Featured post

Next big leap by Producer Bazaar: Producer Bazaar to co-host India Joy 2025, India’s leading

 Next big leap by Producer Bazaar: Producer Bazaar to co-host India Joy 2025, India’s leading entertainment technology industry event, in pa...

Tuesday, 2 February 2021

இசையில் கலக்கி வரும் சைமன்

 இசையில் கலக்கி வரும் சைமன் K கிங் ! 


உயிரின் ஆன்ம மொழி இசை. இசையிம் பலம் அளப்பரியது. ஒரு நல்ல இசை என்பது நம் உயிரினுள் புகுந்து நம்மை சாந்தப்படுத்திவிடும். திரையின் கதைகளுக்கு உயிரூடுவதே இசைதான். ஒரு திரைப்படத்தின்  மையம் என்பது இசையமைப்பாளரின் கையில் தான் இருக்கிறது. நம் உணர்வுகளை தூண்டி விடுபவர் அவரே. அந்த வகையில் தமிழ் சினிமாவில் தன் தனித்தன்மை மிக்க இசையால் அழியதொரு இடத்தை பிடித்திருப்பவர் தான் இசையமைப்பாளர் சைமன் K கிங். 

சைமன் K கிங் ஒவ்வொரு படத்திலும் முற்றிலும் வித்தியாசமான இசையால் ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.  இயக்குநர் சசி இயக்கத்தில் 555 படம் மூலம் அறிமுகமான இவர் சத்யா, விஜய் ஆண்டனியின் கொலைகாரன், சரண் இயக்கத்தில் மார்க்கெட் ராஜா என தொடர்ந்து ரசிகர்களின் இதயம் தொடும் இசையை தந்து அசத்தி வருகிறார். அவரது கலக்கலான இசையில் சமீபத்திய படமான “கபடதாரி” பெரும் பாராட்டுக்களை குவித்து வருகிறது. இவரது இசையில் 555 படத்தின் “விழியிலே”, சத்யா படத்தின் “யவனா” பாடலும் அனைத்து  இசை காதலர்களின் விருப்ப பட்டியலிலும் இடம்பெற்றிருக்கும். 


தமிழ் மட்டுமல்லாது மற்ற மொழிகளிலும் தனது இசைப்பயணத்தை துவங்கியுள்ளார் சைமன்  K கிங். தற்போது கபடதாரி படத்தின் தெலுங்கு பதிப்பு, தமிழ் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் WWW படங்களில் பணியாற்றி வருகிறார். மேலும் புதியதாக OTT தளத்திலும் தற்போது கால்பதித்திருக்கிறார். ‘கொலைகாரன்’ படப்புகழ் ஆண்ட்ரு லூயிஸ் இயக்கத்தில் உருவாகும் Amazon Prime இணைய தொடருக்கு இசையமைக்கிறார்.

No comments:

Post a Comment