Featured post

GANDHI - Mantras of Compassion', a Global Musical Tribute to MAHATMA GANDHI*

 *'GANDHI - Mantras of Compassion', a Global Musical Tribute to MAHATMA GANDHI* *‘GANDHI – Mantras of Compassion’ - A Transformation...

Thursday, 3 July 2025

டெண்ட்கொட்டாவில் மிடில் கிளாஸ் குடும்பத்தின் சாகசங்கள் — மக்களின் மனதைத் திருப்திப்படுத்தும் ‘Madras Matinee

 டெண்ட்கொட்டாவில் மிடில் கிளாஸ் குடும்பத்தின் சாகசங்கள் — மக்களின் மனதைத் திருப்திப்படுத்தும் ‘Madras Matinee’ இப்போது ஸ்ட்ரீமிங்! செய்ய்யுங்கள்

 






அறிமுக இயக்குநர் கார்த்திகேயன் மணியின் இயக்கத்தில் உருவான 'மெட்ராஸ் மேட்னி' திரைப்படம், மிடில் கிளாஸ்  குடும்ப வாழ்க்கையை இரசிக்க வைக்கும் கதையாக நம் முன் கொண்டு வருகிறது.

 

அறிவியல் புனைவு கதைகள், துப்பறியும் நாவல்கள் எழுதும் ஜோதி ராமையாவிற்கு (சத்யராஜ்), சாமானியர் ஒருவரைப் பற்றி சுவாரஸ்யமான ஒரு கதையை எழுத வேண்டும் என்று ஒரு சவால் வருகிறது. மிகக் குறைந்த வருமானத்துடன் குடும்பத்தை நடத்தும் கண்ணனும், ('காளி' வெங்கட்) அவரது மனைவி கமலமும் பிள்ளைகளின் எதிர்காலத்தை மாற்ற போராடும் வாழ்க்கை காட்சிகள்  மிகவும் இயல்பானவையும் நம்மை நெகிழ வைக்கும் வகையிலும் சித்தரிக்கப்படுகின்றன.

 

முதன்மை அம்சங்களாக  குடும்ப உறுப்புகளுக்கிடையேயான ஈகோ,சிக்கல்கள், பொருளாதாரத் தட்டுப்பாடுகள்,

தந்தை-மகள் இடையிலான சண்டைகள்,

உறவுகளுக்கிடையேயான மனக்கசப்புகள் இவை அனைத்தும், ஜோதி ராமையாவின் பார்வையிலும் கதாநாயகனின் குரலிலும் கூறப்படுவதால், ஒரு ‘கதைக்குள் கதை’ வடிவில் நம்மை இணைத்துக் கொள்கின்றன.

 

சிறப்பம்சங்கள் நடிகர்களின் உண்மைத்தன்மை நிறைந்த நடிப்பு

இயல்பு வாழ்வின் நெருக்கங்களை அழகாக சித்தரித்த கதைக்களம்,

இறுதிக்காட்சியின் நெகிழ்ச்சியான பளிச்சிடல்,இயக்குனர் கார்த்திகேயனின் உணர்வோட்டம் நிறைந்த கதை சொல்லல் சரியான அளவில் நம்மை கதையோடு ஒன்றை வைக்கின்றன.

 

பல இயக்குநர்களும், விமர்சகர்களும் பாராட்டிய இந்த திரைப்படம் தற்போது டெண்ட்கொட்டா OTTயில் வெளியாகி இருக்கிறது.மேலும், மலேசிய தமிழர்கள்  இயக்கிய கன்னிரா? திரைப்படம் இந்த வாரம் வெளியிடப்பட்டு இருக்கிறது

 

டெண்ட்கொட்டா — குறைந்த சந்தா தொகையில் 4K மற்றும் Dolby Atmos தரத்துடன் தமிழ் சினிமா ரசிகர்களுக்கான சிறப்பான legally streaming சேவை!

 

🎬 இந்த வாரம், உங்களின் குடும்பத்துடன் இணைந்து

‘Madras Matinee’-யை டெண்ட்கொட்டாவில் ஸ்ட்ரீம் செய்ய மறவாதீர்கள்!

No comments:

Post a Comment