Featured post

Maanbumigu Parai Movie Review

Maanbumigu Parai Movie Review  ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம manmubigu parai படத்தோட review அ தான் பாக்க போறோம். Leo Siva Kumar, Gayathri rema ...

Monday, 4 January 2021

சர்வதேச ஆர்.எஸ்.ஜி சமூக சேவை மையம் சார்பில்

சர்வதேச ஆர்.எஸ்.ஜி சமூக சேவை மையம் சார்பில் 2021-புத்தாண்டு உலக மக்கள் அணைவரும் உடல் நலம், மன அமைதியுடன், நல் எண்ணங்களுடன், ஒருவருக்கொருவர் விட்டு கொடுத்து நட்புடன், ஏழை பணக்காரன் என்றெல்லாம் இல்லாதவாறு அமைய கடவுளை வேண்டி கொள்வதாக நிறுவனர், தலைவர், நடிகர் கோபி காந்தி உலக மக்கள் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

நாமக்கல்;, ஜன:1- சர்வதேச ஆர்.எஸ்.ஜி சமூக சேவை மையம் சார்பில் அதன் நிறுவனர், தலைவர் திரைப்பட தாயரிப்பாளரும், நடிகர் கோபி காந்தி விடுத்துள்ள அறிக்கைச் செய்தியில் கூறியுள்ளதாவது கடந்த 2020-ம் ஆண்டு மக்கள் அனைவருக்குமே துயரமான ஆண்டாக அமைத்துள்ளது ‘கொரொனா” என்ற ஒரு பெயரை வைத்து உலக மக்கள் அனைவரையும் வீட்டுச் சிறை வைத்து அரசாங்கம் இந்த மாதிரி ஒரு கடினமாக சூழ்நிலையை சந்தித்தோம், உலக நாடுகளில் அரசியல் செய்பவர்கள் நிதி கொள்ளையடிப்பதற்காக மக்களை துன்புறுத்திய ஆண்டாக அமைந்தது தனால் தற்போது அத்தியாவாசிய தேவைகளான உணவு,உடை இருப்பிடத்திற்கான அனைத்து மூலப் பொருட்களின் விலைகளும் உயர்ந்துள்ளது. உலக வரலாற்றில் இது வரை உலகமே பார்க்காத வண்ணம் கொரொனா அரசியல் நடைபெற்ற ஆண்டாக 2020 துன்பங்கள் நிறைந்த ஆண்டாக நிறைவுற்றது குறிப்பிடதக்கதாகும். பிறக்கும் 2021 புத்தாண்டு உலக மக்கள் அனைவரும் உடல் நலத்துடனும் மன அமைதியுடனும், ஒருவருகுகொருவர் விட்டு கொடுத்து, நல்ல மனதுடன், நட்பாகவும், ஏழை,பணக்காரன் என்ற பிரிவுகள் இல்லாமல் அனைவரும் சமமான எண்ணத்துடன் அமையும் ஆண்டாகவும், இயற்கை சீற்றங்களும், விபத்துகளும்  இல்லாத ஆண்டாகவும், விவாசயம் செழிப்படையும் ஆண்டாகவும், அனைத்து தொழில்களும் சிறப்பாக நடைபெறும் ஆண்டாகவும், மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் அத்தியாவாசிய பொருட்ளின் விலைவாசிகள் குறைந்தும், அரசியல் கொள்ளை நடக்காமல் உலகம் முழுவதும் நல்லாட்சி மக்கள் லனுக்கான அரசு நடைபெற வேண்டும். 
 

 
 
மனிதர்கள் மனிதர்களை அழிக்கும் எண்ணங்கள் அடியோடு அழிய வேண்டும், பணத்திற்கு மரியாதை கொடுக்காமல் மனிதர்களுக்கு மரியாதை கொடுக்கும் எண்ணம் அனைவருககும் வர வேண்டும், மனிதனிடத்தில் மிருகத்தன்மை எண்ணங்களால் கொலை குற்றங்கள் நடந்து வருகிறது அது ஒழிந்து ஒவ்வொரு மனிதனும் அனைத்து  மனிதர்களையும் அன்போடு பார்க்க வேண்டும். அப்போது மனிதனிடத்தில் தோன்றும் மிருகத்தன்மை மாறும் அது போல் அமைய வேண்டும், உலக மக்கள் அனைவருக்கும் சமமான வாழ்க்கை அமைய உலக அரசாங்க ஆட்சி செய்யும் அனைத்து அரசியல்வாதிகள் மனதிலும் பதவி ஆசை, பணத்தாசை, சொகுசான வாழ்ககை ஆசைகள் அகன்று சாதாரன மனிதர்களாக அனைத்து அரசியல்வாதிகள் மனதிலும் எண்ணம் வர வேண்டும் இவ்வாறு இந்த 2021-ம் ஆண்டு அமைய கடவுளை வணங்கிக் கொள்வதாகவும், உலக மக்கள் அனைவருக்கும் தனது 2021 புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். சர்வதேச சமூக சேவை மைய நிறுவனர், தலைவர் திரைப்பட தயாரிப்பாளருன நடிகர் கோபி காந்தி.

No comments:

Post a Comment