Featured post

Pottuvil Asmin Recites Tribute Poem Before Vairamuthu at “Miller” Film Launch in Jaffna

 Pottuvil Asmin Recites Tribute Poem Before Vairamuthu at “Miller” Film Launch in Jaffna The launch of the Tamil film “Miller” in Jaffna wit...

Tuesday, 9 February 2021

மீண்டும் இணையும் இயக்குநர் சாம்

 மீண்டும் இணையும் இயக்குநர் சாம் ஆண்டன் நடிகர் அதர்வா முரளி கூட்டணி, பிரமாண்டமாக தயாராகும் ஆக்சன் திரைப்படம் ! 



“100” திரைப்படம் மூலம் மிகப்பெரும் வெற்றியை தந்த இயக்குநர் சாம் ஆண்டன், நடிகர் அதர்வா முரளி கூட்டணி மீண்டுமொரு பிரமாண்ட ஆக்சன் படத்தில் இணைகிறது. மாதவன், ஷ்ரதா ஶ்ரீநாத் நடிப்பில்   சமீபத்தில் வெளியாகி வெற்றிபெற்ற  “மாறா”  திரைப்படத்தினை தயாரித்த Pramod Films  தயாரிப்பாளர் சுருதி நல்லாப்பா இப்படத்தினை தயாரிக்கிறார். 





நடிகர் அதர்வா முரளி  நாயகனாக நடிக்கும் இந்த புதிய திரைப்படம் ஒரு தந்தைக்கும் மகனுக்கும் இடையிலான பாசப்பிணைப்பபை மையப்படுத்தி ஆக்சன் திரில்லர் பாணியில் உருவாகிறது. பல புதுமையான ஆக்சன் காட்சிகள் படத்தில் இடம்பெற்றுள்ளது. இப்படத்தின் காட்சிகளுக்காக சிறப்பு பயிற்சி மேற்கொண்டு தயாராகி வருகிறார் நடிகர் அதர்வா. படத்தின் பின்னணி இசை மிகவும் முக்கியத்துவம் கொண்டிருப்பதால் “மாறா” படம் மூலம் அனைவரையும் கவர்ந்திழுத்த இசையமைப்பாளர் ஜிப்ரான் அவர்களையே, இப்படத்திற்கும் ஒப்பந்தம் செய்துள்ளனர் படக்குழுவினர். படத்தொகுப்பை ரூபன் செய்ய, கிருஷ்ணன் வெங்கட் இப்படத்தின் ஒளிப்பதிவை செய்கிறார்


பாலிவுட்டில் 40 க்கும் மேற்பட்ட வெற்றிபடங்களை தந்திருக்கும் Pramod Films நிறுவனம் இப்படத்தினை பெரும் பொருட் செலவில் தயாரிக்கிறது. இணையவழி குற்றங்கள்  ( Dark Web) தான் இப்படத்தின்  பின்னணி கதைக்களமாக அமைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் ஆக்சன் மட்டுமல்லாமல் நகைச்சுவையும் பிரதானமாக கையாளப்பட்டுள்ளது. 


பிரதீக் சக்தவர்த்தி, சுருதி நல்லப்பா இணைந்து இப்படத்தினை தயாரிக்கின்றனர். இப்படத்தின் முழுமையான நடிகர் குழு மற்றும் தொழில்நுட்ப குழு பற்றிய அறிவிப்பு விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

No comments:

Post a Comment