Featured post

Karuppu Pulsar Tamil Movie Review

 Karuppu Pulsar Movie Review ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம  karuppu pulsar படத்தோட review அ தான் பாக்க போறோம். இந்த படத்தை இயக்கி இருக்கிறது mu...

Thursday, 21 March 2019

நடிகர் சிவகுமார் வெளியிட்ட பிலிம் நியூஸ் ஆனந்தனின் 'ஞாபகம் வருதே' நினைவலைகள் நூல்!






 பிலிம் நியூஸ் ஆனந்தனின் 'ஞாபகம் வருதே ' நூல் வெளியீட்டு நிகழ்வு!

தென் இந்தியாவின் முதல் மக்கள் தொடர்பாளரும் தமிழ்த் திரையுலகத் தகவல் களஞ்சியமுமான பிலிம் நியூஸ் ஆனந்தன் அவர்களின் நினைவு நாளான இன்று  அவரைப் பற்றிய பல்வேறு பிரமுகர்களின் அனுபவ நினைவுகளைக் கொண்டு அருள்செல்வன் தொகுத்துள்ள  'ஞாபகம் வருதே'  நினைவலைகள் நூல் வெளியீட்டு நிகழ்வு  இன்று நடிகர் சிவகுமார் அவர்களின் இல்லத்தில் வித்தியாசமான முறையில் நடைபெற்றது .
நூலை நடிகர் சிவகுமார் வெளியிட இயக்குநர் ஞான ராஜசேகரன் ஐ.ஏ.எஸ். பெற்றுக்கொண்டார்.

 இந்நிகழ்வில் மூத்த பத்திரிகையாளர்கள் சலன் , மக்கள் குரல் ராம்ஜி , திரைப் பட இயக்குநர் ஓவியர் ஏ.பி .ஸ்ரீதர் , பிலிம் நியூஸ் ஆனந்தனின் மகன் மக்கள் தொடர்பாளர் டைமண்ட் பாபு , பி.ஆர்.ஓ. யூனியன் தலைவர் விஜயமுரளி ஆகியோர்  கலந்து கொண்டனர்.

நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் பிலிம் நியூஸ் ஆனந்தனுக்கும் தமக்கும் உள்ள நட்புறவு பற்றியும் நூலைப் பற்றியும் கலந்துரையாடினார்கள்.

No comments:

Post a Comment