Featured post

Friends Magic Films முதல் முறையாக தயாரிக்கும் production No 1 .

 Friends Magic Films முதல் முறையாக தயாரிக்கும் production No 1 . திரைப்பட கல்லூரி மாணவரும் இயக்குனருமான திரு  N.L.Sri இயக்கும் இரண்டாவது படம...

Saturday, 6 June 2020

வேலம்மாள் நெக்ஸஸ் கல்விக் குழுமம் மற்றும் ஆவடி

வேலம்மாள் நெக்ஸஸ் கல்விக் குழுமம் மற்றும் ஆவடி மாநகராட்சி இணைந்து நடத்தும் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு வாகனப் பிரச்சாரம்

வேலம்மாள் நெக்ஸஸ் கல்விக் குழுமம் மற்றும் ஆவடி மாநகராட்சி இணைந்து, கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை, கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகளை வலியுறுத்தி, விழிப்புணர்வு வாகனப் பிரச்சாரத்தை இன்று தொடங்கியது.






தமிழ் அதிகாரப்பூர்வ மொழி, தமிழ் கலாச்சாரம் மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் திருமிகு. மாஃபா.க.பாண்டியராஜன் அவர்கள் கொடி அசைக்க பிரச்சாரம் தொடங்கப்பட்டது.

இந்த விழிப்புணர்வு வாகனப் பிரச்சாரத்தில் மூன்று சக்கர வாகனத்தைப் பயன்படுத்தி, பதிவுசெய்யப்பட்ட செய்திகளை அறிவிப்பாக ஒலிபரப்பிக்கொண்டு ஆவடி, பூந்தமல்லி, மாங்காடு, மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள் பார்வையிடப்பட்டன.

முகக்கவசம் பயன்படுத்துதல், சுகாதாரத்தைப் பேணுதல், பொது இடங்களில் போதுமான சமூக விலகலைக் கடைப்பிடித்தல், இருமல் மற்றும் தும்மல் போன்றவற்றில் கவனம் செலுத்துதல் போன்றன இந்தப் பிரச்சாரத்தின்போது பொதுமக்களுக்கு விளக்கப்பட்டன.

இந்தப் பிரச்சாரத்தின்போது, இலவச முகக்கவசங்கள், துண்டு பிரசுரங்கள் மற்றும் சுகாதாரப் பானம் (கபாசுரா குடிநீர்) பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. நலிவடைந்த ஏழை எளிய மக்களுக்கு நிவாரணப் பொருட்களும் விநியோகிக்கப்பட்டது.

வேலம்மாள் நெக்ஸஸ் கல்விக் குழுமம் மற்றும் ஆவடி மாநகராட்சி எடுத்துள்ள இந்த உன்னத பிரச்சாரத்தால், நாட்டில் பரவும் கொரோனா தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் உள்ள அனைத்து முரண்பாடுகளும் களையப்பட்டு, நிலைமை சீராகட்டும். 

No comments:

Post a Comment