Featured post

Varsha Bharath’s Bad Girl Set for Theatrical Release on September 5th

 Varsha Bharath’s Bad Girl Set for Theatrical Release on September 5th Censored with U/A Certificate | Winner of Multiple Prestigious Intern...

Tuesday, 31 March 2020

கொரோனா பாதிப்பு – பிரதமர் மற்றும் முதல்வர் பொது நிவாரண

கொரோனா பாதிப்பு – பிரதமர் மற்றும் முதல்வர் பொது நிவாரண நிதிக்கு ரூ. 50 லட்சம் வழங்கியது சத்தியபாமா நிகர்நிலை பல்கலைக்கழகம்

இந்தியாவிலும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து வருகிறது. கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று பிரபலங்கள் பலரும் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.





இதனால் பெரும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பாரத பிரதமர் மற்றும் தமிழக முதல்வர் பொது நிவாரண நிதிக்கு ரூபாய் 50 லட்சத்தை சென்னை சத்தியபாமா நிகர்நிலை பல்கலைக்கழகம் வழங்கியது.

சென்னை செம்மஞ்சேரியில் உள்ள சத்தியபாமா நிகர்நிலை பல்கலைக்கழக வேந்தர் மரிய ஜீனா ஜான்சன் மத்திய அரசின் பொது நிவாரண நிதிக்கு ரூபாய் 25 லட்சம் நிதி வழங்கினார்.

இதேபோல் தமிழக அரசின் பொது நிவாரண நிதிக்கு சத்தியபாமா நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் ரூபாய் 25 லட்சம் நிதி வழங்கினார்.

வங்கி பரிவர்த்தனை மூலம் மத்திய, மாநில அரசுக்கு சத்தியபாமா பல்கலைக்கழக வேந்தர் மரிய ஜீனா ஜான்சன் அவர்கள் கொரோனா நிவாரண நிதியை வழங்கினார்.



No comments:

Post a Comment