Featured post

Pottuvil Asmin Recites Tribute Poem Before Vairamuthu at “Miller” Film Launch in Jaffna

 Pottuvil Asmin Recites Tribute Poem Before Vairamuthu at “Miller” Film Launch in Jaffna The launch of the Tamil film “Miller” in Jaffna wit...

Thursday, 7 January 2021

வெள்ளித்திரைக்கு செல்லும் நடிகர் சித்தார்த் குமரன் !

 வெள்ளித்திரைக்கு செல்லும்  நடிகர் சித்தார்த் குமரன் ! 

தற்போதைய காலகட்டத்தில் சின்னத்திரையில் புகழ் பெறும் நடிகர்களும் வெள்ளித்திரையிலும் கொடி நாட்டி வருகிறார்கள். மக்களும் தங்கள் சொந்தங்களை போல் அவர்களை கொண்டாடுகிறார்கள். சிவகார்த்திகேயன், ப்ரியா பவானி சங்கர் சமீப காலத்தில் அதற்கு பல உதாரணங்கள் உண்டு. அந்த வகையில் தற்போது சின்னத்திரையில் கோலோச்சும் நடிகர் சித்தார்த் குமரன் கூடிய விரைவில் வெள்ளித்திரைக்கு பயணமாகிறார். 
















சின்னத்திரை  மூலம் தமிழக மக்கள் மனங்களில் இடம்பிடித்திருக்கும் பிரபல  நடிகர் தான் சித்தார்த் குமரன். முதலில் சின்னத்திரையில் ஜோடி நம்பர் 1, டான்ஸ் ஜோடி டான்ஸ் என்று பல நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்று ரசிகர்களை மகிழவைத்தவர். பிறகு

என் பெயர் மீனாட்சி, ஆபீஸ், சரவணன் மீனாட்சி என்று தொடர்ந்து பல மெகா சீரியல்களில் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்து புகழ் பெற்றார். பின்  “ரெக்க கட்டி பறக்குது மனசு” நெடுந்தொடரில் கதாநாயகனாக ஆழமான ஒரு பாத்திரத்தில், தனது அற்புதமான நடிப்புத்திறமையால் அனைவரையும் கவர்ந்தார். “அச்சமில்லை, அச்சமில்லை” முதல் பல  ரியாலிடி ஷோக்களில் நாயகனாக பலராலும் பாராட்டப்பெற்றார். இப்பொழுது Vijay Tvயின் “தேன்மொழி BA” தொடரில்  ஜாக்குலினுடன் அழகான ஹீரோவாக hero sir எனும் அடைமொழியில் கலக்கி வருகிறார் சித்தார்த். 



தமிழக மக்கள் தங்கள் குடும்பத்தில் ஒருவராக கொண்டாடும் அளவு புகழ் பெற்றுள்ள இவர் 

கடல் கடந்து, கண்டங்கள் கடந்து வாழும் தமிழ் மக்கள் மனங்களிலும் இடம் பிடித்து விட்டார்.  நடிகர் சித்தார்த்துக்கு Sidharth_kumaaran_fanclub என்ற பெயரில் கனடா, அமேரிக்கா, ஐரோப்பா, மலேசியா, சிங்கப்பூர் மற்றும் ஸ்ரீலங்காவில் ரசிகர் மன்றங்கள் சில ஆண்டுகளாகவே  இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது. வெளிநாட்டு நிகழ்ச்சிகள் மற்றும் மாடலிங், திரைப்பட, விளம்பர படப்பிடிப்புகளுக்கு மத்தியில் தற்போது வெள்ளித்திரையை நோக்கி சித்தார்த்தின் பயணம் 2021இல் துவங்கியுள்ளது. மிக விரைவில் இந்த திறமையான, அழகான நாயகனை வெள்ளித்திரையில் ரசிகர்கள் காணலாம்.

www.actorsidharth.com


Winsun C.M  PRO

No comments:

Post a Comment