Featured post

நடிகர் ரஜினிகாந்தை மனதில் வைத்து எழுதிய கதைதான் 'ட்யூட்'~ இயக்குநர் கீர்த்தீஸ்வரன்

 *நடிகர் ரஜினிகாந்தை மனதில் வைத்து எழுதிய கதைதான் 'ட்யூட்'~ இயக்குநர் கீர்த்தீஸ்வரன்!* *ரஜினி- ஸ்ரீதேவி ஜோடி போல 'ட்யூட்' பட...

Sunday, 21 February 2021

மீம்’ கலைஞராக நடிக்கும் ‘சாம்பியன்’ விஷ்வ

 ‘மீம்’ கலைஞராக நடிக்கும் ‘சாம்பியன்’ விஷ்வ


சுசீந்திரன் இயக்கத்தில் கால்பந்து வீரராக அறிமுகமானவர் விஷ்வா. கால் பந்து பயிற்சி பெற்று நடித்து, முதல் படத்திலேயே அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். தற்போது ‘மீம்’ கலைஞன் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். அதுபற்றி அவர் கூறியதாவது:-





“சாம்பியன்” படத்தில்  என் நடிப்பை பார்த்து பிடித்து விட்டு 

KH பிக்சர்ஸ் தயாரிப்பாளர் ஹரி பாஸ்கரன் சார் என்னை பாராட்டினார். அதன் பின், டைரக்டர் பாரதி பாலா கதையை சொல்லி அதற்கு நான் பொருத்தமாக இருப்பேன் என்று சொல்லி என்னை தேர்ந்தெடுத்தார். இப்படம் குற்றத்தைக் கண்டுபிடிக்கும் திரில்லர் படமாக இளைஞர்களை கவரும் படியாக இருக்கும்.


நான் அறிமுகமான முதல் படத்தில் கால்பந்து வீரராக பயிற்சி எடுத்தேன். இப்போது ‘மீம்’ கலைஞனாக பயிற்சி எடுத்து வருகிறேன். வினோத் என்கிற ‘மீம்’ கலைஞரோடு பயிற்சி எடுத்து வருகிறேன். அவரிடம் ‘மீம்’ பற்றி நுணுக்கங்களைக் கற்றுக் கொண்டேன்,என்றார். 


மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களை தேர்வு நடைப்பெற்று வருகிறது. 

தயாரிப்பு: கோமளா, ஹரி பாஸ்கரன்

நிறுவனம்: KH picturs

No comments:

Post a Comment