Featured post

Dude Movie Review

Dude Movie Review  ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம dude படத்தோட review அ தான் பாக்க போறோம். இந்த படத்தை இயக்கி இருக்கிறது keerthiswaran .  Pradee...

Sunday, 10 January 2021

மிஷ்கின் இயக்கும் பிசாசு 2 படத்திற்காக

 மிஷ்கின் இயக்கும் பிசாசு 2 படத்திற்காக மெய்சிலிர்க்கும் பாடல் பாடிய சித் ஶ்ரீராம்


ராக்போர்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பாக தயாரிப்பாளர் T.முருகானந்தம் தயாரிப்பில் வெற்றி இயக்குனர் மிஷ்கின் இயக்கும் படம் ‘பிசாசு 2’




நடிகை ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தில் நடிகை பூர்ணா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றார்.


இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா இசையில் உருவாகும் இப்படத்திற்காக பிரபல பாடகர் சித் ஶ்ரீராம் அழகான மெலடி பாடலை பாடியுள்ளார். பாடலின் வரிகளும் மெட்டும் மிகவும் பிடித்துப் போகவே இப்பாடலை பாட அமேரிக்காவிலிருந்து சென்னை வந்து பாடி கொடுத்துள்ளார் பாடகர் சித் ஶ்ரீராம்.


ஏற்கனவே இப்படத்திற்காக சூப்பர் சிங்கர் புகழ் பாடகி பிரியங்கா ஒரு பாடலும், பாடகி ஶ்ரீநிதி ஒரு பாடலும் பாடியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


தயாரிப்பு - T.முருகானந்தம் (ராக்போர்ட் என்டர்டைன்மென்ட்)

எழுத்து இயக்கம் - மிஷ்கின்

இசை - கார்த்திக் ராஜா

ஒளிப்பதிவு - சிவா சாந்தகுமார்

க்ரியேடிவ் புரொடுயுசர் - K.B.ஶ்ரீராம்

தயாரிப்பு மேற்பார்வை - L.B. ஶ்ரீகாந்த் லக்‌ஷ்மணன்

பப்ளிசிட்டி டிசைன்ஸ் - கண்ணதாசன்

No comments:

Post a Comment