Featured post

Pottuvil Asmin Recites Tribute Poem Before Vairamuthu at “Miller” Film Launch in Jaffna

 Pottuvil Asmin Recites Tribute Poem Before Vairamuthu at “Miller” Film Launch in Jaffna The launch of the Tamil film “Miller” in Jaffna wit...

Tuesday, 19 November 2019

அகில இந்திய ஜெய்வந்த் நற்பணி இயக்கத்தின் நிறுவனத்தலைவர் ஜெய்வந்த் படங்கொண்ட தனிப்பயனாக்க தபால்தலைகளை வெளியிட்ட அமைச்சர்


தமிழக அமைச்சர் கடம்பூர் ராஜூ அகில இந்திய ஜெய்வந்த் நற்பணி இயக்கத்தின் நிறுவனத்தலைவர் ஜெய்வந்த்  படங்கொண்ட  தனிப்பயனாக்க தபால்தலைகளை வெளியிட்டார்


தமிழக அரசின் செய்தி விளம்பரத்துறை மற்றும் தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சர் திரு. கடம்பூர் ராஜூ, அகில இந்திய ஜெய்வந்த் நற்பணி இயக்கத்தின் நிறுவனத்தலைவர் ஜெய்வந்த்  படங்கொண்டத் தனிப்பயனாக்கத் தபால்தலைகளை சென்னையில் வெளியிட, அதனை ஜெய்வந்த் பெற்றுக்கொண்டார்.


இந்தியாவில் முதன்முறையாக கடந்த 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக தபால்தலை கண்காட்சியின் போது தான், ‘மை ஸ்டாம்ப்’ என்றழைக்கப்படும் தனிப்பயனாக்க தபால் தலைகள் அறிமுகப்படுத்தப்பட்டன.


தனிப்பட்ட புகைப்படம் மற்றும் நிறுவனங்களின் அடையாளச் சின்னங்களின் சிறுபடம் (LOGO) அல்லது கலைப்படைப்புகள், பாரம்பரிய கட்டிடங்கள், பிரபலமான சுற்றுலா தலங்கள், வரலாற்று நகரங்கள், வனவிலங்குகள், பிற விலங்குகள் மற்றும் பறவைகள் போன்றவற்றின் படங்களை தேர்ந்தெடுக்கப்பட்ட வார்ப்புருத்தாளில் அச்சிடுவதன் மூலம் தபால் தலைகள் தனிப்பயனாக்கம் பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment