Featured post

கார்த்திக் ராஜா பின்னனி இசை அமைக்கும் "கமாண்டோவின் லவ் ஸ்டோரி

 கார்த்திக் ராஜா பின்னனி இசை அமைக்கும் "கமாண்டோவின் லவ் ஸ்டோரி" ஏஏஏ பிக்சர்ஸ் சார்பில், அனுராதா அன்பரசு தயாரிக்கும் படம் "கமா...

Thursday, 13 August 2020

தமிழக ஊரக தொழில்துறை அமைச்சர்

*தமிழக ஊரக தொழில்துறை அமைச்சர் பா.பென்ஜமின்- நடிகர் ஜெய்வந்த் சந்திப்பு*

தமிழக ஊரக தொழில்துறை அமைச்சர் மாண்புமிகு பா.பென்ஜமின் அவர்களை நடிகரும்,அகில இந்திய ஜெய்வந்த் நற்பணி இயக்கத்தின் நிறுவனரும், சமூக சேவகருமான ஜெய்வந்த்  சென்னையில்  சந்தித்துப் பேசினார். அப்போது  இயக்கத்தின் மக்கள் வளர்ச்சி பணிகள் குறித்தும், இனிவரும் காலங்களில்  திட்டமிடப்பட்டுள்ள திட்டப்பணிகள் குறித்தும் எடுத்துரைத்தார். மேலும் கொரோனாவால் முற்றிலுமாக மாறியுள்ள கீழ் தட்டு மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நடவடிக்கைகள் குறித்தும், அதற்கு அரசு சார்பாக வழிநடத்தல்களும், ஒத்துழைப்பும் இயக்கத்துக்கு தேவை என்பதை ஒரு வேண்டுகோளாக முன்வைத்தார். இதனை ஏற்றுக் கொண்ட அமைச்சரும், சிறு குறு நடுத்தர தொழில்துறையுடன் இணைந்து செயல்பட  தற்போதுள்ள அரசாங்க வழிமுறைகளின் படி ஆவண செய்வதாக உறுதியளித்து இருக்கிறார்.



இந்நிகழ்ச்சியில் தமிழக அமைச்சர் பா.பென்ஜமின் , துறைசார் அரசு அதிகாரிகள் மற்றும் நற்பணி இயக்கத்தின் நிறுவனர்  ஜெய்வந்த், தலைவர் சம்பத் குமார்  ஆகியோர் கலந்துக்  கொண்டனர்.

No comments:

Post a Comment