' -ம் அடுத்து பார்வையாளர்களின் எதிர்ப்பார்ப்பையும் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

No comments:

Post a Comment