Featured post

Mark Your Calendars: Prabhas starrer 'Kalki

 *Mark Your Calendars: Prabhas starrer 'Kalki 2898 AD' to hit theatres on 27th June 2024* This year's highly-anticipated sci-fi ...

Monday 11 January 2021

விஜய் சார் தான்.. மறக்க முடியாத

விஜய் சார் தான்.. மறக்க முடியாத அனுபவம் !! 

30 ஆண்டுகளாக 5 மொழிகளில் அசத்தும் ஸ்டண்ட்  மாஸ்டர் ஸ்டன் சிவா . ——

ஸ்டன் சிவா தென்னிந்திய சினிமாவில் மிகப்பெரும் பிரபலமாக இருப்பவர். நமது திரையுலகில் உயிரை பணயம் வைத்து வேலை செய்யும் துறை சண்டைக்கலையை செய்யும் துறை.   அந்த துறையில் 30 வருடங்கள், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என அனைத்து இந்திய மொழி சினிமாக்களிலும் வேலை செய்திருக்கிறார். அனைத்து பிரபலங்களுடனும் பணிபுரிந்திருக்கிறார். இப்போது நடிகராகவும் பரிமளிக்க ஆரம்பித்துள்ளார். 







இந்த வருடம் ஆரம்பமே அவருக்கு ஜாக்பாட் அடித்த வருடம் என்று சொல்லலாம். இந்த பொங்கலுக்கு 4படங்கள். 

தெலுங்கில் இன்று ரிலீசான ‘கிராக்’ #krack படத்தில் ரவிதேஜாவுக்கு வில்லனாக  நடித்தது. கிராக் தெலுங்கு திரைப்படம் பெரும் வரவேற்பு பெறற்றிருக்கிறது. சிம்பு நடிப்பில், இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் 

 பொங்கல் திருநாளில் பெரும் எதிர்பார்ப்புடன் வெளியாக காத்திருக்கும் “ஈஸ்வரன்” படத்தில்  வில்லன் ரோலில் கலக்கியிருக்கிறார். ஜெயம்ரவி நடிப்பில் ஓடிடி தளத்தில் வெளியாகும் “பூமி” படத்தில் ஸ்டணட் மாஸ்டராக  பணிபுரிந்திருக்கிறார். நாங்காவதாக, பொங்கலன்று தெலுங்கில் வெளியாகும் #அல்லடுஅதுர்ஸ் படத்தில் மாஸ்டராக பணிபுரிந்திருக்கிறார். அவருடன் உரையாடியதிலிருந்து...



உங்களது திரை பயணம்: 


1989 – லவ் டுடே  விஜய் படத்தில் தான் நான் சண்டைப்பயிற்சி இயக்குநராக அறிமுகமானேன்.தொடர்ந்து 

ஒன்ஸ்மோர், காதலுக்கு மரியாதை படங்களில் பணிபுரிந்தேன்.

 

விஜய் சார் பரிந்துரையில் தான்  காதலுக்கு மரியாதை படம் கிடைத்தது. அது மறக்கமுடியாத அனுபவம்.


தொடர்ந்து இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளிலும் 30 வருடங்கள் பணிபுரிந்திருக்கிறேன். 



நடிகர் விஜய்யுடன் நிறைய படங்கள்..


நிறைய காட்சிகள் இருக்கிறது. 

காதலுக்கு மரியாதை படத்தில் கிளைமேக்ஸ்  நைட் எஃபெக்ட், ரொம்ப ரிஸ்க் ஆன ஸ்டண்ட்.

காவலன் படத்துல கோவில் செட் அப்-ல ஒரு ஸ்டண்ட், 60 அடி உயரத்தில் உள்ள மூங்கில் மேல ஏற மாதிரி

காவலன் பைக் சேஸ், அப்புறம் 

ஒன்ஸ்மோர் படத்தில் ஒரு சண்டை காட்சியில் கண்ணாடி பாட்டில் விஜய் சார் மேல படும், அந்த ரிஸ்க் ஆன சண்டை , இப்படி நிறைய காட்சிகள் அவர் டூப் போடம பண்ணியிருக்கிறார். சண்டை காட்சிகளில் எப்போது விஜய் ஆர்வமுடன் மிகுந்த ஈடுபாட்டுடன் இருப்பார். அவர்  எப்போதும் எளிமையாக இருப்பார். அப்போது போலவே இப்போதும் பழகுவது எனக்கு பெருமை. 



 

ஸ்டண்ட் துறையில் ஆர்வம்..

 


எனக்கு பைக் மீது தான் ஆர்வம் அதிகம். பைக் மெக்கானிக் ஆக இருந்தேன். பைக் ஸ்டண்ட் அட்டகாசமாக பண்ணுவேன். அதற்கு அப்புறம் காரத்தே போன்ற சண்டைகள் கற்றுக்கொண்டேன். பைக் ஸ்டண்ட் பண்ண சினிமாவில் யூனியனில் என்னை சேர்த்தார்கள். அப்புறம் மாஸ்டர் ஆகிவிட்டேன்

30 வருட திரை பயணம்.

சினிமா மீது தீராத காதல் உள்ளது. நம்ம செய்ற வேலையை காதலிச்சா யாரு வேணா பெரிய ஆள் ஆயிரலாம். 

 


வேறு மொழிகளில்..


தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி மொழிகளில் படங்கள் செய்துள்ளேன். இப்பவும் நிறைய பண்ணிக்கிட்டு இருக்கேன். பிரபாஸ் நடிச்ச தெலுங்கு பில்லா, பண்ணேன். பிரபாஸ்க்கு நிறைய படம் பண்ணிருக்கேன்.

 இயக்குநர் முருகதாஸ் மூலம் 

ஹிந்தி கஜினியில்  அமீர்கான் அவர்களுடன் பண்ணினேன்.

தொட்டி ஜெயா படத்தில் வந்த ஒரு சண்டைக்காட்சியை முருகதாஸ் சார், அமீர்கான் சாரிடம் காட்டி, அது அமீர்கான் சாருக்கு பிடித்து போய் என்னை , கஜினி மூலமாக ஹிந்தியில் அறிமுக படுத்தினார்கள். அந்த படத்திற்காக IIFA- விருது வாங்கினேன்.


வேட்டையாடு விளையாடு படத்தில் ஸ்டண்ட் மாஸ்டர் ஆகவும் இருந்தேன், அதில் கமல் சாரோட கண்ணு வேணும்னு கேட்கிற சீன்ல நடிச்சுருப்பேன். அது நன்றாக வந்ததற்கான முழு உழைப்பும் கவுதம் மேனன் சார் உடையது

கமல் சார் பார்த்துட்டு , மாஸ்டர் நல்லா நடிக்கிறார், அப்படினு சொன்னார். இந்த மாதிரி வாழ்வில் மறக்க முடியாத பல பரிசுகளை சினிமா தந்திருக்கிறது. 



நடிகராக எப்படி?..


திரையில் முதல் அறிமுகம்

பிதாமகன் படத்துல தான் நடந்தது. நான் ஸ்டண்ட் மாஸ்டர், விக்ரம் சாரை அடிக்கிற மாதிரி ஒரு காட்சி. அதில் அவருக்கு அடிவிழாம பாதுகாப்பா செய்யனும்னு, நானே நடிச்சேன். பாலா சார் வசனம் கொடுத்தார், அது தான் முதல் முறை ஒரு நடிகரா என்னை அடையாளப்படுத்தியது. அதற்கு அப்புறம் வேட்டையாடு விளையாடு, அப்புறம் தெறி. அடுத்து கோலிசோடா. முழு நடிகரா சுசீந்திரன் சார் சாம்பியன் படத்தில் என்னை வில்லனாக நடிக்க வைத்தார். இப்போ ஈஸ்வரனிலும் நடிக்க வைத்துள்ளார். 



கிராக் தெலுங்கு படத்தில் வில்லன் பாத்திரத்தில்..


கிராக் படத்தின்  இயக்குனர் கோபி எனக்கு நண்பர். அவர் தான் இப்படத்தில் நடிக்கும்படி  என்னிடம் கேட்டார், நானும் ஓகே அப்படினு சொல்லிட்டேன். ரவிதேஜா உடன் டான் சீனு, பலுப்புனு சில படங்களில் ஸ்டண்ட் மாஸ்டராக வேலை பார்த்துருக்கேன். அவர் என்னை செட்டில் பார்த்தவுடன் மிகவும் உற்சாகமாகி, பாராட்டினார். படம் நல்ல பாராட்டுக்களை பெற்று தரும். 



பூமி படம் பொங்கலுக்கு வருகிறது அதில் பணிபுரிந்த அனுபவம்..


அடங்கமறு படத்தில் ஜெயம் ரவியுடன் வேலை செய்தேன் அந்தப்படம் பெரிய பாராட்டுக்களை பெற்று தந்தது. பூமி படம் ஆக்சனுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து எடுத்திருக்கிறோம். ஜெயம் ரவி ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவார். இந்த படம் தமிழில் ஒரு புதுமையான ஆக்சன் காட்சிகளை திரையில் கொண்டுவரும். எல்லோரும் இணைந்து கடின உழைப்பில் இப்படத்தை உருவாக்கியுள்ளோம். ஜெயம் ரவி இப்படத்தில் நிறைய ரிஸ்க்கான காட்சிகளில் நடித்திருக்கிறார். ரசிகர்கள் திரையில் பார்க்கும் போது அதனை ரசிப்பார்கள். 


ஈஸ்வரன் படம் குறித்து அதில் நடித்த அனுபவம்..


சுசீந்திரன் தான் என்னை முழுமையான நடிகராக மாற்றினார். சாம்பியன் படத்தில் வில்லனாக அறிமுகப்படுத்தினார். ஈஸ்வரன் படத்தில் அவர் தான் நடிக்க வைத்தார். வில்லன் வேடம், சிம்புவுக்கு எதிராக நிற்க வேண்டும். பெரிய படம் சிறிது பதற்றம் இருந்தது. ஷீட்டிங்கின் போது எல்லாம் மறந்து விட்டது. சிம்பு ஒரு அற்புதமான நடிகர். தொட்டி ஜெயா படத்தில் அவருடன் வேலை செய்திருக்கிறேன். அதே மாதிரியே  சின்னப்பையனாக இந்தப்படத்தில் வந்து நின்றார். ஆக்சன் காட்சிகள் எல்லாம் நடிக்கும் போது மாஸ்டரை பார்த்து கொள்ளுங்கள் என்பார். என் மீது நிறைய அக்கறையுடன் இருந்தார். ஹீரோவை ஆக்சன் காட்சிகளில் அடிபடாமல் பார்த்து கொண்டிருப்பது தான் எங்கள் வேலையாக இருந்தது. அதே போல் அவர் என்னை பார்த்து கொண்டபோது அந்த உணர்வே மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. 



ஈஸ்வரன் : 


ரசிகர்கள் இந்த பொங்கல் திருநாளில் குடும்பத்துடன் கொண்டாடும் படமாக இருக்கும். வில்லன் ரோல் பண்ணியிருக்கேன். ரசிகர்களுக்கு பிடிக்கும் என நம்புகிறேன். எல்லோருமே இப்படத்தில் கடும் உழைப்பை தந்திருக்கிறார்கள். கோவிட் காலத்தில் கடும் சிக்கல்களுக்கு மத்தியில் மிககஷ்டப்பட்டு இப்படத்தை உருவாக்கியுள்ளோம். ரசிகர்கள் கொண்டாடும் படைப்பாக இது இருக்கும். 



சிம்பு ஈஸ்வரனில் எப்படி..


அவரை பற்றி தனியாக சொல்லவேண்டியதில்லை. இதில் புது அவதாரம் எடுத்திருக்கிறார். தொட்டி ஜெயா எடுக்கும் காலத்திலேயே மிக அர்ப்பணிப்புடன் வேலை செய்வார். இப்போதும் அதே அர்ப்பணிப்புடன் வேலை செய்தார். கடும் உழைப்பை தந்திருக்கிறார். இப்படம் அவரது ரசிகர்களுக்கு அட்டகாச பொங்கலாக இருக்கும்.


நடிப்பு , ஸ்டண்ட் இனிமேல்  எதற்கு அதிக முக்கியத்துவம்..


இரண்டிலுமே சேர்த்து தான் பயணிக்க போகிறேன். ஸ்டண்ட் இயக்குநராக இருந்த போது திரை உலகில் நிறைய அங்கீகாரம் கிடைத்தது இப்போது ரசிகர்களிடம் இருந்து பாராட்டு கிடைத்து வருகிறது. இரண்டையும் பிரித்து தொடர்ந்து வேலை செய்வேன். இரண்டிலுமே என் பயணம் தொடரும். ரசிகர்களின் ஆதரவும் பாராட்டும் கிடைக்கும் என்று நம்புகிறேன்.

அனைவருக்கும் என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள். 

No comments:

Post a Comment