Featured post

Delhi Sharks Clinch Title !!!!

Delhi Sharks Clinch Title !!!!   Delhi Sharks emerged victorious at the DAVe BABA VIDYALAYA Tamil Nadu Open Trios Tenpin Bowling Tournament ...

Saturday, 4 April 2020

நாராயணா பள்ளிக் குழுமத்தின்

*நாராயணா பள்ளிக்  குழுமத்தின் ஆன்லைன் வகுப்புகள் தொடக்கம்!*

நாராயணா பள்ளிக்  குழுமத்தில்  படிக்கும்  மாணவர்களின்  கல்வி, ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் இந்த நிலையிலும் தடையில்லாமல் தொடர்வதற்கு  அக்குழுமம்  நேரடி ஆன்லைன் வகுப்புகளை  ஆரம்பித்துள்ளது. இச்சேவையை வெற்றிகரமாக  நடத்தி வருகிறது.
மாணவர்கள் தங்கள் வீட்டிலிருந்த படியே பாதுகாப்பாகத் தங்கள்
கல்வியைத் தொடர்கின்றனர்.

 N-LEARN மற்றும் NARAYANA ONLINE TEST SERIES மூலமாகவும் இணையம் வாயிலாகவும் பாடம் சம்பந்தமான அனைத்தும் மாணவர்களுக்கு அனுப்பப்பட்டு அவர்களின் கற்றலில் குறைவு
ஏற்படாமல் பார்த்துக் கொள் ளப்படுகின்றனர்.


கல்வி கற்பித்தல் சேவையோடு மாணவர்களுக்கு ஆரோக்கிய  வழிகாட்டுதல்களையும் தனித்திருக்கும் காலத்தில் பின்பற்ற வேண்டிய  அரசின்  எச்சரிக்கைகளையும் அவ்வப்போது அளித்து வருகிறது.







நாள்தோறும் 10,000க்கும் மேற்பட்ட நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு அதன் மூலமாக நாடு முழுவதும்  75,000 மாணவர்கள் பயன் அடைந்து வருகின்றனர். கற்றல் மட்டும் அல்லாமல் நேரடியான தேர்வுகளும் மாணவர்களின் கைபேசிக்கு ANDROID செயலி
மூலம் அனுப்பி அவ்வப்போது அவர்களின் திறனும் சோதிக்கப்படுகின்றன.
எந்நிலையிலும் மாணவர்களின் கல்வி தடைப்படக் கூடாது என்பது  நாராயணா  பள்ளிக்  குழுமத்தின்  நோக்கமாகும்.

இத்திட்டத்தின் பின்னணியில் நூற்றுக்கணக்கான ஆசிரியர்களும் ஊழியர்களும்  மாணவர்களுக்கு உதவுகின்றனர்.அவ்வப்போது நடத்தப்படும் தேர்வுகளின் மூலம் அதற்கான பின்னூட்டங்களைக் கொடுத்து மாணவர்களை வழி நடத்தி மேம்படுத்துகின்றனர். நாராணா குழுமத்தின் இந்த முயற்சி கொரோனா எச்சரிக்கையோடு தனித்திருக்கும் காலத்திலும் மாணவர்களை இணைத்து 'தனித்திருந்தபோதும்  படித்திரு' என்று  கல்வி கற்க உதவுகிறது.

No comments:

Post a Comment