Featured post

ஊடகங்களுக்கும், ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்த உதயாவின் 'அக்யூஸ்ட்' படக்குழு*

 *ஊடகங்களுக்கும், ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்த உதயாவின் 'அக்யூஸ்ட்' படக்குழு* ஜேசன் ஸ்டுடியோஸ், சச்சின் சினிமாஸ், ஸ்ரீதயாகரன் சின...

Monday, 1 June 2020

கொரோனா பரவலை கட்டுப்படுத்த

கொரோனா  பரவலை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கால், நியூ அவாடி சாலை, அமைந்தகரை மற்றும் சுற்றியுள்ள குடிசை மாற்றுவாரிய பகுதிகளில் வசிக்கும் 200 க்கும் அதிகமான மக்களுக்கு சமூக ஆர்வலர் அதிதி மதுசூதனன் அத்தியாவசிய பொருட்களை வழங்கினார்
































தின கூலிகளான இவர்கள் அனைவரும் தமிழக அரசின் குடும்ப அட்டை இல்லாதவர்கள். உதவிகள் கிடைக்கப்பெற்ற பயனாளிகள் பட்டியல் பெருநகர சென்னை மாநகராட்சி அதிகாரிகளிடம் அளிக்கப்பட்டு, தமிழக அரசின் நலத்திட்டங்களும் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. 

 கோவிட் 19 தொற்று பரவிவரும் இதுபோன்ற சூழ்நிலையில், பல்வேறு குடிசை பகுதிகளைச் சேர்ந்த 2000 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் அளிக்கப்பட்டுள்ளன. 

நாள்தோறும் 30 க்கும் அதிகமான நாய்களுக்கும் சமூக ஆர்வலர் அதிதி மதுசூதனன் உணவளித்து வருகிறார்...

No comments:

Post a Comment