Featured post

Aamir Khan launches his latest theatrical superhit film 'Sitaare Zameen Par' on YouTube

 *Aamir Khan launches his latest theatrical superhit film 'Sitaare Zameen Par' on YouTube* In an unprecedented move to democratize c...

Thursday, 5 May 2022

விமல் நடிக்கும் 'தெய்வ மச்சான்' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

             விமல் நடிக்கும் 'தெய்வ மச்சான்' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு


'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி வெளியிட்ட விமலின் 'தெய்வ மச்சான்' ஃபர்ஸ்ட் லுக்

நடிகர் விமல் நடிப்பில் தயாராகியிருக்கும் புதிய படத்திற்கு 'தெய்வ மச்சான்' என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.

இயக்குநர் மார்ட்டின் நிர்மல்குமார் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் 'தெய்வ மச்சான்'. இதில் விமல் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக புதுமுக நடிகை நேகா நடிக்கிறார். இவர்களுடன் பாண்டியராஜன், 'ஆடுகளம்' நரேன், பாலசரவணன், வேல. ராமமூர்த்தி, முருகானந்தம், வத்சன் வீரமணி, தங்கதுரை, பிக் பாஸ் அனிதா சம்பத், தீபா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். கேமில் ஜே. அலெக்ஸ் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு காட்வின் இசை அமைக்கிறார். படத்தின் திரைக்கதையை இயக்குநர் மார்ட்டின் மற்றும் வத்சன் இணைந்து எழுதியிருக்க, படத்தின் பின்னணி இசையை அஜீஷ் கவனிக்கிறார். எடிட்டர் இளையராஜா படத்தொகுப்பை மேற்கொள்கிறார். கிராமிய பின்னணியில் ஃபேண்டசி ஜானரில் தயாராகும் இந்த திரைப்படத்தை உதய் புரொடக்சன்ஸ் மற்றும் மேஜிக் டச் பிக்சர்ஸ் ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் உதயகுமார், கீதா உதயகுமார் மற்றும் எம். பி. வீரமணி ஆகியோர் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கிறார்கள்.

படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், '' கிராமிய பின்னணியில் ஃபேன்டஸியுடன் கூடிய, குடும்ப உறவுகளை மையப்படுத்திய திரைக்கதை. இதில் நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருப்பதால் ரசிகர்களை கவரும்'' என்றார்.

'விலங்கு' வலைதள தொடரின் பிரம்மாண்டமான வரவேற்புக்கு பிறகு விமல் நடிப்பில் தயாராகியிருக்கும் 'தெய்வ மச்சான்' படத்திற்கு பார்வையாளர்களிடையே பெரும் ஆதரவு கிடைத்துவருகிறது. படத்தின் தலைப்பும், ஃபர்ஸ்ட் லுக்கில் விமலின் தோற்றமும் ரசிகர்களை கவர்ந்திருப்பதால், 'தெய்வ மச்சான்'  படத்தின் பர்ஸ்ட் லுக்கிற்கு இணையவாசிகளிடம் பெரும் வரவேற்பும் கிடைத்து வருகிறது.

No comments:

Post a Comment