Featured post

En Kadhale Movie Review

En Kadhale Movie Review  ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம என் காதலே ன்ற படத்தோட review அ தான் பாக்க போறோம். jayalakshmi கதை எழுதி இந்த படத்தை dire...

Sunday, 16 August 2020

பாடும் நிலா பாலு சாரு, சீக்கிரம்

*பாடும் நிலா பாலு சாரு, சீக்கிரம் குணமடைந்து வருவார் பாரு... வேல் முருகன் பாடிய பாடல்*

பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கொரோனா அறிகுறிகளுடன் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். நேற்று அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது. மேலும் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் கூறினார்கள்.





பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல் நலம் பெற வேண்டும் என்று சினிமா பிரபலங்கள், இசையமைப்பாளர்கள், பாடகர்கள், ரசிகர்கள் என பலரும் பிரார்த்தனை செய்வதாக சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வருகிறார்கள்.

இந்நிலையில், பிரபல பின்னணி பாடகர் வேல்முருகன், எஸ்.பி.பாலசுப்ரமணியம் நலம் பெற வேண்டும் என்று பாடல் பாடி இருக்கிறார். 50 வருடமாக அசையாத விருட்சமாக பாட்டு தேர் ஏறி பவனி வரும் பாடும் நிலா பாலு சார், சீக்கிரம் குணமடைந்து வருவார் பாரு... என்ற பாடலை பாடி வெளியிட்டிருக்கிறார்.

No comments:

Post a Comment