Featured post

Shanthi Talkies Announces “Production No. 4” Starring Finally Bhaarath & Saanve Megghana

 *Shanthi Talkies Announces “Production No. 4” Starring Finally Bhaarath &  Saanve Megghana* Shanthi Talkies, led by the enterprising pr...

Wednesday, 14 September 2022

சினம்’ இயக்குநர் குமரவேலன்: ‘எமோஷன்ஸ், த்ரில்லர் என

 ’சினம்’ இயக்குநர் குமரவேலன்: ‘எமோஷன்ஸ், த்ரில்லர் என அனைத்து தரப்பினருக்கும் படம் பிடிக்கும்!’


GNR குமரவேலன் இயக்கத்தில், மூவி ஸ்லைட்ஸ் பிரைவேட் லிமிட்டட் விஜயகுமார் தயாரிப்பில் அருண் விஜய் நடித்திருக்கும் படம் ‘சினம்’. படத்தில் இருந்து வெளியாகி வெற்றி பெற்ற பாடல்கள், அட்டகாசமான பட புரோமோக்கள் என மக்கள் மத்தியில் படத்திற்கு எதிர்ப்பார்ப்பு உள்ளது. செப்டம்பர் 16ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் இந்த படத்தில் அருண் விஜய் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.  






எமோஷனல் த்ரில்லராக உருவாகி இருக்கும் இந்த படத்தின் அனுபவம் குறித்து இயக்குநர் குமரவேலன் பகிர்ந்து கொண்டதாவது, “’சினம்’ படம் உருவாக்கம் மற்றும் கதையில் நிறைய எமோஷன்கள் இருக்கும். இது கதைக்கும் மிக சரியாக பொருந்தி போகும். ‘ஹரிதாஸ்’ படத்திற்கு பிறகு அருண் விஜய் என்னுடைய வேலையை பாராட்டி, அடுத்து என்னுடன் பணிபுரிய விருப்பம் தெரிவித்தார். ஆனால், அதற்குள் அவர் மற்ற படங்களின் வேலைகளில் பிஸியாகி விட்டார். நானும் ‘வாகா’ படத்திற்குள் போய் விட்டேன். இதெல்லாம் முடித்து விட்டு அடுத்து இருவரும் ‘சினம்’ படத்திற்காக ஒன்றிணைந்தோம். இந்த படம் எங்கள் குழுவில் எல்லாருக்கும் திருப்தி அளிக்கும்படி நன்றாக வந்திருக்கிறது”.


‘சினம்’ கதைக்கான ஆரம்பப்புள்ளி என்ன என்பது குறித்து கேட்ட போது, “’வாகா’ படத்திற்கு பிறகு என்னுடைய பலம் என்ன என்பது தெரியாமல், ஒரு தெளிவற்ற நிலையிலேயே இருந்தேன். அந்த சமயத்தில் தான் என் தந்தை, என் முந்தைய படமான ‘ஹரிதாஸ்’ஸை குறிப்பிட்டு, அதில் இருக்கும் ‘எமோஷன்ஸ்’ தான் என்னுடைய ப்ளஸ் என்றார். அதில் இருந்து தான் ‘சினம்’ படத்தின் பயணம் ஆரம்பித்தது. த்ரில்லர் மற்றும் எமோஷன்ஸ் என அனைத்தும் கலந்த மக்களுக்கு பிடித்த வகையிலான எண்டர்டெயினர் படமாக நிச்சயம் ‘சினம்’ இருக்கும்.  அனைத்து தரப்பு ரசிகர்களும் எதாவது ஒரு வகையில் இந்த படத்தை தங்களது வாழ்க்கையோடு கனெக்ட் செய்வார்கள்” என்று மகிழ்ச்சியோடு பகிர்ந்து கொண்டார். 


மூவிஸ் ஸ்லைட்ஸ் ப்ரைவேட் லிமிட்டட் ஆர். விஜயகுமார் தயாரிப்பில், GNR குமரவேலன் இயக்கி இருக்கும் படம் ‘சினம்’. அருண் விஜய், பாலக் லால்வானி, காளி வெங்கட், RNR மனோகர், KSG வெங்கடேஷ், மறுமலர்ச்சி பாரதி என ஏராளமான நட்சத்திர பட்டாளம் இந்த படத்தில் நடித்திருக்கிறார்கள். 


*படத்தின் தொழில்நுட்ப குழு விவரம்*:


இசை                 - ஷபீர் தபேரே ஆலம்,

ஒளிப்பதிவாளர்        - கோபிநாத்,

கலை                 - மைக்கேல் BFA,

கதை, வசனம்          - ஆர். சரவணன்,

ஆடை வடிவமைப்பாளர் - ஆர்த்தி அருண், 

பாடல் வரிகள்         - கார்கி, ஏக்நாத், ப்ரியன், தமிழணங்கு

DI & VFX                           - நாக் ஸ்டுடியோஸ் (Knack Studios),

சண்டை பயிற்சி        - ’ஸ்டண்ட்’ சில்வா,

மக்கள் தொடர்பு        - சுரேஷ் சந்திரா, ரேகா (D’One)

No comments:

Post a Comment