Featured post

Aamir Khan launches his latest theatrical superhit film 'Sitaare Zameen Par' on YouTube

 *Aamir Khan launches his latest theatrical superhit film 'Sitaare Zameen Par' on YouTube* In an unprecedented move to democratize c...

Friday, 29 March 2019

சைதன்யா சினி கிரியேஷன்ஸ் தயாரிப்பில், நஸ்ரேன் சாம் எழுதி, இயக்கும் “நிக்கிரகன்”



சைதன்யா சினி கிரியேஷன்ஸ் சார்பாக, சைதன்யா சங்கரன் தயாரிக்க, அறிமுக இயக்குனர் நஸ்ரேன் சாம் இயக்கத்தில் பிரசாந்த்தாவீத் , கனி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.



இரு கல்லூரி மாணவர்கள், பகுதி நேர வேலையாக ரேடியோ ஜாக்கியாக ஒரு எஃப் எம் சேனலில் வேலை பார்க்கிறார்கள். அவர்கள் வழங்கும் ஒரு புதுமையான, கலகலப்பான நிகழ்ச்சியின் மூலம் அனைத்து தரப்பு மக்களையும் கவர்கின்றனர். பின்னர் அதையே முழுநேர வேலையாகவும் மாற்றிக் கொண்டுவிட, வேடிக்கையாக சென்று கொண்டிருக்கும் வாழ்க்கை, அவர்களே அறியாத வண்ணம் தடம் மாறுகிறது. இணையத்தில் மறைந்துள்ள ஆபத்துகள் என்னென்ன, அதில் சிக்கிக்கொண்ட அவர்கள் அதிலிருந்து எப்படி மீள்கிறார்கள் என்பதே இப்படத்தின் கதைக்களம். 

நம் அன்றாட வாழ்வில் கடந்து வருகின்ற, சற்றே முக்கியத்துவமற்ற நிகழ்வுகள் போல தோன்றும் ஒரு விஷயம், ஒரு மனிதனின் வாழ்வையே மாற்றிப் போடும் வல்லமை படைத்தது என்பதை இத்திரைப்படம் ஜனரஞ்சகமான காட்சி அமைப்புகளுடன், சரி விகிதத்தில் திகிலும் கலந்து விருந்தாக்குகிறது.  

அரவிந்த் ஜே ஒளிப்பதிவு பொறுப்புகளை ஏற்றுக்கொள்ள, இசை அமைப்பாளராக சனாதன் அறிமுகமாகிறார். 

நட்சத்திரங்களும் தொழிட்நுட்ப கலைஞர்களும்:
முக்கிய வேடங்களில்: பிரஷாந்த் தாவேத், கனி மற்றும் பலர் 
தயாரிப்பு: சைதன்யா சங்கரன் 
படத்தொகுப்பு: வினோத் ஜாக்சன் & ஷாஹித்
ஒளிப்பதிவு: அரவிந்த் ஜே
இசை: சனாதன்
எழுதும் இயக்கமும்: நஸ்ரேன் சாம்

No comments:

Post a Comment