Featured post

Kadukka Movie Review

 Kadukka Movie Review  ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம kadukka  ன்ற படத்தோட review அ தான் பாக்க போறோம். S.S.Murugarasu தான் இந்த படத்தை இயக்கி இர...

Thursday, 21 November 2019

இமான் இசையில் பாடிய நகாஷ் அஷிஸ் மற்றும் மிர்ச்சி விஜய்


வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் கச்சிதமான முறையில் திட்டமிட்டு, அதற்கு முறையான செயல்வடிவம் கொடுத்து, 2019 ஆம் ஆண்டு தனது ஒவ்வொரு தயாரிப்பிலும் தொடர்ந்து வெற்றிகளைக் குவித்து வருகிறது. அடுத்து வரும் மாதங்களில் இந்த நிறுவனத் தயாரிப்புகள் வரிசையாக வெளிவர இருக்கின்றன. இவற்றி்ல் ரத்தினசிவா இயக்கத்தல் ஜீவா நடித்த 'சீறு' படமும் ஒன்று. நகைச்சுவை, காதல், சென்டிமெண்ட், ஆக்ஷன் என்று அனைத்து அம்சங்களும் நிரம்பிய முழுமையான வணிக ரீதியிலான படம் இது.
'சீறு' படத்தின் இசையமைப்பாளர் டி.இமான் தற்போது நகாஷ் அஷிஸ் மற்றும் மிர்ச்சி விஜய் ஆகிய இருவரையும் இந்தப் படத்தில் பாட வைத்திருக்கிறார். விவேகா எழுதிய இந்தப் பாடல் சமீபத்தில் பதிவு செய்யப்பட்டது. முழுமையடைந்த இந்தப் பாடல் குறித்து படக்குழுவில் உள்ள ஒவ்வொருவரும் மிகவும் மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.

எதிர்வரும் டிசம்பர் மாதம் 20ஆம் தேதி வெளியாகும் 'சீறு' படத்தின் பாடல்கள் மற்றும் முன்னோட்டம் வெளியாகும் தேதி குறித்து தயாரிப்பாளர் தரப்பிலிருந்து விரைவில் அதிகாரப் பூர்வ அறிவிப்பு வெளியாக இருக்கிறது. ரியா சுமன் கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில் நவ்தீப் எதிர்மறை வேடத்தில் நடிக்கிறார்.பிரசன்ன குமார் ஒளிப்பதிவு செய்ய, லாரன்ஸ் கிஷோர் படத்தொகுப்பை கவனிக்கிறார்.

2019ஆம் ஆண்டு 'எல்.கே.ஜி.', 'கோமாளி', 'பப்பி' என்று ஹாட்ரிக் வெற்றிகளைக் குவித்தது வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல். கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவான 'என்னை நோக்கிப் பாயும் தோட்டா' இம்மாதம் 29ஆம் தேதி வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் வெளியிடுகிறது. அதே சமயம் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா நடிக்கும் 'மூக்குத்தி அம்மன்', கெளதம் வாசுவேவ் மேனன் இயக்கத்தில் வருண் பிரதான வேடத்தில் நடிக்கும் 'ஜோஸ்வா' ஆகிய படங்களையும் வேல்ஸ் பிலிம்ஸ இன்டர்நேஷனல் தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment