Featured post

Teja Sajja Starrer Mirai Crosses 100 Cr Gross Worldwide, Breaches $2 Million Mark In USA

 *Teja Sajja Starrer Mirai Crosses 100 Cr Gross Worldwide, Breaches $2 Million Mark In USA* Teja Sajja is proving true to his super hero ima...

Thursday, 5 May 2022

இவ்வளவு அழுத்தமான ஒரு திரைப்படத்தில் நான் நடிப்பேன்

இவ்வளவு அழுத்தமான  ஒரு திரைப்படத்தில் நான் நடிப்பேன் என்பதை நான் கற்பனை செய்துகூட பார்த்ததே இல்லை

'சாணி காயிதம் திரைப்படத்தில் தனது கதாபாத்திரம் பற்றி  பகிர்ந்துள்ளார் நடிகை கீர்த்தி சுரேஷ்.

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர் செல்வராகவனை நடிகராக அறிமுகப்படுத்தியதோடு, இதுவரை ரசிகர்கள் பார்த்திராத தோற்றத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்க மிக அழுத்தமான படமாக  'சாணிக்காயிதம்'  திரைப்படம் உருவாகியுள்ளது. இயக்குநர் செல்வராகவனுடன் திரையை பகிர்ந்து கொள்ளும் நடிகை கீர்த்தி சுரேஷ், இப்படத்தில் ‘தலைமுறை தலைமுறையாக, அநீதி திணிக்கப்படும் குடும்பத்தில்  சிக்கி தவிக்கும் பொன்னி’ என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.


மேலும், இந்த பழிவாங்கும் க்ரைம் த்ரில்லரில் கீர்த்தி ஒரு புதிய கதாபாத்திரத்தில் நடிப்பது பார்வையாளர்களுக்கு மிகவும் சுவாரஸ்யமான ஒன்றாக இருக்கும். இந்த கதாபாத்திரத்திற்காக நடிகை கீர்த்தி சுரேஷ் செய்த முன் தயாரிப்புகள்  பற்றி பேசுகையில், "முன்பு இனிமையாகவும், வசீகரமாகவும் இருக்கும் கதாபாத்திரங்களில் நடித்த எனக்கு, பொன்னி கதாபாத்திரத்திற்காக மிகவும் முரட்டுத்தனமான, ரத்தம் சதையும் நிறைந்த,  நடிப்பையும்  வெளிப்படுத்த வேண்டும் என்று இயக்குநர் கூறினர். அதுபோக இந்த கதாபாத்திரத்திற்காக ஒல்லியாக வேண்டும் என கூறினர். முன் தயாரிப்பு விஷயத்தில் உண்மையில் நான் ஒன்றும் செய்யவில்லை என்று தான் நினைக்கிறேன். நான் அந்த உடையை அணிந்து கொண்டு,  அந்த மேக்கப்பை போட்டுக்கொண்டு செட்டுக்கு சென்றதும் மடடோர் வேனில் ஏறி நின்று அருண் மற்றும் செல்வா சாரைப் நான் பார்த்த நிமிடம் நான் கதாபாத்திரத்திற்கு ரெடியாகி விட்டேன். இவ்வளவு ஆழமான  அழுத்தமான ஒரு படத்தில் நான் இருப்பேன் என்பதை நான் கற்பனை செய்து பார்த்ததே இல்லை, ஆரம்பத்தில் இந்த படம்  கடினமானதாக இருந்தது. ஆனால் கதை முன்னேறிச் செல்ல செல்ல எனக்கு பொன்னி கேரக்டரில் நடிப்பது எளிதாகி விட்டது. என்னை மேம்படுத்துவதற்கும் பரிசோதனை செய்வதற்கும் முழு சுதந்திரம் எனக்கு கிடைத்தது.இப்படம் ஒரு மிகச்சிறந்த அனுபவம்"

ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள சாணிக்காயிதம், உலகம் முழுவதும் மே 6 அன்று பிரைம் வீடியோவில் ஸ்ட்ரீமிங் ஆகவுள்ளது. இந்த படம் தெலுங்கில் ‘சின்னி’ என்ற பெயரிலும், மலையாளத்தில் ‘சாணிக்காயிதம்’ என்ற பெயரிலும் வெளியாகவுள்ளது.


No comments:

Post a Comment