Featured post

நடிகர் அஜித் குமாரின் பிளாக்பஸ்டர் ஹிட் படமான ‘பில்லா

 *நடிகர் அஜித் குமாரின் பிளாக்பஸ்டர் ஹிட் படமான ‘பில்லா’ மே 1, 2024 அன்று மீண்டும் வெளியாகிறது!* ஸ்லீக் அண்ட் ஸ்டைலிஷ் தோற்றத்தில் திரையை அத...

Sunday 10 November 2019

“போலீசார் எங்களை வழி மறித்தார்கள்” ; 'மிக மிக அவசரம்' - *நடிகர் E. ராமதாஸ்* =

“போலீசார் எங்களை  வழி மறித்தார்கள்” ; 'மிக மிக அவசரம்' - *நடிகர் E. ராமதாஸ்*


வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பாக ‘அமைதிப்படை-2′, ‘கங்காரு’ என இரண்டு படங்களைத் தயாரித்த சுரேஷ் காமாட்சி, தற்போது இந்த 'மிக மிக அவசரம்’ படத்தை தயாரித்துள்ளதுடன் இந்தப்படத்தின் மூலம் இயக்குநராகவும் அடியெடுத்து வைத்துள்ளார்..தமிழ் சினிமாவில் பெண் காவலர்களை  பற்றி எத்தனையோ படங்கள் வந்திருந்தாலும், தற்போது வெளியாகி வெற்றிகரமாக ஓடிகொண்டு இருக்கும் மிக மிக அவசரம் படம் அவற்றில் இருந்து தனித்து நிற்கும் விதமாக வெளியாகியுள்ளது.

அதனால்தான் ரசிகர்களின், குறிப்பாக தாய்மார்களின் ஆதரவு இந்தப்படத்திற்கு பெரிய அளவில் கிடைத்துள்ளது.

கதாநாயகி ஸ்ரீபிரியங்கா பெண் காவலர் கதாபாத்திரத்திலும், அரீஷ் குமார் முக்கிய தோற்றத்திலும் நடித்துள்ளனர். 

இயக்குநரும், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான சீமான் காவல்துறை உயரதிகாரியாக நடித்துள்ளார்.

கான்ஸ்டபிளாக நடித்துள்ள குணச்சித்திர நடிகர் E. ராமதாஸ் இந்த படத்தில் நடித்த அனுபவம் பற்றி கூறும்போது,

“இந்த படத்தில் பெண் போலீஸார் சந்திக்கும் பிரச்சனைகள் பற்றி கூறப்பட்டுள்ளது..

அதுகூட ஓரளவிற்குத் தான் காட்டமுடியும். அதற்குமேல் சினிமாவில் காட்ட முடியாது.. இந்த கதையை எழுதுவதற்கும் அதை படமாக எடுப்பதற்கும் ஒரு தனி தைரியம் வேண்டும்..

சுரேஷ் காமாட்சி அதை அழகாக படமாக்கியிருக்கிறார்.

 இந்த படத்தில் உயர் அதிகாரியான வழக்கு எண் முத்துராமன் எல்லா மனிதர்களுக்குள்ளும் இருக்கும் மிருகத்தை அழகாக தனது நடிப்பால் வெளிக்கொண்டு வந்திருக்கிறார்.

எதிராளி நடிப்பதை பார்த்து நமக்கும் ஒரு நடிப்பு வரும்.. அதை இந்த படத்தில் கதாநாயகி ஸ்ரீபிரியங்காவுடன் சேர்ந்து நடிக்கும்போது நன்றாக உணர முடிந்தது..

அந்தளவிற்கு ஒரு பெண் போலீஸ் கான்ஸ்டபிளை, அவரது சிரமங்களை தனது நடிப்பால் தத்துரூபமாக நம் கண்முன்னே கொண்டுவந்து நிறுத்திவிட்டார்..

படப்பிடிப்பு சமயத்தின் போது நாங்கள் சில பேர் காக்கி உடையணிந்து போலீஸ் செப்பில் சென்றபோது நிஜமான போலீஸ் எங்களை வழி மடக்கி நிறுத்தினார்கள்.

அதன் பிறகு நாங்கள் படப்பிடிப்புக்காக வந்திருக்கிறோம் என்பது தெரிந்ததும் சோதனை செய்ய வேண்டியது எங்கள் கடமை என்று கூறி அனுப்பி வைத்தார்கள்” என சுவாரஸ்ய நிகழ்வுகளையும் நினைவு கூர்ந்தார்.

ரவீந்தர் சந்திரசேகரனின் லிப்ரா புரொடக்சன்ஸ் நிறுவனம் இந்தப்படத்தை  வெளியிட்டுள்ளது.

No comments:

Post a Comment