HM CREATIONS நிறுவனம் தனது முதல் படைப்பாக 'Love Heart 1997' என்ற திரைப்படத்தை மிகுந்த பொருட்செலவில் தயாரித்து இருக்கிறது…
இதில்
கதாநாயகனாக
SRM கல்லூரியில் விஷ்காம் படித்து, நடிப்பு,நடனம் என சிறுவயது முதலே கற்றுத் தேர்ந்த 'அமித்' நடிக்கிறார்.
தான் தேக்கி வைத்த, ஒட்டு மொத்த திறமையையும் இப்படத்தில் வெளிப்படுத்தியிருக்கிறார்…
கதாநாயகியாக, அழகு தேவதையாக ஹர்ஷாஹரிஷ் நடித்திருக்கிறார்.
இது 1997-ல் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட கதை. இதன் கதை, திரைக்கதை, வசனம் மற்றும் பாடல்களை SA.Babu எழுதியதோடு மட்டுமல்லாமல் இத்திரைப்படத்தை தயாரித்திருக்கிறார்.
இதன் இயக்கத்தை ஒரே வருடத்தில் 60 குறும்படங்கள் இயக்கி பெயர் பெற்ற வரும், திரைத்துறையில் நீண்ட நெடிய அனுபவம் பெற்றருமான ஜின்னாஜி என அன்பாக அழைக்கப்படும் மம்மதலி இயக்கியிருக்கிறார்.
ஒளிப்பதிவு
தினேஷ்குமார், கலை C.K.முஜிபூர் ரஹ்மான்.
நடனம் sujay albi, சண்டைக்காட்சி 'டைகர்' பழனி.
Stills V.Jude, Designs Venkat RK Costumer :
Lakshmi Narayanan
தயாரிப்பு நிர்வாகி: சதிஷ் முத்துகுமார். மக்கள் தொடர்பு: P.மணிகண்டன்
இத்திரைப்படத்தில் 5 பாடல்கள் இடம் பெருகிறது.
5 பாடல்களும் செவிக்கு விருந்து அளிக்கிறது. இசையை இலக்கியன் அமைத்திருக்கிறார். இவ்வருடத்தின் சிறந்த ஆல்பம் என்ற வரிசையில் இந்த
'Love Heart 1997' பாடல்கள் இடம் பெறும் என்பதில் ஐயமில்லை.
'ஹேப்பி நியூ இயர் வந்தது,வந்தது.
ஹேப்பி அள்ளி தந்தது,தந்தது’
என்ற பாடல் இவ்வருடம் மட்டுமல்ல.
இனி எல்லா வருடங்களிலும் டிசம்பர் 31 நள்ளிரவு நிச்சயமாக ஒலிக்கும் அளவிற்கு,
இளைஞர்களை உற்சாகப்படுத்தும் துள்ளல் இசை பாடலாக அமைந்திருக்கிறது...
இத்திரைப்படத்தின் First லுக் போஸ்டரை தமிழ்நாடு திரைப்பட சிறு முதலீட்டு தயாரிப்பாளர்
சங்கத் தலைவர் திரு. ஆர்.கே.அன்புசெல்வன் அவர்களின் பொற்கரங்களால் வெளியிட்டார்.
வரும் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு (டிசம்பர் 2026) இத்திரைப்படம் ரசிகர்களின் பார்வைக்கு திரையரங்குகளில் வெளியீடு செய்ய திட்டமிட்டிருப்பதாக தயாரிப்பாளர்
திரு SA.Babu அவர்கள் தெரிவித்தார்…
#KuttymaTamilTV
#KMMedia
#LoveHeart1997
#KM_Media
#TamilCinema
#லவ்ஹார்ட்1997



No comments:
Post a Comment