Featured post

இந்த கிறிஸ்துமஸில், நடுத்தர வர்க்க கனவுகளின் கலகலப்பபன உலகைச்

 *இந்த கிறிஸ்துமஸில், நடுத்தர வர்க்க கனவுகளின் கலகலப்பபன உலகைச் சந்திக்க தயாராகுங்கள் !  – “மிடில் கிளாஸ்” திரைப்படம்,  வரும்  டிசம்பர் 24 ம...

Thursday, 3 July 2025

சத்யராஜ் - காளி வெங்கட் நடித்த 'மெட்ராஸ் மேட்னி' ஜூலை நான்காம் தேதியன்று டிஜிட்டல் தளங்களில் வெளியீடு*

 *சத்யராஜ் - காளி வெங்கட் நடித்த 'மெட்ராஸ் மேட்னி' ஜூலை நான்காம் தேதியன்று டிஜிட்டல் தளங்களில் வெளியீடு*



மெட்ராஸ் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளரும், இயக்குநருமான கார்த்திகேயன் மணி இயக்கத்தில் சத்யராஜ், காளி வெங்கட், ரோஷினி ஹரிப்பிரியன், விஷ்வா நடிப்பில் கடந்த ஜூன் மாதம் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்ற திரைப்படம் 'மெட்ராஸ் மேட்னி'


திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களின் பாராட்டைப் பெற்ற திரைப்படங்களுக்கு டிஜிட்டல் தளங்களிலும் மிகப்பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் மெட்ராஸ் மேட்னி திரைப்படம் ஜூலை நான்காம் தேதியன்று அமேசான் பிரைம் (இந்தியா), சன் நெக்ஸ்ட்,சிம்பிள் சவுத் ( வேர்ல்ட் வைட்) மற்றும் டென்ட் கொட்டா ஆகிய முன்னணி டிஜிட்டல் தளங்களில் வெளியாகிறது. 


நடுத்தர மக்களின் வாழ்வியலை உணர்வுபூர்வமாகவும் , யதார்த்தமாகவும் விவரித்திருக்கும் 'மெட்ராஸ் மேட்னி ' திரைப்படத்திற்கு டிஜிட்டல் தள ரசிகர்களிடத்திலும் வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

No comments:

Post a Comment