Featured post

Hrithik Roshan is planning an explosive birthday surprise for NTR with War 2

 *Hrithik Roshan is planning an explosive birthday surprise for NTR with War 2!*  In a move that has set social media meltdown, Bollywood su...

Sunday, 21 June 2020

முகப்பேர் கிழக்கு வேலம்மாள்

முகப்பேர் கிழக்கு வேலம்மாள் பள்ளி மாணவர்கள் புதுமையான முறையில் யோகா தினத்தை வீட்டில் கொண்டாடினர்.


முகப்பேர் கிழக்கு வேலம்மாள் பள்ளி சர்வதேச யோகா தினமான 21.06.2020 அன்று புதுமையான முறையில் யோகா தினத்தைக் கொண்டாடும் வகையில் மாணவர்களை வீட்டிலேயே யோகா செய்யும் முறையை ஊக்குவித்தது.
மாணவர்கள் வீட்டில் யோகாசனப் பயிற்சி செய்வது அவர்களது உடல் நலம் மற்றும் நல்வாழ்வுக்கு உதவுவது,ஆகையால் இவ்வித அணுகுமுறையை நடைமுறைப் படுத்துவதில் வேலம்மாள் பள்ளி உறுதியுடன் செயல்பட்டது.
ஊரடங்கு நடைமுறையில் இருக்கும் இந்த காலகட்டத்தில்  மாணவர்கள் யோகாசனங்களை வீட்டிலேயே செய்து தங்களது ஆரோக்கியத்தை மேம்படுத்தும் யுக்தியாக இதனைக் கையாண்டனர்.



யோகா என்பது உடற்பயிற்சியைப் பற்றியது மட்டுமல்ல மனம்,சிந்தனை, செயல் என்று அனைத்தையும் ஒருநிலைப்படுத்துவது என்பதை மாணவர்கள் உணர்ந்து கொள்ள இப்புதுமை யோகாசன நிகழ்வு வழி வகுத்தது.

மாணவர்கள் ஆர்வமுடன் இந்நிகழ்வில் பங்கேற்று செயல்படுத்தியதைப் பள்ளி நிர்வாகம் பாராட்டியது

No comments:

Post a Comment