Featured post

Pre-release Event of Ameer Starring

Pre-release Event of Ameer Starring UyirThamizukku Movie* Moon Pictures presents 'UyirThamizukku,' a political drama helmed by debut...

Thursday 22 September 2022

சத்ய ஜோதி பிலிம்ஸ் T.G. தியாகராஜன் வழங்கும், இயக்குநர் அருண்

 சத்ய ஜோதி பிலிம்ஸ் T.G. தியாகராஜன் வழங்கும்,  இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், நடிகர் தனுஷ் நடிக்கும், ‘கேப்டன் மில்லர்’ படம் பூஜையுடன் இனிதே துவங்கியது!!!


சென்னை (செப்டம்பர் 22, 2022): சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம், தனுஷ் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகும் “கேப்டன் மில்லர்”  திரைப்படம், படக்குழுவினர் கலந்துகொள்ள  பூஜையுடன் இனிதே துவங்கியது. 






கேப்டன் மில்லர்  படம் அறிவிக்கப்பட்டது முதலே ரசிகர்களிடம் மிகப்பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதன் ஃபர்ஸ்ட்லுக் மோஷன் போஸ்டர், வீடியோ திரையுலகில் மிகப்பெரும் அலையை ஏற்படுத்தியது.  இந்நிலையில் தமிழ் திரையுலகில் பிரமாண்டமாக,  திரையுலக பிரபலங்கள் மற்றும் படக்குழுவினர் கலந்துகொள்ள, பூஜையுடன் இன்று இனிதே துவங்கியது.  இப்படத்தின் படப்பிடிப்பு குறித்தான அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். 


இப்படத்தில் கதாநாயகனாக தனுஷ் நடிக்க பிரியங்கா அருள் மோகன் கதாநாயகியாக நடிக்கின்றார். பிரபல தெலுங்கு நடிகர் சந்தீப் கிஷன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். இவர்களுடன் ஜான் கொக்கன், நிவேதிதா சதீஷ், குமரவேல், டேனியல் பாலாஜி, மூர், நாசர், விஜி சந்திரசேகர், சுவயம்சிதா தாஸ், பிந்து, அருணோதயன், "மேற்குத்தொடர்ச்சிமலை" ஆண்டனி, பால சரவணன் மற்றும் சில முக்கிய நடிகர்கள் இணைந்து நடிக்கின்றனர்.


ஜிவி பிரகாஷ் குமார் (இசை), மதன் கார்க்கி (வசனம்), ஸ்ரேயாஸ் கிருஷ்ணா (ஒளிப்பதிவு), நாகூரன் (எடிட்டர்), T. ராமலிங்கம் (கலை), பூர்ணிமா ராமசாமி & காவ்யா ஸ்ரீராம் (ஆடை வடிவமைப்பு), திலீப் சுப்பராயன் (ஆக்சன்), ட்யூனி ஜான் 24am (பப்ளிசிட்டி டிசைனிங்) ஆகியோர் தொழில்நுட்பக் குழுவில் பணியாற்றுகின்றனர். 


“கேப்டன் மில்லர்”  படத்தினை சத்யஜோதி பிலிம்ஸ் T.G.தியாகராஜன் வழங்குகிறார் செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன் தயாரிக்கின்றனர். இப்படத்தை G.சரவணன் மற்றும் சாய் சித்தார்த் இணை தயாரிப்பு செய்கின்றனர். பெரும் பாராட்டுக்களை குவித்த “ராக்கி, சாணிகாயிதம்” படங்கள் மூலம் புகழ்பெற்ற அருண் மாதேஸ்வரன் இப்படத்தை இயக்குகிறார். 

 

கேப்டன் மில்லர் 1930-40 காலகட்டத்தை பின்னணியாகக் கொண்ட ஒரு வரலாற்று திரைப்படமாகும். மேலும் இப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியிடப்படவுள்ளது.

No comments:

Post a Comment