Featured post

கவித்துவமான காதல், கண்கவரும் காட்சிகள், ரசிக்க வைக்கும் கெமிஸ்ட்ரியுடன் மனம் வருடும் அழகிய காதல் கவிதையாக வெளியாகியுள்ளது ‘ஹைக்கூ’ திரைப்பட டீசர்!*

 *கவித்துவமான காதல், கண்கவரும் காட்சிகள், ரசிக்க வைக்கும் கெமிஸ்ட்ரியுடன் மனம் வருடும் அழகிய காதல் கவிதையாக வெளியாகியுள்ளது ‘ஹைக்கூ’ திரைப்ப...

Wednesday, 9 September 2026

கவித்துவமான காதல், கண்கவரும் காட்சிகள், ரசிக்க வைக்கும் கெமிஸ்ட்ரியுடன் மனம் வருடும் அழகிய காதல் கவிதையாக வெளியாகியுள்ளது ‘ஹைக்கூ’ திரைப்பட டீசர்!*

 *கவித்துவமான காதல், கண்கவரும் காட்சிகள், ரசிக்க வைக்கும் கெமிஸ்ட்ரியுடன் மனம் வருடும் அழகிய காதல் கவிதையாக வெளியாகியுள்ளது ‘ஹைக்கூ’ திரைப்பட டீசர்!*




*ஏகன், ஸ்ரீதேவி மற்றும் ஃபெமினா ஜார்ஜ் நடிப்பில், யுவராஜ் சின்னசாமி இயக்கத்தில், சித்துகுமார் இசையில் உருவாகியுள்ள ‘ஹைக்கூ’ படத்தின் டீசரை ரொமாண்டிக் ஸ்டார் ஹரிஷ் கல்யாண் வெளியிட்டார்!*


விஷன் சினிமா ஹவுஸ் தயாரிப்பில், ஏகன் நடிப்பில் உருவாகியுள்ள காதல் திரைப்படமான ‘ஹைக்கூ’ திரைப்படத்தின் டீசரை ரொமாண்டிக் ஹீரோ ஹரிஷ் கல்யாண் வெளியிட்டுள்ளார். கண்ணைக் கவரும் பிரமாண்டமான காட்சியமைப்புகள், இளமைத் துள்ளல் நிறைந்த தருணங்கள் மற்றும் ரசிக்க வைக்கும் காதல் உணர்வுகளுடன், புத்துணர்ச்சியான ஒரு காதல் உலகத்தை இந்த டீசர் ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. 


இந்த அழகான கதையில் ஏகன், ஸ்ரீதேவி மற்றும் ஃபெமினா ஜார்ஜ் இருவரும் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இருவர்களுக்கிடையேயான கெமிஸ்ட்ரியும், உணர்வுப்பூர்வமான நடிப்பும் டீசரின் சிறப்பம்சங்களில் ஒன்று. ‘கோழிப்பண்ணை செல்லதுரை’ படத்தில் தனது இயல்பான மற்றும் கிராமத்து கதாபாத்திர நடிப்பால் பாராட்டைப் பெற்ற ஏகன், இப்படத்தில் முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில், நவீனமான, கூலான மற்றும் அப்பாவித்தனம் நிறைந்த இளைஞராக நடித்துள்ளார். அவருக்கு இணையாக ஸ்ரீதேவியும், ஃபெமினா ஜார்ஜூம் தங்களது அழகான நடிப்பால் கவனம் ஈர்க்கின்றனர். இவர்களுக்கிடையேயான இயல்பான கெமிஸ்ட்ரி டீசரின் இனிமையான தருணங்களுக்கு மேலும் வலு சேர்க்கிறது. மேலும், டீசரின் ரசிகர்களுக்கு ஆச்சரியமூட்டும் விதமாக ஃபெமினா ஜார்ஜ் வருகிறார். குறுகிய நேரமே தோன்றினாலும், தனது அழுத்தமான தோற்றத்தின் மூலம் உடனடியாக கவனம் ஈர்க்கிறார்.


‘ஹைக்கூ’ படத்தின் காதல் உணர்வுகளுக்கு சித்து குமாரின் இசை கூடுதல் உயிர் கொடுக்கிறது. குறிப்பாக, கிளாசிக்கல் ராகங்களுடன் இணைந்த மென்மையான வயலின் இசையும், நவீன ஃபியூஷன் இசையும் டீசரின் இதமான காட்சியமைப்புடன் அழகாகப் பொருந்துகின்றன. அவரது பின்னணி இசை, டீசருக்கு மயக்கும் இசை அனுபவத்தை வழங்குகிறது. குறுகிய நேரத்தில், பார்வையாளர்களை ஒரு வண்ணமயமான காதல் உலகிற்குள் அழைத்துச் செல்லும் அனுபவத்தை டீசர் உருவாக்குகிறது. எழுத்தாளர் மற்றும் இயக்குநர் யுவராஜ் சின்னசாமியின் புதுமையான திரை அணுகுமுறை, அனைவருக்கும் பரிச்சயமான காதல் உணர்வுகளை புத்துணர்ச்சியுடன் தருகிறது.


காதல் கதைகள் மீண்டும் தமிழ் சினிமா ரசிகர்களிடையே தனி கவனம் பெற்று வரும் நிலையில், ‘ஹைக்கூ’ டீசர் ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்துள்ளது.  இளம் நடிகர்கள், வண்ணமயமான காட்சிகள், மனதை வருடும் இசை மற்றும் புத்துணர்ச்சியான திரை அணுகுமுறை ஆகியவற்றுடன், இந்தப் படம் காதல் திரைப்படங்களை விரும்பும் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.


மேலும், படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கும் வகையில், ‘ஹைக்கூ’ திரைப்படத்தின் திரையரங்க வெளியீட்டுக்குப் பிந்தைய டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் உரிமையை நெட்ஃபிலிக்ஸ் நிறுவனம், படப்பிடிப்பு நிறைவடைவதற்கு முன்பே கைப்பற்றியுள்ளது. படத்தின் புதுமையான கதை மற்றும் தனித்துவமான திரை அணுகுமுறை ஓடிடி தளத்தின் கவனத்தை ஈர்த்ததைத் தொடர்ந்து, இந்த டிஜிட்டல் உரிமை கணிசமான தொகைக்கு பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


யுவராஜ் சின்னசாமி எழுதி இயக்கியுள்ள இப்படத்தை டாக்டர் டி. அருளானந்து மற்றும் மாத்யூ அருளானந்து ஆகியோர் விஷன் சினிமா ஹவுஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரித்துள்ளனர். இப்படத்தில் ஏகன், ஸ்ரீதேவி மற்றும் ஃபெமினா ஜார்ஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஹரி ஹரன் ராம் கூடுதல் திரைக்கதையில் பங்களித்துள்ளார். பிரியேஷ் குருசாமி ஒளிப்பதிவை மேற்கொண்டுள்ளார். சக்தி பிரணேஷ் படத்தொகுப்பை கவனிக்க, சித்து குமார் இசையமைத்துள்ளார். பிரேம் கலை இயக்குநராக பணியாற்றியுள்ளார்.


காதல் உலகத்தின் அழகிய அனுபவத்தை ரசிகர்களுக்கு வழங்கும் வகையில் வெளியாகியுள்ள டீசரை தொடர்ந்து, ‘ஹைக்கூ’ திரைப்படம் அக்டோபர் 23, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

Haiku’ Teaser – The Cutest Poetry of Love, Painted with Striking Visuals, Breezy Romance & Adorable Chemistry, Wins Hearts!

 *’Haiku’ Teaser – The Cutest Poetry of Love, Painted with Striking Visuals, Breezy Romance & Adorable Chemistry, Wins Hearts!*




_*Romantic Star Harish Kalyan Launched the Teaser of Aegan-Sridevi-Femina George  Starrer; Siddhu Kumar’s Soulful Music and Yuvaraj Chinnasamy’s Vibrant Presentation Add to the Film’s Fresh Appeal.*_


The teaser of Aegan-Sridevi-Femina George  starrer ‘Haiku’, the upcoming romantic entertainer from Vision Cinema House, has been unveiled by popular romantic hero Harish Kalyan, offering audiences a colourful, youthful and poetic glimpse into a love story that instantly catches the eye with its striking visuals and refreshing treatment. Filled with vibrant frames, breezy moments and an unmistakable fragrance of romance, the teaser introduces a world that feels contemporary, charming and wonderfully alive.

At the centre of this vibrant world are Aegan, Sridevi and Femina George , whose adorable chemistry and expressive moments become one of the teaser’s biggest attractions. Aegan, who earlier won appreciation for his rustic and naturalistic performance in Kozhi Pannai Chelladurai, appears in a refreshing new avatar as an urban, cool and innocent boy-next-door. Sridevi complements him with an equally engaging presence, with their chemistry lending the teaser its sweetest moments. The teaser also springs a surprise towards its closing moments with the arrival of Femina George, who makes her presence felt instantly and manages to steal the spotlight with her brief yet striking appearance.


The romantic mood of Haiku receives a major lift from Siddhu Kumar’s music. His soothing background score, particularly the gentle violin passages interwoven with classical ragas and contemporary fusion, beautifully complements the breezy visual treatment and gives the teaser an enchanting musical texture. Within its short runtime, the teaser creates the feeling of stepping into a vibrant romantic universe, while writer-director Yuvaraj Chinnasamy’s presentation adds freshness to the familiar emotions of love.


The teaser has already begun attracting the attention of film enthusiasts, arriving at a time when romantic stories are once again finding a special place among Tamil cinema audiences. With its youthful casting, vibrant visual palette, soulful music and refreshing treatment, Haiku is emerging as an appealing addition to the season’s romantic offerings.


Adding further weight to the film’s prospects, Haiku had already secured its post-theatrical digital streaming rights with Netflix even before the completion of its shooting. The film’s fresh storyline and distinctive approach to presentation caught the attention of the OTT platform, resulting in the rights being acquired for a fancy price. At a time when securing OTT partnerships has become increasingly competitive, the early closure of the deal has further heightened expectations surrounding the film.


Written and directed by Yuvaraj Chinnasamy, Haiku is produced by Dr. D. Arulanandhu and Mathewo Arulanandhu under the banner of Vision Cinema House. The film stars Aegan, Sridevi and Femina George in the lead roles, with Hari Haran Ram contributing additional screenplay. Priyesh Guruswamy handles cinematography, Sakthi Pranesh takes care of editing, Siddhu Kumar composes the music and Prem is the art director.


With its teaser offering a vibrant taste of its romantic world, ‘Haiku’ is slated for a worldwide theatrical release on October 23, 2026.

The Script That Left Screenplay Maestro K. Bhagyaraj Impressed — What Lies Beneath ‘Beep’ Ahead of Its September 18 Release?

 The Script That Left Screenplay Maestro K. Bhagyaraj Impressed — What Lies Beneath ‘Beep’ Ahead of Its September 18 Release?




Legendary Screenwriter K. Bhagyaraj Gifts ‘Beep’ Director a Pen After Reading the Script


“Not ‘Ratsasan’… It’s Closer to ‘Drishyam’” — Director Ila. Shanmuga Sundar on His Intriguing New Crime Drama


From an acclaimed short film to his first feature, director Ila. Shanmuga Sundar is now bringing his distinctive storytelling sensibility to the big screen with Beep.


Having earned recognition for his short film Kattu, Shanmuga Sundar makes his feature-film directorial debut with this unconventional crime drama, which promises to explore crime not through relentless violence, but through characters, psychology and the mysteries surrounding them.


The film features Raghav Ranganathan in a pivotal role, alongside Punjab-based actress Prerna Khanna, Yamini, Sarpatta Parambarai fame Priyadarshini, Nithish Veera and others.


Unlike conventional crime thrillers built around gunfire, graphic violence and bloodshed, Beep takes a more character-driven route, delving into the lives of people who exist on the margins of society.


At the heart of the story is a gifted young man from a modest background, who possesses an extraordinary ability to absorb and retain photographs and visual details with remarkable precision. He earns admission to one of India’s leading business schools, but his personal ambition is surprisingly simple — he wants to meet the girl he admires.


Then, an unexpected incident changes the course of his life.


What follows is an intriguing journey involving his close-knit group of six friends, who find themselves drawn into a situation far beyond anything they could have anticipated. How they attempt to rescue him forms the crux of Beep.


A Crime Drama That Chooses Suspense Over Spectacle


Speaking about the film, director Ila. Shanmuga Sundar explains that Beep deliberately moves away from the familiar grammar of violent crime thrillers.


“This is not a film filled with graphic violence, elaborate fight sequences or gun battles.


It is not structured in a way where a crime occurs every few minutes or where serial killers are constantly murdering people.


There is a murder in the story, but the narrative is driven by its characters and their individual pursuits. That is what makes the journey interesting.


I have nothing against guns or knives, but I felt they were not necessary for this particular story. Beep is not a film like Ratsasan. It is closer in spirit to films such as Drishyam and Thodakkam.”


One of the film’s most noteworthy highlights is the association of legendary screenwriter, director and actor K. Bhagyaraj, who has lent his voice to Beep as its narrator.


Interestingly, Bhagyaraj was initially hesitant to come on board the project. However, after reading the script, his response changed completely.


Impressed by the story, the veteran filmmaker immediately contacted director Ila. Shanmuga Sundar and presented him with a pen as a personal gift.


For a filmmaker celebrated for his extraordinary command over screenplay and storytelling, the gesture became a memorable moment for the debutant director — and a strong indication of the impact the Beep script had made on him.


The trailer of Beep was recently unveiled by director Venkat Prabhu, along with actors Premgi Amaren, Vaibhav, Ajay Raj, Ramya and Preetha Raghav.


The trailer has already crossed one million views on YouTube, generating considerable curiosity among audiences.


For a debut director venturing into a concept-driven crime drama, the response has been particularly encouraging, creating anticipation around what Beep has in store beyond its trailer.


With its character-driven narrative, unconventional approach to crime and emphasis on mystery and psychological tension, Beep is poised to offer audiences a crime drama that seeks to keep them guessing rather than overwhelm them with spectacle.


‘Beep’ hits theatres on September 18.


Technical Crew


Written & Directed by: 

Ila. Shanmuga Sundar

Music: Prashant Vihari

Cinematography: Pradeep Padmakumar

Editing: Abhishek & Vignesh

Action: Ramkumar

Public Relations: A. John

திரைக்கதை மன்னன் கே.பாக்யராஜை வியக்க வைத்த ஸ்கிரிப்ட் ; செப்-18ல் வெளியாகும் 'பீப்' பட ரகசியங்கள் என்ன ?

 *திரைக்கதை மன்னன் கே.பாக்யராஜை வியக்க வைத்த ஸ்கிரிப்ட் ; செப்-18ல் வெளியாகும் 'பீப்' பட ரகசியங்கள் என்ன ?* 




*'பீப்' பட இயக்குநருக்கு பேனா பரிசளித்த திரைப்பட ஜாம்பவான் கே.பாக்யராஜ் ;  அப்படி என்ன கதை ?* 


*‘ராட்சசன்' இல்ல... ஆனா 'த்ரிஷ்யம்' ; புதிய கிரைம் டிராமா ‘பீப்’ குறித்து இயக்குநர் சண்முக சுந்தர்* 



‘கட்டு' (Bind) என்கிற குறும்படத்தை இயக்கி பாராட்டுக்களைப் பெற்ற இல.சண்முக சுந்தர் வெள்ளித்திரையில் இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘பீப்’..


இப்படத்தில் ராகவ் ரங்கநாதன் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். பஞ்சாப்பைச் சேர்ந்த பிரேர்ணா கண்ணா, யாமினி, சார்பட்டா பரம்பரை பிரியதர்ஷினி, நிதிஷ் வீரா உள்ளிட்டோர் இதில் நடித்துள்ளனர்.


துப்பாக்கிகள் மற்றும் இரத்தம் சிந்தும் காட்சிகள் இல்லாத ஒரு கிரைம் டிராமாவாக, சமூகத்தில் விளிம்பு நிலையில் இருக்கும் மனிதர்களைப் பற்றிய கதையாக இது உருவாகியுள்ளது.. 


எளிய பின்னணியில் இருந்து வரும், புகைப்படங்களை அல்லது காட்சிகளைத் துல்லியமாக உள்வாங்கும் திறன் கொண்ட ஒரு திறமையான இளைஞன், இந்தியாவின் தலைசிறந்த பிசினஸ் பள்ளிக்குச் செல்கிறான். அவனது நோக்கம் தனக்குப் பிடித்தமான நாயகியைச் சந்திப்பது மட்டுமே. ஆனால் எதிர்பாராதவிதமாக வாழ்க்கையை மாற்றும் ஒரு நிகழ்வு நடக்கிறது. அவனது ஆறு நண்பர்கள் கொண்ட குழு அதிலிருந்து அவனை எப்படி மீட்கிறது என்பதுதான் இந்தப் படத்தின் கதை.


*படம் குறித்து, இயக்குநர் .இல.சண்முக சுந்தர் மேலும் கூறும்போது,* 


“இது இரத்தம் தெறிக்கும் வன்முறை, சண்டைகள் அல்லது துப்பாக்கி காட்சிகள் நிறைந்த படம் அல்ல. 


படத்தின் ஒவ்வொரு நொடியும் ஒரு குற்றச் சம்பவம் நடப்பது போலவோ அல்லது சீரியல் கில்லர்கள் மக்களைக் கொல்வது போலவோ இது இருக்காது. 


கொலையும் நடக்கும், ஆனால் கதை அதன் கதாபாத்திரங்கள் மற்றும் அவர்களின் தேடல்களுடன் சுவாரஸ்யமாக நகரும். 


எனக்கு துப்பாக்கிகள், கத்திகள் மீது எந்த எதிர்ப்பும் இல்லை; ஆனால் இந்தப் படத்திற்கு அவை தேவையில்லை என்று நினைத்தேன். இது 'ராட்சசன்' போன்ற படம் அல்ல, மாறாக 'த்ரிஷ்யம்' மற்றும் 'தொடக்கம்' போன்ற ஜானரைச் சேர்ந்தது" என்று கூறியுள்ளார்.


மறைந்த இயக்குநர், திரைக்கதை மன்னன் கே.பாக்யராஜ் இப்படத்தின் கதைசொல்லியாக குரல் கொடுத்துள்ளார் என்பது ஹைலைட்டான ஒன்று.. ஆரம்பத்தில் அவர் இந்தப் படத்தில் பணியாற்றத் தயங்கினாலும், படத்தின் கதையைப் படித்தவுடன் அவருக்குப் பிடித்திருந்ததால் இயக்குநர் இல.சண்முக சுந்தரை உடனடியாக அழைத்து,  ஒரு பேனாவை பரிசாகக் கொடுத்துள்ளார். அந்த அளவுக்கு படத்தின் கதை அந்த திரைக்கதை மன்னனை ஈர்த்துள்ளது.


சமீபத்தில் இயக்குநர் வெங்கட்பிரபு, நடிகர்கள் பிரேம்ஜி அமரன், வைபவ், அஜய் ராஜ், ரம்யா, பிரீத்தா ராகவ் ஆகியோர் பீப் படத்தின் ட்ரெய்லரை வெளியிட்டனர். 


தற்போதுவரை யூட்யூப்பில் ஒரு மில்லியன் பார்வையாளர்களுக்கு மேல் இதைப் பார்த்து இரசித்துள்ளனர். ஒரு அறிமுக இயக்குநரின் புதிய படத்திற்கு இந்த அளவு வரவேற்பு கிடைத்திருப்பது திரையுலகிலும் ரசிகர்கள் மத்தியிலும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.  


வரும் செப்-18ஆம் தேதி ‘பீப்’ படம் திரையரங்குகளில் வெளியாகிறது.


*தொழில்நுட்பக்  கலைஞர்கள் விவரம்* 


இயக்கம் ; இல.சண்முக சுந்தர்

இசை ; பிரசாந்த் விஹாரி 

ஒளிப்பதிவு ; பிரதீப் பத்மகுமார் 

படத்தொகுப்பு ; அபிஷேக் மற்றும் விக்னேஷ் 

ஆக்சன் காட்சிகள் ; ராம்குமார்

மக்கள் தொடர்பு ;

A. ஜான்

From Fan Power to Social Power: Allu Arjun Fans Take HPV Awareness to 3 Lakh Girls Across India

 *From Fan Power to Social Power: Allu Arjun Fans Take HPV Awareness to 3 Lakh Girls Across India*








8 States. 820 School Awareness Events. 3 Lakh Girls Reached. One Powerful Fan Movement.


Taking fandom beyond cinema and celebrations, Allu Arjun fans across eight states have come together to conduct 820 HPV awareness programmes in schools, reaching nearly 3 lakh girl students across India.


Driven through the Allu Arjun Fans Association (AAFA), the initiative has been carried out across Andhra Pradesh, Telangana, Odisha, Tamil Nadu, Kerala, Maharashtra, Karnataka and the Andaman & Nicobar Islands, taking HPV awareness directly into schools and communities.


The programmes have focused on creating awareness among young girls about HPV, its prevention and the importance of vaccination, while encouraging students and families to seek appropriate guidance from qualified healthcare professionals.


What makes the initiative particularly significant is its grassroots scale. Instead of limiting fan activities to celebrations and film-related events, AAFA members have used their extensive network across states to take an important health-awareness message directly to schools.


820 events. Nearly 3 lakh girls reached. Eight states.


The numbers reflect not just the scale of the initiative, but the ability of a nationwide fan community to come together with a shared purpose.


The campaign also represents a new dimension of Allu Arjun’s nationwide connect, with his fan community increasingly using its collective strength for meaningful initiatives beyond cinema.


For AAFA, the objective is simple—to use the power of its network to create awareness, encourage conversations and help more families understand the importance of HPV prevention and vaccination.


From celebrating a star to creating an impact, Allu Arjun’s fan community is turning fan power into social power.

ஐகான் ஸ்டார்’ அல்லு அர்ஜுன் ரசிகர்கள் இந்தியா முழுவதும் 3 லட்சம் மாணவிகளிடம் HPV விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளனர்!

 *’ஐகான் ஸ்டார்’ அல்லு அர்ஜுன் ரசிகர்கள் இந்தியா முழுவதும் 3 லட்சம் மாணவிகளிடம் HPV விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளனர்!*








*8 மாநிலங்களில், 820 பள்ளிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தியிருப்பதன் மூலம் 3 லட்சம் மாணவிகள் பயனடைந்தனர்!*


சினிமா மற்றும் கொண்டாட்டங்களைத் தாண்டி ரசிகர்கள் இயக்கத்தை சமூக நலனுக்கான முயற்சியாக மாற்றும் வகையில், ’ஐகான் ஸ்டார்’ அல்லு அர்ஜுன் ரசிகர்கள் 8 மாநிலங்களில் இணைந்து 820 HPV விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளனர். இதன் மூலம் இந்தியா முழுவதும் சுமார் 3 லட்சம் மாணவிகளிடம் HPV குறித்த விழிப்புணர்வு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

 

அல்லு அர்ஜூன் ஃபேன்ஸ் அசோசியேஷன்(AAFA) சார்பில் முன்னெடுக்கப்பட்ட இந்த முயற்சி ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, ஒடிசா, தமிழ்நாடு, கேரளா, மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் அந்தமான் & நிக்கோபார் தீவுகள் என 8 மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம் பள்ளிகள் மற்றும் சமூகத்திற்கு நேரடியாக HPV குறித்த விழிப்புணர்வு கொண்டு செல்லப்பட்டது.


இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளின் மூலம், இளம் மாணவிகளுக்கு HPV வைரஸ், அதனைத் தடுக்கும் வழிமுறைகள் மற்றும் HPV தடுப்பூசியின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. மேலும், மாணவிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் தகுதியான சுகாதார நிபுணர்களிடம் உரிய மருத்துவ ஆலோசனைகளைப் பெறவும் ஊக்குவிக்கப்பட்டனர்.


ரசிகர் மன்ற செயல்பாடுகள் சினிமா கொண்டாட்டங்கள் மற்றும் திரைப்பட நிகழ்ச்சிகள் என ஒரு வட்டத்திற்குள் சிக்காமல் பல்வேறு மாநிலங்களில் உள்ள தங்களது விரிவான ரசிகர்கள் வலையமைப்பை பயன்படுத்தி, முக்கியமான சுகாதார விழிப்புணர்வு செய்தியை நேரடியாக பள்ளிகளுக்கு கொண்டு சென்றுள்ளனர் AAFA உறுப்பினர்கள். 820 நிகழ்ச்சிகளை 8 மாநிலங்களில் நடத்தியிருப்பதன் மூலம் சுமார் 3 லட்சம் மாணவிகள் பயனடைந்துள்ளனர். 


இந்த எண்ணிக்கைகள் இந்த முயற்சியின் மிகப்பெரிய அளவை மட்டுமல்லாமல், நாடு முழுவதும் உள்ள ரசிகர்களால் ஒரே நோக்கத்திற்காக ஒன்றிணைந்து செயல்பட முடியும் என்பதையும் வெளிப்படுத்துகின்றன. இந்த இயக்கம், சினிமாவைத் தாண்டிய அல்லு அர்ஜுனின் நாடு தழுவிய ரசிகர் தொடர்பின் மற்றொரு பரிமாணத்தையும் வெளிப்படுத்துகிறது. அவரது ரசிகர்கள், தங்களது கூட்டு பலத்தை சினிமாவுக்கு அப்பாற்பட்ட அர்த்தமுள்ள சமூக நல முயற்சிகளுக்காக பயன்படுத்தி வருகின்றனர்.


தங்களது ரசிகர் பலத்தைப் பயன்படுத்தி விழிப்புணர்வை ஏற்படுத்துவது, HPV குறித்து உரையாடல்களை உருவாக்குவது மற்றும் HPV தடுப்பு மற்றும் தடுப்பூசியின் முக்கியத்துவத்தை அதிகமான குடும்பங்கள் புரிந்துகொள்ள உதவுவதே இந்த முயற்சியின் நோக்கம். ஒரு நட்சத்திரத்தைக் கொண்டாடுவதில் தொடங்கி, சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் நிலைக்கு நடிகர் அல்லு அர்ஜுனின் ரசிகர்கள் செயல்பட்டு வருகிறார்கள்.

இளைய திலகம் பிரபு நடிக்கும் நகைச்சுவை படம் "அழகிய லைலா" படபிடிப்புடன் தொடங்கியது.

 இளைய திலகம் பிரபு நடிக்கும் நகைச்சுவை படம் "அழகிய லைலா" படபிடிப்புடன் தொடங்கியது.





ஜெயா டிவி நிர்வாக இயக்குனர் டாக்டர். விக்ரம் PSJ  கிளாப் அடித்து தொடங்கி வைத்தார்.

=======================


 ஏ.ஆர்.எம்.ஸ்டுடியோஸ் மற்றும் யோகா ஸ்டுடியோ சார்பில் ஏ.ஆர்.மதியழகன், ஆரத்தி இருவரும் இணைந்து தயாரிக்கும் புதிய படம் "அழகிய லைலா.

 முக்கிய வேடத்தில் இளைய திலகம் பிரபு நடிக்கிறார். கதாநாயகியாக அப்சரா ராணி, யோகி பாபு, தம்பி ராமையா, விடிவி கணேஷ்,கிங்ஸ்லி, சரத், பூவையார் உட்பட பலர் நடிக்கிறார்கள். C.சத்யா - இசையமைப்பாளர், வினோத் பெருமாள்- ஒளிப்பதிவாளர்,

கிரேசன்- படத்தொகுப்பாளர், முஜிபூர் ரகுமான் - கலை இயக்குனர், 

எம்.சண்முகவேல் - நிர்வாகத் தயாரிப்பாளர் , வினு - தயாரிப்பு நிர்வாகி.



முழுக்க முழுக்க நகைச்சுவை திரைப்படமாக உருவாகும் இந்த படத்தின் தொடக்க விழா சென்னை அருகே கெருகம்பாக்கத்தில் உள்ள நாச்சியார் ஹவுஸ் படப்பிடிப்பு தளத்தில்  இன்று படப்பிடிப்புடன் தொடங்கியது.

 இளைய திலகம் பிரபு  பேசுகையில், "இந்தப் படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர் எல்லோரும் கேரளாவில் இருந்து வந்திருக்கிறார்கள். மலையாளத்தில் படங்களை தயாரித்திருக்கிறார்கள். இயக்குனர் ரெஜித் மலையாளத்தில் முதல் படத்தை இயக்கியிருக்கிறார். இந்த படம் தமிழில் அவருக்கு முதல் படம். இந்த படத்தின் கதையை நான் கேட்க வேண்டும் என்று தயாரிப்பாளர் கேட்டுக்கொண்டார். ஏற்கனவே, இயக்குனர் தயாரிப்பாளரிடம் கதையை சொல்லி.... கதை அவருக்கு பிடித்துப் போனது. அதன் பிறகு என்னை அணுகினார்கள்.


ஒன்றரை மணி நேரம் சிரித்துக்கொண்டே கதையை கேட்டேன். அதன் பிறகு படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன்.


இந்தப் படம் நகைச்சுவை திரைப்படமாக உருவாகிறது.  சின்ன மாப்ளே, தேடினேன் வந்தது என்று பல நகைச்சுவை படங்களில் நடித்திருக்கின்றேன். அந்த வரிசையில் இந்த படமும் மிகப்பெரிய நகைச்சுவை படமாக இருக்கும். 


என்னுடைய தந்தைக்கு எப்படி ஆதரவு அளித்தீர்களோ... அதுபோல எனக்கும் நீங்கள் ஆதரவளித்தீர்கள். அதுபோல் என் மகன் விக்ரம் பிரபுவுக்கும் ஆதரவு அளித்து வருகிறீர்கள். அந்த வரிசையில் இந்த படக்குழுவுக்கும் நீங்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.


வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு நல்ல கலைஞர்களை எப்போதும் வரவேற்று அவர்களை கொண்டாடி இருக்கிறார்கள். அதுபோல இந்த படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் நடிகர்களை கொண்டாட வேண்டும். 


இந்த படம் தமிழில் மட்டும் தான் தயாராகிறது. கேரளாவிலும் இந்த படம் தமிழில் தான் வெளியாகும். கேரளாவில் உள்ள மக்கள் தமிழ் நன்கு அறிவார்கள். நான் நடித்த சின்னத்தம்பி படம் 100 நாட்களுக்கு மேல் அங்கு ஓடியது. 


அதேபோல தமிழ் நன்றாக பேசக் கூடியவர்களாக இருக்கிறார்கள். தமிழ் படங்கள் நேரடியாகவே அங்கு வெளியாகிறது. அங்கு மக்களிடம் தமிழ் படங்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. அதுபோல இந்த படமும் கேரளாவிலும் வெளியாகும்" என்று நடிகர் பிரபு கூறினார். 


தயாரிப்பாளர் ஏ.ஆர்.மதியழகன் கூறும்போது, "இந்த படம் நகைச்சுவை படம். எனக்கு ரொம்ப பிடித்த கதை. பிரபு சார் நடித்தால் நல்லா இருக்கும் என்று பேசினோம். அதன்படி பிரபு சார் அவர்களை அணுகி கதையைச் சொல்லி அவரை நடிக்க வைக்கிறோம். 


சினிமா உலகில் அவர் மிகப்பெரிய லெஜன்ட். நல்ல கலாச்சாரம், நல்ல பண்பாடு கொண்டவர்.  இந்த மாதிரி கதையில் அவர் நடிப்பது எங்களுக்கு பெரிய பெருமை. அவர் நடிப்பது எங்களுக்கு கிடைத்த வரம்" என்று கூறினார். 


- டைமண்ட் பாபு 

மக்கள் தொடர்பாளர்

ஒரு புதிய துணிச்சலான Zee 5-ஐ அறிமுகப்படுத்துகிறது: இந்தியாவின் ஸ்ட்ரீமிங் அனுபவத்தை மறுவரையறை செய்கிறது

 *ஒரு புதிய துணிச்சலான Zee 5-ஐ அறிமுகப்படுத்துகிறது: இந்தியாவின் ஸ்ட்ரீமிங் அனுபவத்தை மறுவரையறை செய்கிறது*



ஸ்மார்ட்டான உள்ளடக்கத் தேடலுடன், மேலும் வளமான பொழுதுபோக்கு அனுபவத்தை வழங்கும் வகையில், Zee 5 தனது மறுவடிவமைக்கப்பட்ட தயாரிப்பு அனுபவம், பிரீமியம் ஆங்கில உள்ளடக்கத் தொகுப்பு மற்றும் புதுப்பிக்கப்பட்ட AvoD சேவையான - Free 5-ஐ அறிமுகப்படுத்துகிறது 


தேசியம், செப்டம்பர் 9, 2026: பார்வையாளர்கள் முன்பைவிட அதிகமான பொழுதுபோக்கு உள்ளடக்கங்களை அணுகும் நிலையில், அவர்கள் பொழுதுபோக்கைத் தேடும் மற்றும் அனுபவிக்கும் விதத்தை Zee 5 மறுவரையறை செய்கிறது. விரிவுபடுத்தப்பட்ட உள்ளடக்கத் தொகுப்பை அடிப்படையாகக் கொண்டு, மொபைல் மற்றும் Connected TV தளங்களில், ஸ்மார்ட்டான தனிப்பயனாக்கம், AI அடிப்படையிலான உள்ளடக்கத் தேடல், மேம்பட்ட காட்சி வழிசெலுத்தல் மற்றும் தடையற்ற பல்திரை அனுபவம் ஆகியவற்றால் இயக்கப்படும் மிக முக்கியமான மாற்றங்களில் ஒன்றை Zee 5 தற்போது அறிமுகப்படுத்துகிறது. பார்வையாளர்களின் பார்வை பழக்கத்தை மையமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள புதிய Zee 5, Premium Entertainment, Free 5, KidZ, TV மற்றும் Sports என ஐந்து தனித்துவமான உலகங்களுக்கான கதவுகளைத் திறக்கிறது. இதன் மூலம் உள்ளடக்கத்தைத் தேடுவது இயல்பாகவே எளிமையானதாகவும், ஆழமான அனுபவமாகவும், தடையற்றதாகவும் மாறுகிறது. ஏனெனில் இந்தியாவின் பொழுதுபோக்கு பார்வை முறை மாறி வருவதற்கேற்ப, பொழுதுபோக்கைத் தேடும் அனுபவமும் மாறுகிறது.


தனிப்பயனாக்கம் என்பது புதிய அனுபவத்தின் மையமாக உள்ளது. இது பார்வையாளர்களின் ஆர்வங்களுக்கு மிகவும் பொருத்தமான உள்ளடக்கங்களை அவர்கள் கண்டறிய உதவுகிறது. அதேவேளையில், AI அம்சம் Zee 5 தளத்தில் மேலும் புத்திசாலித்தனமான உள்ளடக்கத் தேடலையும், மென்மையான தொடர்பு அனுபவத்தையும் வழங்குகிறது. மொபைல் சாதனங்களுடன் இணைந்த சாதனங்களிலும் பார்வையாளர்கள் அதிகளவில் பொழுதுபோக்கை அனுபவித்து வரும் நிலையில், புதிய அனுபவம் சிறிய திரையிலிருந்து பெரிய திரைக்கு தடையின்றி மாறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதை மேலும் எளிதாக்கும் வகையில், அடுத்த தலைமுறை AI தொழில்நுட்பத்தில் இயங்கும் வாடிக்கையாளர் ஆதரவு உதவியாளர் அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது சந்தாக்கள், பிளேபேக், அணுகல், உள்ளடக்கம் மற்றும் சாதனங்கள் தொடர்பான கேள்விகளுக்கு புத்திசாலித்தனமான, கிட்டத்தட்ட உடனடி தீர்வுகளை வழங்குகிறது. இவ்வம்சங்களுடன், தரவு தனியுரிமையை மேலும் வலுப்படுத்தும் வகையில் Zee 5 மேம்பட்ட நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. இதற்காக சிறந்த மற்றும் துறையில் முன்னணியில் உள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் பயன்படுத்தப்படுகின்றன. இவை அனைத்தும் ஒருங்கிணைந்து, வேகமான, புத்திசாலித்தனமான மற்றும் மிகவும் எளிமையான பொழுதுபோக்கு அனுபவத்திற்கான புதிய அளவுகோலை உருவாக்குகின்றன.


புதிய அனுபவத்தை உருவாக்குவதற்காக, இந்தியா முழுவதும் பார்வையாளர்கள் எவ்வாறு பொழுதுபோக்கை பார்க்கிறார்கள், தேடுகிறார்கள் மற்றும் அதனுடன் ஈடுபடுகிறார்கள் என்பதை Zee 5 ஆழமாகப் புரிந்துகொண்டது. ஏற்கனவே கிடைத்திருந்த செயலி கருத்துகள், பல்வேறு சந்தைகளில் நடத்தப்பட்ட நுகர்வோர் ஆய்வுகள் மற்றும் Focus Group Discussions ஆகியவற்றை ஒருங்கிணைத்து, மொபைல் மற்றும் Connected TV தளங்களில் பார்வையாளர்களின் பயணத்தை இந்த தளம் ஆய்வு செய்தது. பெரிய திரை அனுபவத்தின் வளத்தையும் ஆழத்தையும் பாதிக்காமல், மேலும் எளிமையான மற்றும் உள்ளுணர்வுடன் பயன்படுத்தக்கூடிய அனுபவம் தேவை என்பதை இந்த ஆய்வு வெளிப்படுத்தியது. இந்த நுண்ணறிவுகளின் அடிப்படையில் மறுவடிவமைப்பு மேற்கொள்ளப்பட்டது. மேலும், வெளியீட்டிற்கு முன் தளத்தின் ஒவ்வொரு அம்சத்தையும் கடுமையாகச் சோதித்து, மேம்படுத்தி, நுணுக்கமாகச் செம்மைப்படுத்தும் வகையில், Product, Engineering, Quality Assurance மற்றும் Design துறைகளைச் சேர்ந்த நிபுணர்களை ஒன்றிணைத்து தீவிர Bugathons நடத்தப்பட்டன.


கடந்த காலாண்டில், Zee 5 தனது பல்வேறு வகையான உள்ளடக்கத் தொகுப்பை குறிப்பிடத்தக்க அளவில் விரிவுபடுத்தியுள்ளது. முதலில், உலகளாவிய விளையாட்டு நிகழ்வான FIFA World Cup 2026™ மற்றும் 2030-க்கான ஒளிபரப்பு உரிமைகளைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து, ஏழு மொழிகளில் தனது உள்ளடக்கத் தொகுப்பை அறிமுகப்படுத்தியது. இந்த முன்னேற்றத்தின் தொடர்ச்சியாக, இதுவரை இல்லாத அளவிலான பிரீமியம் ஆங்கில பொழுதுபோக்கு உள்ளடக்கத் தொகுப்பை Zee 5 தற்போது அறிமுகப்படுத்துகிறது. இதில் உலகளாவிய திரைப்படங்களும், ஹாலிவுட்டின் முன்னணி நட்சத்திரங்களும் இந்திய பார்வையாளர்களுக்காக இடம்பெறுகின்றனர். PVR INOX PICTURES மற்றும் LIONSGATE PLAY ஆகியவற்றுடன் மேற்கொள்ளப்பட்டுள்ள மூலோபாய கூட்டணிகளின் மூலம், இந்த பிரம்மாண்டமான உள்ளடக்கத் தொகுப்பில் Normal திரைப்படம் இடம்பெறுகிறது. இதில் Bob Odenkirk, Henry Winkler மற்றும் Lena Headey நடித்துள்ளனர்; The Invite திரைப்படத்தில் Seth Rogen, Penélope Cruz, Edward Norton மற்றும் Olivia Wilde நடித்துள்ளனர்; Anxious People திரைப்படத்தில் Angelina Jolie மற்றும் Jason Segel நடித்துள்ளனர்; Babies திரைப்படத்தில் Seth Rogen மற்றும் Anna Kendrick நடித்துள்ளனர்; The Wizard of the Kremlin திரைப்படத்தில் Jude Law நடித்துள்ளார்; How to Make a Killing திரைப்படத்தில் Glen Powell மற்றும் Margaret Qualley நடித்துள்ளனர்; Tony திரைப்படத்தில் Dominic Sessa இடம்பெறுகிறார்; மேலும் Paper Tiger திரைப்படத்தில் Adam Driver, Scarlett Johansson மற்றும் Miles Teller நடித்துள்ளனர். முன்னணி நட்சத்திரங்கள், உலகளாவிய கதைகள் மற்றும் பிரீமியம் சினிமா ஆகியவற்றின் இதுவரை இல்லாத அளவிலான தொகுப்புடன், இந்த புதிய உள்ளடக்கத் தொகுப்பு Zee 5-ன் ஆங்கில பொழுதுபோக்கு பிரிவில் ஒரு புதிய, துணிச்சலான அத்தியாயத்தைத் தொடங்குகிறது.


அதே நேரத்தில், Free 5 தனது விரிவான பொழுதுபோக்கு அனுபவங்களில் ஒன்றாக, புதிய துணிச்சலான அடையாளத்துடன் மறுவடிவமைக்கப்படுகிறது. முற்றிலும் புதிய Free 5, Series, Movies, Korean மற்றும் Chinese dramas, anime, news, micro dramas மற்றும் துடிப்பான creator ecosystem என பரந்த அளவிலான பொழுதுபோக்கு உள்ளடக்கங்களை ஒருங்கிணைக்கிறது. இதுவரை இல்லாத அளவில் அதிகமான மொழிகள், வகைகள், வடிவங்கள் மற்றும் குரல்களுடன், புதுப்பிக்கப்பட்ட Free 5 பார்வையாளர்களுக்கு முற்றிலும் இலவசமாக, எந்தவித சந்தாவும் தேவையின்றி, விரிவான பொழுதுபோக்கு உலகத்தைத் தேடி, ஆராய்ந்து, ரசிக்கும் வாய்ப்பை வழங்குகிறது. இந்த விரிவுபடுத்தப்பட்ட அனுபவம், Zee 5-ல் பல்வேறு வகையான பார்வையாளர்களை அணுகவும், அவர்களின் தேவைகளுக்கு ஏற்ப விளம்பரங்களை வழங்கவும் விளம்பரதாரர்களுக்கு குறிப்பிடத்தக்க புதிய வாய்ப்புகளையும் உருவாக்குகிறது.


Tejkarran Singh Bajaj, Business Head - Zee 5 India and AI & Innovation கூறுகையில்,

“Zee 5-ன் அடுத்த கட்டம் என்பது பொழுதுபோக்கை எளிதாகக் கண்டறியக்கூடியதாகவும், மிகவும் பொருத்தமானதாகவும், மேலும் திருப்திகரமானதாகவும் மாற்றுவதாகும். ஸ்மார்ட்டான தனிப்பயனாக்கம், AI-ன் ஆழமான பயன்பாடு மற்றும் மேலும் உள்ளுணர்வுடன் கூடிய உள்ளடக்கத் தேடல் ஆகியவற்றுடன், மொபைல் மற்றும் Connected TV தளங்களில் தயாரிப்பு அனுபவத்தை நாங்கள் மறுவடிவமைத்துள்ளோம். ஏழு மொழிகளில் பிரீமியம் திரைப்படங்கள் மற்றும் தொடர்கள், வளமான தொலைக்காட்சி உள்ளடக்கம், விளையாட்டுகள், குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு, Live TV மற்றும் செய்திகள் ஆகியவற்றை ஏற்கனவே வழங்கி வரும் நிலையில், உலகளாவிய சினிமாவை இந்திய பார்வையாளர்களிடம் கொண்டு வரும் ஆங்கில உள்ளடக்கத் தொகுப்புடன் உள்ளடக்கத்தின் ஆழத்தை மேலும் விரிவுபடுத்துகிறோம். அதேபோல், அதிக மொழிகள், வகைகள் மற்றும் creator ecosystem-ஐ உள்ளடக்கிய புதுப்பிக்கப்பட்ட Free 5-ஐ அறிமுகப்படுத்துகிறோம். விளம்பரதாரர்களைப் பொறுத்தவரை, இந்த விரிவான உள்ளடக்கத் தொகுப்பு, மொழிகள், உள்ளடக்க வகைகள் மற்றும் பார்வை நேரங்களின் அடிப்படையில் தனித்துவமான பார்வையாளர் குழுக்களுடன் தொடர்பு கொள்ள வளமான தளத்தை உருவாக்குகிறது. தயாரிப்பு மற்றும் உள்ளடக்கத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த பரிணாமம், பார்வையாளர்களுக்கு அதிக தேர்வுகள், அதிக ஆழம் மற்றும் அவர்கள் விரும்புவதை எளிதாகக் கண்டறியும் வழியை வழங்குகிறது.”


Pramod Prakash, Chief Technology Officer, Zee Entertainment Enterprises Ltd., கூறுகையில்,

 “ஒரு ஸ்ட்ரீமிங் தளம் நூற்றுக்கணக்கான சிறிய தொடர்புகளின் மூலம் அனுபவிக்கப்படுகிறது. அந்த ஒவ்வொரு தொடர்பும் பார்வையாளர்கள் சேவையைப் பற்றி உணரும் விதத்தை உருவாக்குகிறது. எனவே, தனித்தனி அம்சங்களை மட்டும் கருத்தில் கொள்ளாமல், முழுமையான அனுபவத்தையும் மறுபரிசீலனை செய்வதே எங்களின் நோக்கமாக இருந்தது. பயணத்தின் எந்த இடங்களில் பயனருக்கு அனுபவம் மேலும் இயல்பாகவும், விரைவாகச் செயல்படக்கூடியதாகவும், குறைந்த சிரமத்துடனும் இருக்க முடியும் என்பதை நாங்கள் கண்டறிந்தோம். இதன் மையத்தில், குடும்பத்தின் ஒவ்வொரு தலைமுறையினரும் தாங்கள் விரும்பும் பொழுதுபோக்கை எளிதாக அணுகக்கூடிய உள்ளுணர்வுடன் பயன்படுத்தக்கூடிய செயலி உள்ளது. தொழில்நுட்பம் பயனருக்கான சிரமங்களை அமைதியாக நீக்கி, பொழுதுபோக்கை மையமாக்க வேண்டும் என்பதே இந்த மறுவடிவமைப்பின் எளிய தயாரிப்பு தத்துவமாகும். பல்வேறு சாதனங்கள், வடிவங்கள் மற்றும் சூழல்களில் பார்வை அனுபவம் தொடர்ந்து பரவி வரும் நிலையில், எதிர்காலத்தில் பார்வையாளர்கள் பொழுதுபோக்கை அனுபவிக்கும் விதத்திற்கு ஏற்ப மேலும் தகவமைத்துக்கொள்ளக்கூடிய, நம்பகமான மற்றும் தயாராக இருக்கும் வகையில் Zee 5-ஐ உருவாக்கி வருகிறோம்.”


Zee 5 பற்றி:


Zee 5 என்பது இந்தியாவின் மிகப்பெரிய உள்நாட்டு வீடியோ ஸ்ட்ரீமிங் தளமாகவும், தெற்காசிய உள்ளடக்கங்களுக்கான உலகளாவிய சாளரமாகவும் திகழ்கிறது. 190-க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள பார்வையாளர்களை இது சென்றடைகிறது. Zee Entertainment Enterprises Ltd.-ன் டிஜிட்டல் பொழுதுபோக்கு தளமான Zee 5, மொழிக்கு முன்னுரிமை அளிக்கும் தள அனுபவம், hyper-local உள்ளடக்கம், மொழி சார்ந்த தொகுப்புகள் மற்றும் ஏழு மொழிகளில் ஆழமான தனிப்பயனாக்கப்பட்ட அனுபவங்கள் என்ற கொள்கையின் அடிப்படையில் இயங்குகிறது. அவை Hindi, Tamil, Telugu, Bengali, Malayalam, Kannada மற்றும் Marathi ஆகிய மொழிகளாகும். மேலும், பல்வேறு மொழிகள் மற்றும் வகைகளில் துணிச்சலான கதைகள், தனித்துவமான படைப்பாளர்களின் குரல்கள், பிரபலமான Franchise-கள் மற்றும் தனித்துவமான கதைசொல்லல் ஆகியவற்றை ஒருங்கிணைத்து, இந்தியாவின் துணிச்சலான கதைகளுக்கான தளமாக Zee 5 விளங்குகிறது.


Movies, Series, Live Sports, AI-powered storytelling, Animation மற்றும் Kids' Entertainment என விரிவான உள்ளடக்க நூலகத்துடன், Zee 5 பல்வேறு மொழிகளில் அமைந்த பொழுதுபோக்கு மற்றும் FIFA World Cup 2026™ மற்றும் 2030, Bundesliga, Serie A மற்றும் Coppa Italia போன்ற நேரடி விளையாட்டு அனுபவங்களுக்கான தளமாகத் திகழ்கிறது.

சிக்மா' திரைப்படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்வு!

 *'சிக்மா' திரைப்படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்வு!*








லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘சிக்மா’திரைப்படத்தின் மூலம், ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகிறார். சந்தீப் கிஷன், ஃபரியா அப்துல்லா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த திரைப்படம் அக்டோபர் இரண்டாம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த திரைப்படத்தின் ப்ரீ- ரிலீஸ் நிகழ்வு நடைபெற்றது.


ஹெட் ஆஃப் லைகா புரொடக்‌ஷன்ஸ் தமிழ் குமரன், "'சிக்மா' திரைப்படம் இயக்குநர் சஞ்சய்க்கு மட்டுமல்ல எங்கள் தயாரிப்பு நிறுவனத்திற்கும் மிக முக்கியமான படம். நாங்கள் தயாரித்த முதல் படம் 'கத்தி'. இப்போது ஜேசன் சஞ்சய் எங்கள் தயாரிப்பில் அறிமுகமாகிறார் என்பது பெருமையாக உள்ளது. சஞ்சய் மேக்கிங்கில் மிரட்டி இருக்கிறார். படம் நன்றாக வந்து இருக்கிறது. 'கோலமாவு கோகிலா' திரைப்படத்தில் இயக்குநர் நெல்சனையும், 'டான்' திரைப்படத்தில் சிபி சக்கரவர்த்தியும் அறிமுகப்படுத்தினோம். இன்று அவர்கள் நல்ல நிலைமையில் இருக்கிறார்கள். 'சிக்மா' திரைப்படமும் ரூ. 100 கோடிக்கு மேல் வசூலிக்கும் என்று நம்புகிறோம். நிச்சயம் சஞ்சய் பெரிய உயரத்தை அடைவார். ஹீரோ சந்தீப் மற்றும் படக்குழுவினர் சிறப்பாக உழைத்து உள்ளனர். அண்ணன் சுபாஸ்கரன் சார்பாக அனைவருக்கும் வாழ்த்துக்கள்".


நடிகை ஃபரியா அப்துல்லா, " தயாரிப்பாளர்கள் சுபாஸ்கரன் சார், தமிழ்குமரன் சாருக்கு நன்றி. இந்த படம் எனக்கு ரொம்பவே ஸ்பெஷல். இயக்குநர் சஞ்சய்க்கு வாழ்த்துக்கள். ஃபிலிம் மேக்கிங், சினிமா மீது சஞ்சய்க்கு அதிக ஆர்வம் உண்டு. ரசிகர்கள் இந்தப் படத்திற்காக காத்திருக்கின்றனர். சந்தீப் கிஷனை இதற்கு முன்பு இப்படி ஒரு கதாபாத்திரத்தில் ரசிகர்கள் நிச்சயம் பார்த்திருக்க மாட்டார்கள். படம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும்". 


பாடலாசிரியர் சூப்பர் சுப்பு, "லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் சார், தமிழ்குமரன் சாருக்கு நன்றி. இயக்குநர் சஞ்சய்க்கு இது தங்கமான வாய்ப்பு. அதை அவர் சரியாக பயன்படுத்தி இருக்கிறார். பொறுமையாக எடுத்து சொல்லி தனக்கு வேண்டிய வேலையை சஞ்சய் சரியாக வாங்கி விடுவார். அவருக்காகவே இந்த படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆகும். இசையமைப்பாளர் தமன் சாருக்கும் நன்றி. சஞ்சய் இயக்கிவிட்டார், அடுத்து அவர் நடிக்கவும் வரவேண்டும். வாழ்த்துக்கள் ப்ரோ".


நடிகர் சந்தீப் கிஷன், "இது போன்ற படம் மிக அரிதாகவே நடக்கும். இதற்கு முக்கிய காரணமாக இருந்த இயக்குநர் சஞ்சய்க்கு என் அன்பும் நன்றியும். அவருக்கென்று ஒரு அடையாளத்தை உருவாக்க வேண்டும் என்று கடுமையாக இந்த படத்தில் உழைத்திருக்கிறார். 'சிக்மா' மிக ஜாலியான ஜென்ஸீ திரைப்படம். உங்கள் முதல் படத்தை நான் நல்லபடியாக செய்வேன் என்று என்னை நம்பி வாய்ப்பு கொடுத்த சஞ்சய்க்கு நன்றி. நாம் நேசிக்கும் ஒரு விஷயத்தை பயமில்லாமல் செய்தால் நிச்சயம் வெற்றி கிடைக்கும். அது போல தான் 'சிக்மா' படத்திற்கும் நிச்சயம் வெற்றி கிடைக்கும். இந்த வெற்றிக்கு முதல் காரணம் சஞ்சய், இரண்டாவது காரணம் லைகா புரொடக்ஷன்ஸ். படக்குழுவினர் அனைவரும் சின்சியராக உழைத்து உள்ளனர். நிச்சயம் உங்களுக்கும் இந்த படம் பிடிக்கும்". 


இயக்குநர் ஜேசன் சஞ்சய், "'சிக்மா' படத்தின் பிரமோஷன் பணிகளை சேலத்தில் இருந்து ஆரம்பிப்பது மகிழ்ச்சி. ஏனென்றால், 'சிக்மா' படத்திற்காக கிட்டத்தட்ட 10 நாட்கள் இங்கு படப்பிடிப்பு நடத்தினோம். அதனால், இங்கு நிறைய அழகான நினைவுகள் உண்டு. சுபாஸ்கரன் சார், தமிழ்குமரன் சார், சந்தீப், ஃபரியா மற்றும் எனது படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி. என் குடும்பத்தினருக்கும் நன்றி. நான் இயக்கிய முதல் படம் 'சிக்மா' அக்டோபர் 2 அன்று வெளியாகிறது. நம் எல்லோர் வாழ்விலும் ஒரு சிக்மா மொமண்ட் கண்டிப்பாக இருக்கும். அதாவது, கடினமான தருணங்களில் இருந்து மீண்டு வர நாம் எடுக்கும் ஒரு முடிவு நம் வாழ்க்கையை மாற்றும். அதுதான் 'சிக்மா' திரைப்படம். திரையரங்குகளுக்கு சென்று படம் பார்த்துவிட்டு உங்கள் ஆதரவு கொடுங்கள்" என்றார்.

உணர்வுப்பூர்வமான விடைபெறல்: மருத்துவர்களின் ஆலோசனையைத் தொடர்ந்து பிக் பாஸ் தமிழ் வீட்டிலிருந்து வெளியேறும் பிளாக் பாண்டி

 *உணர்வுப்பூர்வமான விடைபெறல்: மருத்துவர்களின் ஆலோசனையைத் தொடர்ந்து பிக் பாஸ் தமிழ் வீட்டிலிருந்து வெளியேறும் பிளாக் பாண்டி*



பிக் பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில், பிளாக் பாண்டி தனது சக போட்டியாளர்களிடம் உணர்வுப்பூர்வமாக விடைபெற்று, மருத்துவர்களின் ஆலோசனையைத் தொடர்ந்து பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறுகிறார்.


பிளாக் பாண்டியின் உடல்நிலைக்கு அவ்வப்போது மருத்துவ கவனிப்பும் தொடர் சிகிச்சையும் தேவைப்படும் நிலையில், அவரது உடல்நலனைக் கருத்தில் கொண்டு வீட்டை விட்டு வெளியேறி, தேவையான மருத்துவ கவனிப்பைப் பெறுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதனைத் தொடர்ந்து, பிக் பாஸ் வீட்டில் அனைவரையும் நெகிழச் செய்யும் வகையில் அவரது விடைபெறும் தருணம் அமைந்தது.


பிளாக் பாண்டி வீட்டை விட்டு வெளியேறத் தயாரானபோது, சக போட்டியாளர்களால் தங்களது உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியவில்லை. ஒருவர் பின் ஒருவராக அவரை கட்டியணைத்து, கண்ணீருடன் விடை கொடுத்து, தங்களது அன்பையும் வாழ்த்துகளையும் பகிர்ந்துகொண்டனர்.


பிளாக் பாண்டியின் வெளியேற்றம் ஒரு விளையாட்டுப் பயணத்தின் முடிவாக மட்டுமல்லாமல், பிக் பாஸ் வீட்டிற்குள் உருவான அன்பும் நட்பும் வெளிப்பட்ட ஒரு உணர்வுப்பூர்வமான தருணமாகவும் அமைந்தது. அவருடன் பகிர்ந்துகொண்ட நினைவுகளை எண்ணி போட்டியாளர்கள் நெகிழ்ந்ததுடன், பிளாக் பாண்டி விரைவில் நல்ல உடல்நலத்துடன் திரும்ப வேண்டும் என்றும் வாழ்த்தினர்.


கண்ணீருடனும் கனத்த இதயத்துடனும் சக போட்டியாளர்கள் பிளாக் பாண்டிக்கு உணர்வுப்பூர்வமான விடை கொடுக்க, பிக் பாஸ் தமிழ் வீட்டில் அவரது பயணம் நெகிழ்ச்சியான தருணத்துடன் நிறைவடைகிறது.


*பிக் பாஸ் தமிழ் சீசன் 10-ஐ இரவு 9:30 மணிக்கு விஜய் டிவியில் காணலாம். JioHotstar-ல் எப்போது வேண்டுமானாலும் ஸ்ட்ரீம் செய்யலாம். மேலும், பிக் பாஸ் வீட்டின் 24x7 நேரலை ஒளிபரப்பையும் JioHotstar-ல் காணலாம்.*

An Emotional Goodbye: Black Pandi Leaves the Bigg Boss Tamil House Following Doctors’ Advice

 *An Emotional Goodbye: Black Pandi Leaves the Bigg Boss Tamil House Following Doctors’ Advice*



Bigg Boss Tamil Season 10 witnessed an emotional and heart-wrenching moment as Black Pandi bid goodbye to his fellow housemates and exited the Bigg Boss house following doctors’ advice.


With his health requiring regular medical attention and care, doctors advised that Black Pandi step out of the house to focus on his recovery. What followed was an emotional farewell that left the entire house overwhelmed.


As Black Pandi prepared to leave, the contestants struggled to hold back their emotions. One by one, the housemates came forward to bid him goodbye, with hugs, tears and heartfelt words marking his final moments inside the house.


For the contestants, his exit was more than just a departure from the game. The emotions reflected the bonds and memories built during their time together in the house. The atmosphere turned sombre as they wished Black Pandi strength, good health and a speedy recovery.


With teary eyes and heavy hearts, the contestants gave him an emotional send-off, bringing a touching end to his journey inside the Bigg Boss Tamil house.


*Tune in to Bigg Boss Tamil Season 10 at 9:30 PM on Vijay TV and stream it anytime on JioHotstar. Catch the Bigg Boss house live 24x7 on JioHotstar.*

யார் வெளியேறப் போகிறார்? நாமினேஷன் பட்டியலில் முனியம்மாள், தன்யா பல்லத் மற்றும் சந்தினி!

 *யார் வெளியேறப் போகிறார்? நாமினேஷன் பட்டியலில் முனியம்மாள், தன்யா பல்லத் மற்றும் சந்தினி!*


பிக் பாஸ் தமிழ் சீசன் 10 வீட்டில் இந்த வாரத்திற்கான நாமினேஷன் பரபரப்பு தொடங்கியுள்ளது. ஷதிகா நாமினேட் செய்ததைத் தொடர்ந்து முனியம்மாள், தன்யா பல்லத் மற்றும் சந்தினி ஆகிய மூவரும் எவிக்ஷன் ஆபத்தை எதிர்கொள்கின்றனர்.


பிக் பாஸ் வீட்டில் தங்களது பயணத்தைத் தொடர வேண்டும் என்றால், இந்த வாரம் மூவரும் தங்களது ஆட்டத்தை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இதனால் வீட்டிற்குள் பதற்றமும் எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.


நட்பு, தனிப்பட்ட உறவுகள் மற்றும் விளையாட்டு வியூகங்கள் என பல்வேறு காரணிகள் இந்த நாமினேஷனில் தாக்கத்தை ஏற்படுத்தும் நிலையில், முனியம்மாள், தன்யா பல்லத் மற்றும் சந்தினி ஆகிய மூவரில் இந்த வாரம் யார் பிக் பாஸ் வீட்டிற்கு விடை கொடுக்கப் போகிறார்? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


*பிக் பாஸ் தமிழ் சீசன் 10-ஐ திங்கள் முதல் ஞாயிறு வரை இரவு 9:30 மணிக்கு விஜய் டிவியில் காணலாம். JioHotstar-ல் எப்போது வேண்டுமானாலும் ஸ்ட்ரீம் செய்யலாம். மேலும், பிக் பாஸ் வீட்டின் 24x7 நேரலை ஒளிபரப்பையும் JioHotstar-ல் காணலாம்.*

Who Will Bid Goodbye to the Bigg Boss Tamil House? Muniyammal, Dhanya Pallath and Chandini Face the Eviction Heat

 *Who Will Bid Goodbye to the Bigg Boss Tamil House? Muniyammal, Dhanya Pallath and Chandini Face the Eviction Heat*


The nomination drama intensifies inside the Bigg Boss Tamil Season 10 house as Muniyammal, Dhanya Pallath and Chandini find themselves in the danger zone after being nominated by Shatiga.


With the three contestants now facing the possibility of leaving the Bigg Boss house, the pressure is set to rise as the week progresses. Each contestant will have to fight to prove their place in the game while hoping to win the audience’s support.


As emotions, strategies and equations come into play, the big question remains — who among Muniyammal, Dhanya Pallath and Chandini will continue their Bigg Boss journey, and who will have to bid goodbye to the house?


*Tune in to Bigg Boss Tamil Season 10 at 9:30 PM on Vijay TV and stream it anytime on JioHotstar. Catch the Bigg Boss house live 24x7 on JioHotstar.*


https://www.instagram.com/reel/DdDpR30jSjK/?stkn=MW1sOGN5Z2ViaDN2dQ==

விநோத உலகத்தை அறிமுகப்படுத்தும் “ட்ரோன்ஸ்” – படத்தின் மிரட்டலான 3 ஃபர்ஸ்ட் லுக், குவியும் வரவேற்பு!*

 *விநோத உலகத்தை  அறிமுகப்படுத்தும் “ட்ரோன்ஸ்” – படத்தின் மிரட்டலான 3 ஃபர்ஸ்ட் லுக், குவியும் வரவேற்பு!*





GM Morgan Films நிறுவனம் தயாரிப்பில், இயக்குநர் R. ராகவ் மிர்தாத் இயக்கத்தில் உருவாகி வரும் வித்தியாசமான சர்ரியலிஸ்ட் ஃபேண்டஸி திரைப்படம் “ட்ரோன்ஸ்”. இப்படத்தின் மூன்று ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் தற்போது வெளியாகி, ரசிகர்கள் மற்றும் திரையுலக வட்டாரங்களில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றன.


வித்தியாசமான கற்பனை உலகம், ஹாரர் மற்றும் ஃபேண்டஸி அம்சங்கள் கலந்த கதைக்களம் ஆகியவை “ட்ரோன்ஸ்” படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளன.


கனவுகளில் மட்டுமே நிகழக்கூடிய விசித்திரமான சம்பவங்கள் நிஜ உலகில் நடந்தால் எப்படி இருக்கும் என்ற சுவாரஸ்யமான கேள்வியை மையமாகக் கொண்டு இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. ஒரு மேட் சயின்டிஸ்ட், டிடெக்டிவ், ஏஞ்சல், சூனியக்காரி மற்றும் பல புதிரான சம்பவங்கள் நிறைந்த கற்பனை உலகில் பயணிக்கும் வகையில், தமிழ் சினிமாவில் அரிதாக முயற்சிக்கப்படும் சர்ரியலிஸ்ட் ஃபேண்டஸி பாணியில் இப்படம் உருவாகியுள்ளது.


தற்போது வெளியாகியுள்ள மூன்று ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்களும் படத்தின் விநோதமான  உலகத்தை அறிமுகப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. முதல் போஸ்டரில், அடர்ந்த காடு, முழுநிலவு, மர்மமான கோட்டை, வௌவால்கள் மற்றும் தேவதை போன்ற உருவங்களுக்கு நடுவே கதாநாயகி காட்சியளிப்பதன் மூலம் ஒரு மாயாஜால ஃபேண்டஸி உலகம் உருவாக்கப்பட்டுள்ளது. இரண்டாவது போஸ்டரில், படத்தின் முக்கிய கதாபாத்திரங்கள் ஒன்றாக இடம்பெற, அருகில் ட்ரோன், மர்மமான வயதான பெண், வித்தியாசமான சாதனங்கள் என சயின்ஸ் ஃபிக்ஷன் மற்றும் ஃபேண்டஸி கலந்த உலகை வெளிப்படுத்துகிறது. மூன்றாவது போஸ்டரில், எண்ணற்ற பொம்மைகள் சூழ்ந்த இருண்ட அறையில் ஆக்ரோஷமான தோற்றத்தில் ஒரு சூனியக்காரி இடம்பெற்றிருப்பது படத்தின் ஹாரர் மற்றும் திகில் அம்சங்களை மிரட்டலாக எடுத்துக்காட்டுகிறது. மூன்று போஸ்டர்களிலும் மூன்று விதமான மனநிலைகளையும், கதையின் பல அடுக்குகளையும் காட்சிப்படுத்தி படக்குழு ரசிகர்களின் ஆர்வத்தை மேலும் தூண்டியுள்ளது.


இப்படத்தில் முன்னணி நடிகைகளான சித்தி இத்னானி, அஞ்சலி நாயர் ஆகியோருடன் தேவதர்ஷினி, பரிதாபங்கள் புகழ் டிராவிட் செல்வம், விஜய் டிவி புகழ் குரேஷி, சினிமாவாலா சதீஷ், சசி செல்வராஜ் மற்றும் இப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமாகும் ஆர்ஜே தீபக் உள்ளிட்டோர் கதையின் முதன்மையான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


இப்படத்தின் ஒளிப்பதிவை ஜெயந்த் சேது மாதவன் மேற்கொண்டுள்ளார். ஹரி S.R. இசையமைக்க, சதீஷ் சூர்யா படத்தொகுப்பை கவனித்துள்ளார். R. கிஷோர் கலை இயக்கத்தையும், ஹர்ஷிகா ரமேஷ் ஆடை வடிவமைப்பையும் மேற்கொண்டுள்ளனர். மேலும், தொழில்நுட்ப ரீதியாகவும் பல புதிய முயற்சிகளுடன் படம் உருவாகி வருகிறது.


இதற்கிடையில், முன்னணி தயாரிப்பு மற்றும் விநியோக நிறுவனமான ஃபைவ் ஸ்டார் நிறுவனத்தின் தயாரிப்பாளர் செந்தில், “ட்ரோன்ஸ்” திரைப்படத்தை தன் குடும்பத்துடன் பார்த்து மிகவும் ரசித்ததையடுத்து, உடனடியாக இப்படத்தின் முழு உரிமையை வாங்கியுள்ளார். இதன்மூலம் ஃபைவ் ஸ்டார்  நிறுவனம் சார்பில் இப்படத்தை இந்தியாவெங்கும் பல மொழிகளில் வெளியிடுகிறார். வித்தியாசமான கதைக்களம் கொண்ட இப்படத்தின் மீது அவர் வைத்துள்ள நம்பிக்கை, “ட்ரோன்ஸ்” படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.


இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், “ட்ரோன்ஸ்” படத்தின் இசை மற்றும் டிரெய்லர் விரைவில் வெளியாகவுள்ளது. ஃபேண்டஸி, சயின்ஸ் ஃபிக்ஷன், ஹாரர் என பல்வேறு அம்சங்களை ஒருங்கிணைத்து உருவாகி வரும் இப்படம், வித்தியாசமான திரையனுபவத்தை ரசிகர்களுக்கு வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் இப்படத்தை ரசிகர்கள் திரையரங்குகளில் கண்டு ரசிக்கலாம்.

Drones” Introduces a Bizarre New World – Three Striking First Look Posters Receive an Overwhelming Response

 *“Drones” Introduces a Bizarre New World – Three Striking First Look Posters Receive an Overwhelming Response!*





Produced by GM Morgan Films and directed by R. Raghav Mirdath, the upcoming film “Drones” is a unique surrealist fantasy that is steadily generating curiosity among audiences. The film’s three First Look posters have now been unveiled and are receiving an enthusiastic response from fans and the film industry alike.


With its unusual imaginary world and a storyline blending horror and fantasy elements, “Drones” has significantly raised expectations among movie lovers.


The film is built around an intriguing question: What if bizarre incidents that could occur only in dreams started happening in the real world? Set in a mysterious fantasy universe filled with a mad scientist, a detective, an angel, a witch and several puzzling incidents, “Drones” takes audiences on a fascinating journey. The film has been crafted in the rarely explored surrealist fantasy genre in Tamil cinema.


The three newly released First Look posters have been designed to introduce audiences to the film’s bizarre and fascinating world. The first poster presents the heroine amidst a dense forest, a full moon, a mysterious castle, bats and angelic figures, creating a magical fantasy atmosphere. The second poster features the film’s key characters together, accompanied by a drone, a mysterious elderly woman and several unusual devices, offering a glimpse into a world that blends science fiction and fantasy. The third poster features a witch with an aggressive and terrifying appearance inside a dark room surrounded by countless dolls, powerfully highlighting the film’s horror and thriller elements. With each poster presenting a distinctly different mood and revealing various layers of the story, the team has further intensified the audience’s curiosity about the film.


The film stars leading actresses Siddhi Idnani and Anjali Nair, along with Devadarshini, Dravid Selvam of Parithabangal fame, Kureshi of Vijay TV fame, Cinemawala Sathish, Sasi Selvaraj, and RJ Deepak, who makes his debut in the film industry with “Drones,” in pivotal roles.


The cinematography is handled by Jayanth Sethu Madhavan, while Hari S.R. composes the music. Satheesh Suriya takes care of editing, with R. Kishore handling art direction and Harshika Ramesh serving as the costume designer. The film is also being crafted with several innovative technical approaches.


Meanwhile, producer Senthil of the leading production and distribution company Five Star watched “Drones” with his family and thoroughly enjoyed the film. Impressed by its unique content, he immediately acquired the complete rights to the film. Five Star will now release “Drones” across India in multiple languages. His confidence in this unconventional story has further elevated expectations surrounding the film.


With the final stages of post-production progressing at a brisk pace, the music and trailer of “Drones” are expected to be released soon. Blending fantasy, science fiction and horror, the film promises to offer audiences a refreshingly different cinematic experience. Fans can look forward to watching “Drones” on the big screen soon.

33 ஆண்டுகளுக்கும் மேலான கல்விப் பணிக்கு அங்கீகாரம் - பாடகர் அறிவுவின் தாயார் திருமதி பெ.தேன்மொழிக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருது.

 33 ஆண்டுகளுக்கும் மேலான கல்விப் பணிக்கு அங்கீகாரம் - பாடகர் அறிவுவின் தாயார் திருமதி பெ.தேன்மொழிக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருது.





இராணிப்பேட்டை - 


இராணிப்பேட்டை மாவட்டம், கடம்பநல்லூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் இடைநிலை ஆசிரியராக 33 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வரும் திருமதி பெ. தேன்மொழி அவர்களுக்கு, கல்வித் துறையில் சிறப்பாகப் பணியாற்றியதற்காக டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.


திருமதி பெ. தேன்மொழி அவர்கள் 12.12.1990 முதல் ஆசிரியர் பணியில் தொடர்ந்து சிறப்பாகப் பணியாற்றி வருகிறார். மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக மாணவர்களின் கல்வி வளர்ச்சி, திறன் மேம்பாடு மற்றும் நல்வாழ்வில் அக்கறையுடன் செயல்பட்டு வரும் அவரது கல்விப் பணிக்கு கிடைத்துள்ள இந்த விருது, அவரது அர்ப்பணிப்பிற்கான உயரிய அங்கீகாரமாக அமைந்துள்ளது.


மேலும், திருமதி பெ. தேன்மொழி அவர்கள் பிரபல பாடகர் அறிவு அவர்களின் தாயார் என்பது குறிப்பிடத்தக்கது.


ஆசிரியர் பணி – வகுப்பறையைத் தாண்டிய சமூகப் பொறுப்பு ஒரு சிறந்த ஆசிரியரின் பணி என்பது மாணவர்களுக்கு பாடங்களை கற்பிப்பதோடு மட்டும் நிறைவடைவதில்லை. மாணவர்களின் தனித்திறமைகளை கண்டறிந்து அவர்களை ஊக்குவிப்பது, தன்னம்பிக்கையை வளர்ப்பது, பள்ளிச் சூழலை மேம்படுத்துவது, பெற்றோர்களையும் சமூகத்தையும் கல்விப் பயணத்தில் இணைப்பது என ஆசிரியர்களின் பங்களிப்பு பல்வேறு தளங்களில் தொடர்கிறது.

குறிப்பாக வாய்ப்புகள் குறைந்த மாணவர்களுக்கும் சமமான கல்வி கிடைப்பதை உறுதி செய்வதும், அவர்களை அறிவிலும் பண்பிலும் சிறந்து விளங்கும் நல்ல மனிதர்களாக உருவாக்குவதும் ஆசிரியர்களின் முக்கியமான சமூகப் பொறுப்பாகும்.


இந்த அர்ப்பணிப்பையும் சிறப்பான கல்விப் பணியையும் அங்கீகரிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு, ஆண்டுதோறும் சிறப்பாகப் பணியாற்றும் ஆசிரியர்களைத் தேர்வு செய்து டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருது வழங்கி கௌரவித்து வருகிறது.


முன்னாள் குடியரசுத் தலைவர், தத்துவஞானி மற்றும் சிறந்த கல்வியாளரான டாக்டர் சர்வேபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாளான செப்டம்பர் 5ஆம் தேதி இந்தியாவில் ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு வழங்கப்படும் இந்த விருது, ஆசிரியர்களின் நீண்டகால அர்ப்பணிப்புக்கும் கல்விச் சேவைக்கும் வழங்கப்படும் முக்கியமான அங்கீகாரமாகக் கருதப்படுகிறது... கல்வி துறையில் சிறப்பாக பணியாற்றும் ஆசிரியர்களை தேர்ந்தெடுத்து டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கி கௌரவித்து  வருகிறது (Kalvi Anjali)


 திருமதி பெ. தேன்மொழி அவர்களின் 33 ஆண்டுகளுக்கும் மேலான ஆசிரியர் பணியின் பின்னணியில் எண்ணற்ற மாணவர்களின் கல்விப் பயணம், அவர்களின் வளர்ச்சியில் செலுத்திய அக்கறை, பள்ளியின் முன்னேற்றத்திற்காக மேற்கொண்ட முயற்சிகள் மற்றும் கல்வியின் மீது கொண்ட அசைக்க முடியாத நம்பிக்கை ஆகியவை உள்ளது.


ஒரு ஆசிரியருக்கு வழங்கப்படும் இந்த விருது, அவருடைய தனிப்பட்ட சாதனைக்கு மட்டுமல்லாமல், அவர் கல்வி கற்றுக் கொடுத்த எண்ணற்ற மாணவர்களின் எதிர்காலத்திற்கும் கிடைத்த அங்கீகாரமாகும்.

Pride of Ranipet: Middle Grade Teacher P. Thenmozhi Honored for Over 3 Decades of Service

 *Pride of Ranipet: Middle Grade Teacher P. Thenmozhi Honored for Over 3 Decades of Service*.





Recognition for Over 33 Years of Dedicated Service in Education: Singer Arivu's Mother, Mrs. P. Thenmozhi, Honored with the Dr. Radhakrishnan Best Teacher Award


Ranipet — Mrs. P. Thenmozhi, a primary school teacher at the Panchayat Union Primary School in Kadambanallur, Ranipet district, has been honored with the prestigious Dr. Radhakrishnan Best Teacher Award for her outstanding contribution to the field of education for over 33 years.


Serving as a teacher since December 12, 1990, Mrs. P. Thenmozhi has maintained a consistent track record of excellence. For more than three decades, she has dedicated herself to the academic growth, skill development, and overall well-being of her students. This award stands as a testament to her unwavering dedication to the teaching profession. Notably, Mrs. P. Thenmozhi is also the mother of the popular independent singer and lyricist, Arivu.


Teaching: A Social Responsibility Beyond the Classroom


The role of an exemplary teacher extends far beyond textbooks. It encompasses discovering and nurturing students' talents, instilling self-confidence, improving the school environment, and bridging the gap between parents, the community, and the education system. Ensuring equal educational opportunities for underprivileged students and molding them into knowledgeable, ethical individuals remains a crucial social duty of an educator.

To honor such remarkable dedication, the Government of Tamil Nadu annually selects exceptional educators and confers the Dr. Radhakrishnan Best Teacher Award upon them. Presented on Teachers' Day—celebrated across India on September 5 to mark the birth anniversary of philosopher, scholar, and former President Dr. Sarvepalli Radhakrishnan—this honor represents one of the highest acknowledgments of lifelong service in education.

Behind Mrs. P. Thenmozhi's 33-year career lies the educational journey of countless students, continuous efforts toward school development, and an unshakable faith in the power of education. This award honors not only her personal milestone, but also the bright futures of the generations of students she has guided.


HOPE’: A Mid length Short Film That Transcends into a World-Class Feature Film

 HOPE’: A Mid length Short Film That Transcends into a World-Class Feature Film*

 


*The First Look Poster and Trailer were unveiled by leading personalities from the Tamil film industry, including Directors Venkat Prabhu, Karthik Subbaraj, Sasikumar, Samuthirakani, Nithilan Saminathan and Sri Ganesh*


*Trailer Link: https://youtu.be/NlsAkp8WZMs*


*Produced and directed by Ramu Kannan, the film stars Abhinaya, Suresh Kannan and Rajeshwari in key roles*

 

Produced under the banners of *Tripod Travel Productions* and *DHF Film Corporation*, *HOPE* is a short film produced by *Ramu Kannan and Devaki Nithyanandam* and directed by *Ramu Kannan*.

 

Made with the scale and production values of a feature film, *HOPE* is a *world-class 30-minute short film*, created without compromising on its creative vision. The film features *Abhinaya Anand*, known for *Naadodigal*, along with *Suresh Kannan* and *Rajeshwari* in key roles.

 

The *First Look Poster and Trailer of HOPE* were unveiled on Sunday morning, *6 September 2026*, by prominent personalities from the film industry, including *Director Venkat Prabhu, Director Karthik Subbaraj, Director-Actor Sasikumar, Director-Actor Samuthirakani, Director P.S. Vinothraj, Director Nithilan Saminathan, Cinematographer Vijay Karthik Kannan, Editor Praveen KL, Pradeep E. Ragav, Kamala Cinemas Managing Director Vishnu Kamal, and Film Publicist Nikhil Murukan*.

 

The music for *HOPE* has been composed by renowned Malayalam composer *Palee Francis*, who composed the music for the National Award-winning film *Saudi Vellakka* in 2022. *Gopi Duraisamy* has handled the cinematography.

 

The sound design has been handled by *Sachin Sudhakaran and Hariharan M*, who won the National Award in 2023. *Aravind Menon* has handled the sound mixing. Editing and production design have also been handled by director *Ramu Kannan*.

 

Speaking about *HOPE*, director *Ramu Kannan* said:

 

 

“Through this film, we wanted to explore how important it is to face the negative thoughts that arise during crucial moments in our lives with hope and confidence.

 

We are currently working towards developing this short film into a feature-length film. We are planning to expand it into an anthology by adding *three more 30-minute episodes* in the genres of thriller, comedy and action. In keeping with the title, *hope will remain the central theme of all the stories*.”

 

 

Adding to its achievements, this *30-minute short film has already been selected for film festivals in Shimla and Kolkata*. The team is also awaiting announcements from several upcoming Indian and international film festivals.

 

The *Trailer of HOPE* can be watched at *Kamala Cinemas, Chennai*, during the interval of all movie screenings, starting *6 September 2026*.

 

Director *Ramu Kannan* expressed his heartfelt gratitude to all the film industry personalities who placed their trust in *HOPE* and in him by unveiling the film’s First Look Poster and Trailer

ஹோப்': உலகத் தரத்தில், திரைப்படமாகும் 30 நிமிட குறும்படம்

ஹோப்':  உலகத் தரத்தில், திரைப்படமாகும் 30 நிமிட குறும்படம்



*முதல் பார்வை மற்றும் டிரெய்லரை இயக்குநர் வெங்கட் பிரபு, கார்த்திக் சுப்புராஜ், சசிகுமார், சமுத்திரக்கனி, நித்திலன் சாமிநாதன், ஶ்ரீகணேஷ் உள்ளிட்ட முக்கிய திரையுலக பிரபலங்கள் வெளியிட்டனர்* 


*Trailer Link: https://youtu.be/NlsAkp8WZMs*


*ராமு கண்ணன் தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் அபிநயா, சுரேஷ் கண்ணன், ராஜேஸ்வரி முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்*


டிரைபாட் டிராவல் மற்றும் டி ஹெச் எஃப் ஃபிலிம் கார்ப்பொரேஷன் பேனர்களில் ராமு கண்ணன் மற்றும் தேவகி நித்யானந்தம் தயாரிப்பில் ராமு கண்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள குறும்படம் 'ஹோப்'. 


படைப்பாக்கத்தில் எந்த சமரசமும் இல்லாமல் ஒரு திரைப்படத்திற்கு உரித்தான பட்ஜெட்டில் உலகத்தரத்தில் உருவாகியுள்ள 'ஹோப்' படத்தில் 'நாடோடிகள்' புகழ் அபிநயா ஆனந்த், சுரேஷ் கண்ணன் மற்றும் ராஜேஸ்வரி முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 


'ஹோப்' முதல் பார்வை மற்றும் டிரெய்லரை கடந்த ஞாயிறு (06.09.2026) அன்று காலை இயக்குநர் வெங்கட் பிரபு, இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், இயக்குநர்-நடிகர் சசிகுமார்,இயக்குநர்-நடிகர் சமுத்திரக்கனி,  இயக்குநர் பி.எஸ். வினோத்ராஜ், இயக்குநர் நித்திலன் சாமிநாதன், ஒளிப்பதிவாளர் விஜய் கார்த்திக் கண்ணன், படத்தொகுப்பாளர் பிரவீன் கே எல், பிரதீப் ஈ. ராகவ், கமலா திரையரங்க நிர்வாக இயக்குநர் விஷ்ணு கமல் மற்றும் திரைப்பட மக்கள் தொடர்பாளர் நிகில் முருகன் வெளியிட்டனர். 


'ஹோப்' படத்திற்கு தமிழில் முதன்முறையாக 2022ல் தேசிய விருது வென்ற "சவுதி வேலக்கா" திரைப்படத்திற்கு இசையமைத்த பிரபல மலையாள இசையமைப்பாளர் பாலி பிரான்சிஸ் இசையமைக்க, கோபி துரைசாமி ஒளிப்பதிவை கையாண்டுள்ளார். ஒலி வடிவமைப்பை 2023ல் தேசிய விருது வென்ற சச்சின் சுதாகரன் மற்றும் ஹரிஹரன் எம் ஆகியோரும் ஒலிக்கோர்வையை அரவிந்த் மேனனும் செய்துள்ளனர். படத்தொகுப்பு மற்றும் தயாரிப்பு வடிவமைப்பையும் இயக்குநர் ராமு கண்ணனே கையாண்டுள்ளார். 


'ஹோப்' குறித்து பேசிய இயக்குநர் ராமு கண்ணன், "வாழ்க்கையில் முக்கியமான தருணங்களில் நமக்கு உண்டாகும் எதிர்மறை எண்ணங்களை நம்பிக்கையுடன் கையாள்வது எவ்வளவு முக்கியம் என்பதை இந்த படைப்பின் மூலம் வெளிப்படுத்தியுள்ளோம். இக்குறும்படத்தை ஒரு முழு நீள திரைப்படமாக உருவாக்கும் பணியில் தற்போது ஈடுபட்டுள்ளோம். திரில்லர், நகைச்சுவை, ஆக்ஷன் என இன்னும் மூன்று கதைகளை சேர்த்து ஆந்தாலஜி பாணியில் இதை உருவாக்கவதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளோம். தலைப்புக்கு ஏற்ற வகையில் அனைத்து கதைகளின் மைய நோக்கமாக நம்பிக்கையே இருக்கும்," என்றார்.


இந்த 30 நிமிட குறும்படம் ஏற்கனவே சிம்லா மற்றும் கல்கத்தாவில் நடைபெறும் திரைப்பட விழாக்களுக்கு தேர்வாகியுள்ளது கூடுதல் சிறப்பு. மேலும் வரவிருக்கும் இந்திய மற்றும் சர்வதேச  திரைப்பட விழாக்களின் அறிவுப்புகளுக்காக காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.


இப்படத்தின் முன்னோட்டத்தினை சென்னை கமலா திரையரங்கில் நேற்று (06.09.2026) முதல் அனைத்து திரைப்படங்களின் இடைவெளியிலும் காணலாம்.


'ஹோப்' மீதும் தன் மீதும் நம்பிக்கை வைத்து முதல் பார்வையையும் டிரெய்லரையும் வெளியிட்ட திரையுலக பிரபலங்களுக்கு இயக்குநர் ராமு கண்ணன் நம்பிக்கை கலந்த நன்றி தெரிவித்தார். 



Tuesday, 8 September 2026

SEYON welcomes Senthamizhan SEEMAN

 SEYON welcomes Senthamizhan SEEMAN 

Director, Actor and Political leader Mr. Seeman has joined the cast of the upcoming film SEYON, marking an exciting addition to the highly anticipated project. Seeman has commenced shooting for the film in Madurai, where his presence on the sets has already generated considerable interest and heightened expectations surrounding the film.

Starring Sivakarthikeyan in the lead role, the film is directed by Sivakumar Murugesan, with music composed by Santhosh Narayanan and action by Anbariv. The film is Produced by Thiru. Kamal Haasan and R. Mahendran under the banners of RaajKamal Films International and Turmeric Media.

SEYON is steadily building strong anticipation among audiences and raising expectations with every new update.

சேயோன்’ திரைப்படத்தில் இணைகிறார் சீமான்!

சேயோன்’ திரைப்படத்தில் இணைகிறார் சீமான்!

இயக்குநர், நடிகர் மற்றும் அரசியல் இயக்கத்தின் தலைவர் என பன்முகம் கொண்ட ஆளுமை செந்தமிழன் திரு. சீமான் அவர்கள் ‘சேயோன்’ திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 

தற்போது மதுரையில் நடைபெற்று வரும் ‘சேயோன்’ படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வருகிறார். செந்தமிழன் சீமான் அவர்கள் சேயோனில் இணைந்ததால், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.


சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்கிறார். சிவகுமார் முருகேசன் இயக்குகிறார். சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார். அன்பரிவ் சண்டைப் பயிற்சி அளிக்கின்றனர். இந்தப் படத்தை ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் டர்மெரிக் மீடியா இணைந்து உருவாக்கி வருகிறது. திரு. கமல்ஹாசன் மற்றும் ஆர். மகேந்திரன் ஆகிய இருவரும் படத்தைத் தயாரிக்கிறார்கள்.


அடுத்தடுத்து வரும்  புதிய புதிய அறிவிப்புகளால் ‘சேயோன்’ படம் மக்களிடையே பெரும் ஆர்வத்தையும், எதிர்பார்ப்பையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.