Featured post

Tovino Thomas and Johnpaul George Reunite: Guppy’s 10th Anniversary Sparks Excitemen

 Tovino Thomas and Johnpaul George Reunite: Guppy’s 10th Anniversary Sparks Excitement* Marking the tenth anniversary of the critically accl...

Saturday, 1 July 2023

பாட்னர்' படத்தின் முன்னோட்டம் வெளியீடு

 *பாட்னர்' பத்திரிகையாளர் சந்திப்பு*

*பாட்னர்' படத்தின் முன்னோட்டம் வெளியீடு*

அறிமுக இயக்குநர் மனோஜ் தாமோதரன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் முதல் திரைப்படம் 'பாட்னர்'. இதில் ஆதி, ஹன்சிகா மோத்வானி, பாலக் லால்வானி, யோகி பாபு, பாண்டியராஜன், ரோபோ சங்கர், ஜான் விஜய், ரவி மரியா, தங்கதுரை உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஷபீர் அகமது ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ் தயாநிதி இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை பிரதீப் ஈ. ராகவ் கவனிக்க, கலை இயக்கத்தை வி சசிகுமார் மேற்கொண்டிருக்கிறார். நகைச்சுவையை மையப்படுத்தி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ராயல் ஃபார்ச்சூனா கிரியேஷன்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கோலி சூரிய பிரகாஷ் தயாரித்திருக்கிறார்.












இப்படத்தினை விளம்பரப்படுத்தும் வகையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்று சென்னையில் நடைபெற்றது. இதன் போது நடிகர்கள் ஆதி, பாண்டியராஜன், ஜான்விஜய், ரோபோ சங்கர், நடிகை ஹன்சிகா மோத்வானி, ஒளிப்பதிவாளர் ஷபீர் அஹமது, இசையமைப்பாளர் சந்தோஷ் தயாநிதி ஆகிய படக் குழுவினருடன், இயக்குநர்கள் ஏ. சற்குணம், தங்கம் சரவணன், தாஸ் ராமசாமி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.


நடிகர் ஜான் விஜய் பேசுகையில், '' இந்தப் படத்தின் கதை கேட்டு நடிக்க ஒப்புக்கொண்டு படபிடிப்பு தளத்திற்கு சென்றவுடன் இயக்குநர் என்னிடம், ' நீங்கள் ஒரு பிசினஸ்மேனாக நடிக்க வேண்டும் என்றார். அதன் பிறகு உங்களுடன் ஒரு கும்பல் இருக்கும் என்றார். அதன் பிறகு இதுதான் உங்களது வசனம் என சொல்லி ஒரு பேப்பரை கொடுத்தார். முதல் வரியை படித்தவுடன் புரிந்து விட்டது. எனது வலது பக்கம் யோகி பாபு. இடது பக்கம் தங்கதுரை. அதன் பிறகு ரோபோ சங்கர். இவர்களைக் கடந்து நான் எப்படி பேசுவது...! அதனால் படத்தில் எப்போதும் கண்ணாடியை கழற்றி இப்படியும் அப்படியுமாக பார்ப்பதுதான் என் வேலை.


பொதுவாக ஒரு பெண் பெண்ணாக நடிப்பது எளிது. ஆனால் ஆணாக நடிப்பது கடினம். ஆனால் ஹன்சிகா தன் திறமையான் நடிப்பால் அனைவரையும் நிச்சயமாக கவர்வார்.


ஒவ்வொரு காட்சியிலும் நடிக்கும் நடிகர்கள், காட்சியில் காமெடி தூக்கலாக இருக்க வேண்டும் என கடுமையாக உழைத்து சிரிக்க வைத்திருக்கிறார்கள்.'' என்றார் .


இயக்குநர் தாஸ் ராமசாமி பேசுகையில், '' இதுவரை 'காத்திருத்தல்' எனும் பாட்னருடன் இணைந்திருந்தார் மனோஜ். படத்தின் முன்னோட்டம் வெளியாகி இருக்கிறது. இனிமேல் படம் வெளியாகும் வரை 'பதற்றம்' எனும் பாட்னருடன் இருப்பார். படம் வெளியான பிறகு 'வெற்றி' எனும் பாட்னருடன் எப்போதும் இருப்பார்.  எப்போதும் இருக்க வேண்டும் என வாழ்த்துகிறேன். '' என்றார்.


இயக்குநர் சற்குணம் பேசுகையில், '' முன் பின் அறிமுகம் இல்லாத நபர்களிடத்தில் பேச தொடங்கினாலும்.. ஐந்து நிமிடத்தில் அவர்களின் கவனத்தை ஈர்க்கக்கூடிய அளவிற்கு ஆற்றல் படைத்தவர் தான் தம்பி மனோஜ் தாமோதரன். என்னுடைய இயக்கத்தில் தயாரான படங்களில் தொடர்ந்து அவர் உதவியாளராக பணியாற்றி இருக்கிறார். அதன் போது மிகப் பெரிய தேடலையும், கடின உழைப்பையும் அளித்து கவனம் ஈர்த்தவர் தான் மனோஜ். இந்தக் கதை எனக்கு ஏற்கனவே தெரியும். இதில் என்ன பிளஸ் என்றால்.. ஒரு மாறுபட்ட கதைகளத்திலிருந்து ஒரு கதையை சொல்லி, இயக்குநர் அறிமுகம் ஆகும்போது  அந்தப் படைப்பை ரசிகர்கள் கொண்டாட தயங்கியதில்லை. அவர்களை ரசிகர்களும், ஊடகங்களும் வரவேற்பு அளிக்கிறது. அந்த வகையில் இந்த படம் முற்றிலும் மாறுபட்ட களம். அதிலும் நகைச்சுவையை கொண்டு அடுத்து என்ன...! அடுத்து என்ன..! என சுவாரசியமான எதிர்பார்ப்பை ஏற்படுத்தி பார்வையாளனுக்கு அளித்தால், அந்த படம் வெற்றி பெறும். அப்படி ஒரு திரை கதையை இந்த படத்தில் மனோஜ் அமைத்திருக்கிறார். அதனால் இந்த படம் மாபெரும் வெற்றி பெற்று மனோஜுக்கு தமிழ் சினிமா மிகப்பெரிய இடத்தை வழங்கி, அங்கீகரிக்கும் என நம்புகிறேன். 


இப்படத்தின் நாயகனான ஆதியை சந்திக்கும் போதெல்லாம் பாட்னர் படத்தை பற்றியும், இயக்குநர் மனோஜ் பற்றியும் நிறைய நேரம் சிலாகித்து பேசி இருக்கிறார். அந்த வகையில் ஆதிக்கும் இந்த படத்தின் மீது பெரிய நம்பிக்கை உண்டு. 


தமிழில் ஒரு சில கதாநாயகர்களுக்குத் தான் இரண்டு மொழிகளிலும் தங்களுடைய இருப்பை தக்கவைத்துக் கொள்ளும் வாய்ப்பு அமையும். அந்த வகையில் தமிழ் , தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் தன் இருப்பை எப்போதும் தக்க வைத்துக் கொண்டிருக்கும் ஹீரோ ஆதிக்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.


இந்தப் படத்திற்கு மிகப்பெரிய பலம் படத்தில் நடித்திருக்கும் நட்சத்திர பட்டாளங்கள். அதனால் நகைச்சுவைக்கு பஞ்சம் இருக்காது.


எனது இயக்கத்தில் வெளியான 'வாகை சூடவா' எனும் படத்தில் ஒளிப்பதிவு உதவியாளராக பணியாற்றிய ஷபீர், இந்த படத்தில் ஒளிப்பதிவாளராக அறிமுகமாகிறார். அவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். படத்தில் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் நடிகர் நடிகைகளுக்கும் இப்படம் மிகப்பெரிய வெற்றியை தர வேண்டும் என வாழ்த்துகிறேன். இயக்குநர் மனோஜின் கடும் உழைப்பிற்கு என்னுடைய சல்யூட். வாழ்த்துக்கள்'' என்றார்.


நடிகர் ஆதி பேசுகையில், '' பாட்னர் படத்தின் கதையை இயக்குநர் மனோஜ் எனக்கு முதலில் போனில் தான் சொன்னார்.‌ 'ஐந்து நிமிடத்தில் படத்தின் ஒன்லைனை சொல்லிவிடுகிறேன். பிடித்திருந்தால் கதையாக விவரிக்கிறேன்' என்றார். 'பெஸ்ட் ஃபிரண்ட்ஸ்.. ரூம் மேட்ஸ்... மச்சான் மச்சான் என்று கூப்பிட்டுக்கொள்வார்கள். குட் நைட். சொல்லி தூங்குகிறார்கள். மறுநாள் காலையில் பார்த்தால் பெஸ்ட் பிரண்ட்... அழகான ஃபிகராக மாறிவிடுகிறார்.' இதை கேட்டதும் சுவாரசியமாக இருக்கிறது என சொல்லி முழு கதையும் கேட்டேன். ஆனால் பிரண்டு ஃபிகராக மாறுவது எப்படி ? பின் விளைவு என்ன? என்பது குறித்தும் விளக்கமளித்தார். நான் சீரியஸாக கதைகளை கேட்டு உணர்வு பூர்வமாக நடித்து வருபவன். இந்தப் படத்தின் படப்பிடிப்பு தளத்தில் முதல் இரண்டு மூன்று நாட்களுக்கு இயக்குநரிடம் இப்போது எடுக்க போகும் காட்சி என்ன? இதற்கு முன் காட்சி என்ன? நான் என்ன மாதிரியான மனநிலையில் இருக்க வேண்டும்? என கேட்டேன். அப்போது இயக்குநர், 'ரொம்ப யோசிக்காதீங்க' என்றார். அதற்குப் பிறகு எனக்கு புரிந்து விட்டது. ஒரு பள்ளிக்கூடத்தில் இருந்து சுற்றுலா செல்வது போல் ஜாலியாக இருக்க வேண்டும் என சொன்னதும் ,அதை அப்படியே ஏற்றுக் கொண்டு நடிக்கத் தொடங்கி விட்டேன். சக கலைஞர்களுடன் ரசிகர்களை எப்படி சிரிக்க வைக்க வேண்டும் என்பதை மட்டும் யோசித்து நடித்தோம். ஒவ்வொரு காட்சியையும், ஒவ்வொரு வசனத்தையும் ரசித்து ரசித்து படமாக்கி இருக்கிறோம். எங்களுடைய சந்தோஷம் ரசிகர்களுக்கும் கிடைக்கும் என நம்புகிறோம். நடிகர் நடிகைகளும், தொழில்நுட்ப கலைஞர்களும் ஜாலியாகவும் அதே சமயத்தில் கஷ்டப்பட்டும் உழைத்திருக்கிறோம். தயாரிப்பாளர் தமிழில் முதல் படத்தை தயாரிக்கிறார். படத்திற்கான பட்ஜெட்டை விட கூடுதலாக செலவழித்திருக்கிறார். இந்த ‘பாட்னர்’ படத்தை குழந்தைகளுடன் திரையரங்குகளுக்கு சென்று, பாப்கார்ன் சாப்பிட்டுக் கொண்டே சந்தோஷமாக பார்க்க வேண்டிய படம். ரொம்ப யோசிக்காமல் படம் பார்த்தீர்கள் என்றால்.. படம் நிச்சயம் பிடிக்கும். கதை, திரைக்கதை என ஆழமாக சென்று பார்த்தால் எதுவும் இல்லை. அதற்கான படம் இது இல்லை. சந்தோசமாகவும்.. மனக்கவலைக்கு மருந்தாகவும் இந்த படத்தை பார்த்து ரசிக்கலாம். உங்களுக்கு பிடித்திருந்தால் ஆதரவு தாருங்கள்'' என்றார்.

நடிகை ஹன்சிகா பேசுகையில், '' எல்லோருக்கும் வணக்கம். இந்தப் படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். இந்த படத்தில் காமெடி இருக்கிறது. படக்குழுவினர் அனைவரும் படப்பிடிப்பு தளத்தில் உற்சாகமாக பணியாற்றினோம். இந்த படத்தில் நீங்கள் வித்தியாசமான ஹன்சிகாவை காணலாம். அனைவரும் திரையரங்கத்திற்கு வருகை புரிந்து ஆதரவளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இப்படத்தில் நடிக்க வாய்ப்பளித்த இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் நன்றி.'' என்றார்.


இயக்குநர் மனோஜ் தாமோதரன் பேசுகையில், '' இப்படத்திற்கு  தயாரிப்பாளர் எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன் மூலமாக ராயல் ஃபார்ச்சூனா நிறுவனத்தின் தயாரிப்பாளரைச் சந்தித்தேன். அவர்கள் கதையை கேட்டு படத்தை இயக்கும் வாய்ப்பளித்தனர். எனக்கு தொழிலை கற்றுக் கொடுத்த குருக்களான இயக்குநர்கள் தங்கம் சரவணன், சற்குணம், தாஸ் ராமசாமி ஆகியோர்களுக்கு நன்றி.


முதலில் ஹைதராபாத்திற்கு சென்று ஆதியிடமும், பிறகு மும்பைக்குச் சென்று ஹன்சிகாவிடமும் கதையை சொல்லி சம்மதம் வாங்கினேன். அதன் பிறகு யோகி பாபுவிடமும் சொன்னேன். அதன் பிறகு பாண்டியராஜன், முனீஸ்காந்த், ஜான் விஜய், மொட்டை ராஜேந்திரன், பாலக் லால்வானி என அனைவரிடமும் சொன்னேன். இது ஒரு காமெடி படம். லாஜிக் இல்லாமல் சிரிக்க வைக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் இப்படத்தை உருவாக்கி இருக்கிறோம்.


ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர், கலை இயக்குநர், படத்தொகுப்பாளர்.. என அனைத்து தொழில்நுட்ப கலைஞர்கள் தங்களின் முழுமையான ஒத்துழைப்பை வழங்கினர். எனது இயக்கத்தில் வெளியாகும் முதல் திரைப்படம் இது. அனைவரும் திரையரங்குகளுக்கு வருகை தந்து ரசித்து ஆதரவளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். '' என்றார்.


இதனிடையே ஆதி நடிப்பில் வெளியான 'பாட்னர்' படத்தின் முன்னோட்டத்திற்கு பார்வையாளர்களிடத்தில் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


https://youtu.be/6P5v-VYvZdQ

தென்றல் தேவா இசையமைக்கும் ஹாரர் மற்றும் திரில்லர் கலந்த படம்

 

தென்றல் தேவா இசையமைக்கும் ஹாரர் மற்றும் திரில்லர் கலந்த படம்    " P- 2 " 


அறம் புரொடக்ஷன் என்ற பட நிறுவனம் சார்பில் P.ராமலிங்கம் தயாரிக்கும் படத்திற்கு வித்தியாசமாக " P- 2 " என்று பெயரிட்டுள்ளனர்.






கன்னடம், தெலுங்கு உட்பட 10 கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகனாக நடித்துள்ள மனோஜ் இந்த படத்தின் மூலம் தமிழில் நாயகனாக அறிமுகமாகிறார்.


சமீபத்தில் வெளியான யாத்திசை படத்தில் நடித்த சித்து குமரேசன்  

கதாநாயகியாக நடிக்கிறார். மற்றும் இளவரசு, ராஜசிம்மன், சம்பத்ராம், தீபா மற்றும் மஸ்காரா அஸ்மிதா ஆகியோர் நடிக்கிறார்கள்.


தேனிசை தென்றல் தேவா இசையாமைக்கிறார்.

ஒளிப்பதிவு - S. R. வெற்றி

பாடல்கள் - சினேகன்

எடிட்டிங் - மாதவன்

ஸ்டண்ட் - ஓம் பிரகாஷ்

நடனம் - ராதிகா, ஜான்

மக்கள் தொடர்பு - மணவை புவன்

தயாரிப்பு - P. ராமலிங்கம்

கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குக்கிறார் - சிவம்.


படம் பற்றி இயக்குனர் சிவம் கூறியதாவது....


ஹாரர் மற்றும் திரில்லர் கலந்து இந்த கதையை உருவாக்கி இருக்கிறோம். நம்பிக்கை துரோகத்தை மையப்படுத்தி திரைக்கதையை அமைத்திருக்கிறோம். தேனிசை தென்றல் தேவா இசையமைப்பதால் இந்த படத்திற்கு கூடுதல் பலம் கிடைத்துள்ளது.


படப்பிடிப்பு முழுவதும் சென்னை மற்றும்  சுற்றுவட்டார பகுதிகளில் நடைபெற உள்ளது என்றார் இயக்குனர் சிவம்.


தயாரிப்பாளர் மற்றும் திரைப்பட விநியோகஸ்தர் C.N. ரவிகுமார் இன்று இசையமைப்பாளர் தேவா ஸ்டுடியோவில் P -2  படத்தின் பூஜையுடன் பாடல் பதிவை துவக்கி வைத்தார்.

ராயர் பரம்பரை” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

 “ராயர் பரம்பரை” திரைப்பட  பத்திரிக்கையாளர் சந்திப்பு !!


CHINNASAMY CINE CREATIONS சார்பில் சின்னசாமி மௌனகுரு தயாரிப்பில், இயக்குநர் ராம்நாத் T இயக்கத்தில் கிருஷ்ணா, சரண்யா, கிருத்திகா, ஆனந்த்ராஜ், மொட்டை ராஜேந்திரன், மனோபாலா நடிப்பில் காமெடி கலந்த கமர்ஷியல் திரைப்படமாக உருவாகியுள்ள திரைப்படம் “ராயர் பரம்பரை”. மேலும் இப்படத்தில் கஸ்தூரி, KR விஜயா, RNR மனோகர், பாவா லக்‌ஷ்மணன், ஷேஷு, பவர் ஸ்டார் ஶ்ரீனிவாசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் ஜூலை 7ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில் படக்குழுவினர் கலந்துகொள்ள  இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இனிதே நடைபெற்றது.













இந்நிகழ்வினில்


பாடலாசிரியர் கணேஷ் ராகவேந்திரா பேசியதாவது…

காமெடி கலந்த ஒரு சுவாரஸ்யமான படம் கண்டிப்பாக உங்களுக்கு ரொம்ப பிடிக்கும். படத்தைப் பார்த்து ஆதரவு தாருங்கள். அனைவருக்கும் நன்றி.


பாடலாசிரியர் மோகன் ராஜா பேசியதாவது,

முதலில் சின்னசாமி சாருக்கு நன்றி, இந்த படத்தில் நான் மூன்று பாடல்களை எழுதியுள்ளேன், இயக்குநர் இரண்டு பாடலை எழுதினார், நான் கிருஷ்ணா சாருடன் இணைந்து பணிபுரிகிறேன் அவரின் கதை தேர்வு எனக்கு மிகவும் பிடிக்கும், இசையமைப்பாளர் எனக்கு பெரும் ஒத்துழைப்பு தந்தார், இன்று மட்டுமில்லை ஆரம்பக் காலங்களிலிருந்தே எனக்கு உதவியாக இருந்தார், பாடல்கள் அனைத்தும் நன்றாக வந்துள்ளது படத்திற்கு ஆதரவு தாருங்கள் நன்றி.


இயக்குநர் ஜெகதீஷ் பேசியதாவது,

படக்குழு அனைவருக்கும் எனது வணக்கம் இந்தப் படம் அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் பிடிக்கும் , இயக்குநர் இடைவிடாத முயற்சி கொண்டவர் அவரது கடின உழைப்புக்கு கிடைத்த பரிசு இது, படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் நன்றி.


தமிழ்மகன் இளங்கோ பேசியதாவது,

இந்தப் படக்குழு அனைவரும் மிக எளிமையான மனிதர்கள் , அனைவருடனும் பழகும் வாய்ப்பு கிடைத்தது. இயக்குநர் ஒரு விடா முயற்சியாளர், இந்தப் படம் அவரது முயற்சிக்கு ஒரு நல்ல பலனாக இருக்கும் படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் நன்றி.


திரைப்பட தயாரிப்பாளர் பன்னீர்செல்வம் பேசியதாவது,

தயாரிப்பாளர் சின்னசாமி அவர்களுக்கு இந்தப்படம்  பெரிய வெற்றி தர வாழ்த்துகள், படக்குழு அனைவருக்கும் என் வாழ்த்துக்கள் படம் கண்டிப்பாக வெற்றியடையும் நன்றி.


தயாரிப்பாளர் கே ராஜன் பேசியதாவது…

ஒரு நல்ல படம் என்பது டிரெய்லரிலேயே தெரிகிறது. பாட்டு, ஃபைட்,  காமெடி என எல்லாமே நன்றாக இருக்கிறது. கிருஷ்ணா அட்டகாசமாக நடித்திருக்கிறார். இது சின்ன படம் இல்லை நிறையச் செலவு செய்திருக்கிறார்கள், இது பெரிய படம்.  இப்போது நிறைய படங்கள் ஜாதி வெறியைத் தூண்டுவதாக அமைந்துள்ளது. அந்த சமூகத்திற்குப் பாதிப்பு என ஜாதி வெறியைத் தூண்டுகிறார்கள். ஆனால் இந்த படத்தில் மதம் பற்றி நல்ல விசயத்தைக் காட்டுகிறார்கள். முஸ்லீம் பெண்ணை காப்பாற்ற இந்து கடவுளின் வேலை தூக்கி வருகிறான் நாயகன். இப்படி நல்ல விஷயங்களை காட்டுங்கள்,  யாரும் மத வெறியைத் தூண்டாதீர்கள். ஒரு படம் வெற்றி பெறத் தயாரிப்பாளர் தான் காரணம் இயக்குநர் கலைஞர்கள் உணர்ந்து செயல்பட வேண்டும். இப்படத்தில் பாடல்கள் நன்றாக இருக்கிறது. வெற்றி பெற அனைத்து தகுதியும் இப்படத்திற்கு உள்ளது. இப்படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் நன்றி.


லொள்ளு சபா புகழ் நடிகர் ஜீவா பேசியதாவது,

இந்தப் படத்தின் கதாநாயகன் கிருஷ்ணா எனக்கு நீண்ட நாள் நண்பன், அவரது முதல் படத்தில் அவருடன் நான் இணைந்து நடித்தேன், அப்போதே நல்ல பழக்கம். இடையில் அவரைப் பார்க்கவில்லை நீண்ட நாட்கள் ஆகிவிட்டது, இன்று இங்கு வந்தது மகிழ்ச்சியாக உள்ளது. படம் நன்றாக வந்துள்ளது என்ற நம்பிக்கை இருக்கிறது, படம் சுந்தர் சி சாரின் காமெடி படம் போல இருக்கிறது, கண்டிப்பாக வெற்றி பெறும். மனோ பாலா சார் மறைவை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை, நீங்கள் அனைவரும் உடலின் மீது அக்கறை கொண்டு நல்ல உணவை உட்கொண்டு உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள் நன்றி, படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்


கதாநாயகி கிருத்திகா பேசியதாவது,

இது எனக்கு முதல் படம் , படத்தில் கிருஷ்ணாவுடன் இணைந்து நடித்தது ஒரு நல்ல அனுபவமாக இருந்தது, படம் நன்றாக வந்துள்ளது கண்டிப்பாகப் படம் உங்களுக்குப் பிடிக்கும், நன்றி .


இயக்குநர் ராம்நாத் T பேசியதாவது,

நாம் ஒரு கதையை எவ்வளவு சிரமப்பட்டு எழுதினாலும் கதாநாயகன் சரியாக அமையவில்லை என்றால் படம் நிற்காது, கிருஷ்ணா ஒரு நல்ல நடிகர் அவரது கண்ணில் ஒரு உயிர் உள்ளது, இந்தப் படத்தை நான் உருவாக்க காரணம், நான் கண்ட ஒரு உண்மை சம்பவம். ஒரு சமுதாயக் கோபம் எனக்கு உள்ளது அது தான் இந்தப் படம் உருவாக காரணம், கதாநாயகன் எனக்கு மிகவும் நெருக்கமாகி விட்டார் , இசையமைப்பாளருக்கு மீண்டும் இந்தப் படம் ஒரு அடையாளத்தை அளிக்கும், படம் நன்றாக வந்துள்ளது கண்டிப்பாக உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் படம் பார்த்து விட்டு ஆதரவு தர வேண்டும் நன்றி.


நடிகர் ஆனந்த்ராஜ் பேசியதாவது,

மறைந்த நடிகர் மனோவிற்கு முதலில் என் அஞ்சலியை தெரிவித்துக் கொள்கிறேன், இந்தப்படம் சிறிய படம் இல்லை, ஒரு நல்ல பெரிய படம் , தயாரிப்பாளர் படத்திற்கு தேவையான அனைத்தையும் செய்து கொடுத்துள்ளார், இந்தப் படம் ஜாதி மதம் பேசுகிற ஒரு ஜாலியான படம், யாரையும் தாழ்த்தி பேசாத ஒரு நல்ல படம், படத்தில் பல காமெடி கட்சிகளை எடுத்து வைத்துள்ளார் இயக்குநர், படம் கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும் மக்களிடம் கொண்டு போய் இதை நீங்கள் தான் சேர்க்க வேண்டும் நன்றி,


தயாரிப்பாளர் சின்னசாமி பேசியதாவது,

நான் நடிக்க ஆசைப்பட்டு வந்தேன், ஆனால் என்னை யாரும் ஆதரிக்கவில்லை. அதனால் 10 வருடம் கஷ்டப்பட்டு உழைத்து இந்தப் படத்தைத் தயாரித்து அதில் சிறு கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன், நான் யாருக்கும் சமரசம் செய்யாமல் இந்த படத்திற்கு தேவையானதைச் செய்துள்ளேன், படம் கண்டிப்பாக உங்களுக்குப் பிடிக்கும். எங்களைப் போன்ற புது குழுவிற்கு நீங்கள் ஆதரவு தர வேண்டும் நன்றி,


நடிகர் கிருஷ்ணா பேசியதாவது…

கொரோனா முடிந்தவுடனே நான் ஒப்பந்தமான படம் இது தான். ஃபுல் ஹீயூமர் படம், நான் முன்பு இந்த மாதிரி பண்ணியதில்லை. இயக்குநரை நம்பி தான் களம் இறங்கினேன். இயக்குநர் கேப்டன் என்றாலும் கப்பல் சின்ன சாமி சார் தான் அவருக்கு நன்றி. எல்லா படத்திற்கும் உங்கள் ஆதரவு இருந்துள்ளது, அதே போல் இந்தப் படத்திற்கு ஆதரவு தாருங்கள். நாயகி எல்லா ஜவுளிக்கடை போட்டோவிலும் இவர் படம் தான் இருக்கும், நல்ல மாடல் நன்றாக நடித்துள்ளார். படம் வெற்றி பெற ஆதரவு தாருங்கள் நன்றி.

பிரசாந்த் வர்மாவின் 'ஹனு-மேன்' படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு

 பிரசாந்த் வர்மாவின் 'ஹனு-மேன்' படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு


அடுத்த ஆண்டு ஜனவரி 12 ஆம் தேதியன்று சங்கராந்தி தினத்தில் வெளியாகிறது பிரசாந்த் வர்மா -தேஜா சஜ்ஜா- பிரைம்ஷோ என்டர்டெய்ன்மென்ட் கூட்டணியில் தயாரான 'ஹனு-மேன்'



கற்பனை திறன் மிகு படைப்பாளியான பிரசாந்த் வர்மாவின் திரை உலகத்தில் உருவாகி வரும் 'ஹனு-மேன்' படத்தின் புதிய வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டிருக்கிறது. அந்த வகையில் இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி 12ஆம் தேதியன்று பான் இந்திய படமாக வெளியாகிறது.


படத்தின் தரத்தை உயர்த்தும் அளவிற்கான கிராபிக்ஸ் வேலைகள் இருப்பதால்.. தாமதம் ஏற்படுகிறது. தயாரிப்பு பணிகள் நிறைவடைந்து தற்போது இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் வி எஃப் எக்ஸ் வேலைகளில் திறமையான தொழில்நுட்ப குழுவினர் பணியாற்றி வருகிறார்கள். படத்தின் தரத்திற்கு எந்த சமரசமும் செய்யாமல் தயாரிப்பாளர்கள் படைப்பை நேர்த்தியாக செதுக்கி வருகிறார்கள். 


அதிக பொருட்செலவில் தயாராகும் திரைப்படங்களுக்கு திரையரங்க வெளியீடு என்பது பொருத்தமான வெளியீட்டு தேதி அவசியமாகிறது. இதனால் அனைவரும் கொண்டாடும் மிகப்பெரிய பண்டிகையான சங்கராந்தி மற்றும் அதிக திரையரங்குகள் தேவைப்படுகிறது. தயாரிப்பாளர்களுக்கும் படத்தின் இறுதி கட்ட பணிகளை நிறைவடைய போதுமான நேரத்தை கேட்டுப் பெறுகிறார்கள். 


மேலும் 'ஹனு-மேன்' திரைப்படம் , பான் இந்தியா அளவில்

விளம்பரப்படுத்தவும், வெளியீட்டு தேதியுடனான பிரத்யேக போஸ்டரில் கதாநாயகன் தேஜா சஜ்ஜா தனது கையில் அனுமன் கொடியுடன் ஒரு மலையிலிருந்து மற்றொரு மலைக்கு குதிக்கும் காட்சி இடம்பெற்றுள்ளது. இது அனுமனின் ஆசீர்வதித்துடன்.. அவரின் வல்லமையை வெளிப்படுத்துகிறது.


மிகச் சிறந்த விசுவல் எபெஃக்ட்ஸ் கொண்ட டீசருக்கு நாடு முழுதும் அமோக வரவேற்பு கிடைத்தது. கலை படைப்புகளுடன் கூடிய 'ஹனுமான் சாலிசா'விற்கும் நல்ல ஆதரவும் கிடைத்தது.


தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம், ஆங்கிலம், ஸ்பானிஷ்,

 கொரியன், சீனம் மற்றும் ஜப்பானீஸ் ஆகிய பல மொழிகளில் 'ஹனு-மேன்'  பான் -வேர்ல்ட் படமாக வெளியாகும்.


'ஹனு-மேன்' அடிப்படையில் அஞ்சனாத்திரி என்ற கற்பனை இடத்தில் அமைக்கப்பட்டுள்ளது  கதாநாயகன் அனுமனின் சக்திகளை பெற்று அஞ்சனாத்திரிக்காக எப்படி போராடுகிறான் என்பதுதான் படத்தின் கதை. இந்த படத்தின் உள்ளடக்கம் உலகளாவியதாக இருப்பதால் உலகம் முழுதும் வெற்றி பெறுவதற்கான சாத்தியக்கூறு உள்ளது. 


இந்தத் திரைப்படத்தில் தேஜா சஜ்ஜா, அமிர்தா ஐயர், வினய் ராய், வரலட்சுமி சரத்குமார், கெட்டப் சீனு, சத்யா, ராஜ் தீபக் ஷெட்டி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். தாசரதி சிவேந்திரா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கௌரஹரி, அனுதீப் தேவ், கிருஷ்ணா சௌரப் ஆகிய மூவர் இணைந்து இசையமைத்திருக்கிறார்கள். இந்தத் திரைப்படத்தை ப்ரைம் ஷோ என்டர்டெய்ன்மென்ட் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. நிரஞ்சன் ரெட்டி தயாரித்திருக்கிறார். இதனை ஸ்ரீமதி சைதன்யா வழங்குகிறார். குஷால் ரெட்டி இணை தயாரிப்பாளராகவும், அஸ்ரின் ரெட்டி மற்றும் வெங்கட் குமார் ஜெட்டி ஆகியோர் நிர்வாக தயாரிப்பாளர்களாகவும் பணியாற்றி இருக்கிறார்கள்.

Prasanth Varma, Teja Sajja, Primeshow Entertainment’s HANU-MAN Releasing For

 Prasanth Varma, Teja Sajja, Primeshow Entertainment’s HANU-MAN Releasing For Sankranthi On Jan 12, 2024*


Creative Director Prasanth Varma’s first film from his Cinematic Universe HANU-MAN starring talented hero Teja Sajja gets a new release date. As announced by the makers, the most-awaited Pan India film will be hitting the screens for Sankranthi on January 12, 2024.



The movie will have extensive CGI work which is causing the delay. The production works were already wrapped up and post-production works are underway. A team of proficient are working on the VFX work of the movie and the makers are carving it in an uncompromised manner.


High-budgeted films require a good season or perfect release date for release so that they will have a strong and long theatrical run. Sankranthi is the biggest season and the makers too get enough time for the remaining work and also to promote the movie at the Pan India level. The release date poster features the protagonist Teja Sajja jumping from one hill to another with a Hanuman flag in his hand. This displays the superpowers possessed by the underdog with the blessings of Lord Hanuman.


The teaser which had top-notch visual effects received an overwhelming response across the country. The Hanuman Chalisa with artwork too was well-received.


HANU-MAN will have Pan World release in several Indian languages including Telugu, Hindi, Marathi, Tamil, Kannada, Malayalam, English, Spanish, Korean, Chinese and Japanese.


HANU-MAN is essentially set-up in an imaginary place called “Anjanadri”. How the protagonist gets the powers of Hanuman and fights for Anjanadri seems to be the story of the film. Since the concept of the film is universal, it has the potential to do well across the globe.


Amritha Aiyer is the leading lady opposite Teja Sajja in the movie, where Vinay Rai will be seen as the antagonist and Varalaxmi Sarathkumar in a key role.


K Niranjan Reddy of PrimeShow Entertainment is producing the movie prestigiously, while Smt Chaitanya presents it. Asrin Reddy is the executive producer, Venkat Kumar Jetty is the Line Producer and Kushal Reddy is the associate producer.


The cinematography for this magnum opus is by Shivendra, wherein the music is scored by the young and talented trio Gowrahari, Anudeep Dev and Krishna Saurabh. Srinagendhra Tangala is the production designer.


Cast: Teja Sajja, Amritha Aiyer, Varalaxmi Sarathkumar, Vinay Rai, Getup Srinu, Satya, Raj Deepak Shetty and others


Technical Crew:

Writer & Director: Prasanth Varma

Producer: K Niranjan Reddy

Banner: Primeshow Entertainment

Presents: Smt Chaitanya

Screenplay: Scriptsville

DOP: Dasaradhi Shivendra

Music Directors: Gowrahari, Anudeep Dev and Krishna Saurabh

Editor: Saibabu Talari

Executive Producer: Asrin Reddy

Line Producer: Venkat Kumar Jetty

Associate Producers: kushal reddy, Pushpak reddy

Production Designer: Srinagendhra Tangala

PRO: Yuvraaj

Costume Designer: Lanka Santhoshi

பாலமுரளி நாத மகோத்சவ் 2023-கான விருது*

 *பாலமுரளி நாத மகோத்சவ் 2023-கான விருது*


Dr.M.பாலமுரளிகிருஷ்ணா அவர்களின் 93-வது நட்சத்திர பிறந்த ஆஷாட விசாகம் நாளை முன்னிட்டு Dr.M.பாலமுரளிகிருஷ்ணா நினைவு அறக்கட்டளையின் கலையில் சிறந்தவருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.  2023-கான முரளீ நாத லஹரி விருது மற்றும் ஒரு லட்ச ரூபாய் பரிசினை பரதநாட்டிய கலைஞர் Dr.பத்மா சுப்பிரமணியம் அவர்களுக்கு வழங்குவதில் பெருமை கொள்கிறது.  இந்த விருது நிகழ்ச்சியினை Dr.M.பாலமுரளி கிருஷ்ணா நினைவு அறக்கட்டளையுடன்  சென்னை பாரதீய வித்யா பவன் இணைந்து வருகின்ற ஜூலை 6-ந்தேதி மாலை 6 மணிக்கு மைலாப்பூர் பாரதீய வித்ய பவன் பிரதான அரங்கில் நடத்துகின்றன.  





இந்நிகழ்ச்சி கலைமாமணி Dr.K.கிருஷ்ணகுமார் மற்றும் கலைமாமணி பின்னி கிருஷ்ணகுமார் அவர்களின் குழுவுடன் வழங்கும் இசை அஞ்சலியுடன் துவங்கவிருக்கிறது.  


நிகழ்ச்சியில் பங்குபெறவிருக்கும் சிறப்பு விருந்தினர்கள் :-

Dr.B.K.கிருஷ்ணராஜ் வானவராயர் - தலைவர்

கோயமுத்தூர், பாரதீய வித்யா பவன் .

Dr.M.பாலமுரளிகிருஷ்ணா நினைவு அறக்கட்டளையின் ,2023-கான முரளீ நாத லஹரி விருது மற்றும் ஒரு லட்ச ரூபாய் பரிசினை Dr.பத்மா சுப்பிரமணியம் அவர்களுக்கு வழங்குகிறார், 

மற்றும் பங்கு பெறும் சிறப்பு விருந்தினர்.


N.ரவி தலைவர் பாரதீய வித்யா பவன் சென்னை,

 பத்மபூஷண் Dr.T.V.கோபாலகிருஷ்ணன், கலைமாமணி திரு K.N.ராமசுவாமி - இயக்குனர் பாரதீய வித்யா பவன் சென்னை வாழ்த்துரை‌ வழங்குகிறார்கள்.

திரு S மோகன்தாஸ் - அறங்காவலர்

 SSVM கல்வி நிறுவனங்கள்  கோயமுத்தூர் 

பாலமுரளீ விசாகம் இசைக்கச்சேரிகளின் லோகோவினை வெளியிட்டு வாழ்த்துரை வழங்க விருக்கிறார்.

Dr.வம்சி மோகன், அறங்காவலர் Dr.M.பாலமுரளி கிருஷ்ணா நினைவு அறக்கட்டளை, 

Dr.K.கிருஷ்ணகுமார், அறங்காவலர் Dr.M.பாலமுரளி கிருஷ்ணா நினைவு அறக்கட்டளை, 

திரு K வெங்கிடாசலம் - துணை இயக்குனர் பாரதீய வித்யா பவன் சென்னை,

 திரு இராஜாமணி - CEO புதுயுகம் தொலைக்காட்சி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்கிறார்கள்.  

மற்றும் இசைக்கவி இரமணன்

 இந் நிகழ்ச்சியினை தொகுத்து வழங்க இருக்கிறார்.  


Dr.M.பாலமுரளி கிருஷ்ணா நினைவு அறக்கட்டளை இவ்வருடம் முதல் ஒவ்வொரு மாதமும் Dr.M.பாலமுரளி கிருஷ்ணா பிறந்த நட்சத்திரம் விசாகம் அன்று பாலமுரளி விசாகம் இன்னிசை நிகழ்ச்சிகளை பாரதிய வித்யா பவன் அரங்கில் வழங்கவிருப்பது சிறப்பு அறிவிப்பாகும். 

 இந்த தொடர் இன்னிசை நிகழ்ச்சிகள் மூலம் 

Dr.M பாலமுரளி கிருஷ்ணா ஒரு வாகேயகாரராக இசை அமைத்த க்ருதிகளும் அவர் பாடி பிரபலமான கிருதிகளையும் வழங்கவிருக்கிறார்கள்.

இத்தொடர் இசை நிகழ்ச்சிகள் மூலம் வளர்ந்து வரும்  கர்நாடக இசை கலைஞர்களை ஊக்குவிக்க பாலமுரளி கிருஷ்ணா நினைவு அறக்கட்டளை முடிவு செய்துள்ளது.

இந்நிகழ்ச்சிக்கு இசை ரசிகர்கள் அனைவரையும் வரவேற்கிறோம்.


For more details, Pls contact Dr. K. Krishnakumar +919840134742

Balamurali Nāda Mahotsav 2023

 Balamurali Nāda Mahotsav 2023

On the day of ĀshāDha ViSākham the 93rd Star Birthday of Dr.M.Balamuralikrishna,   Dr.M.Balamuralikrishna Memorial Trust announces this years Dr.M.Balamuralikrishna National Award for Artistic Excellence 2023 with the title of Murali Nāda Lahari and a cash of ₹1 Lakh on the Bharathanatyam Exponent Dr.Padma Subrahmanyam.  Dr.B.K. Krishnaraj Vanavarayar - Chairman, Bharathiya Vidya Bhavan Coimbatore will bestow the award and deliver his special address.





The award event jointly organised by Dr.M.Balamuralikrishna Memorial Trust and Bharathiya Vidya Bhavan Chennai Kendra will be held on the 93rd birth date from 6pm onwards on 6th July 2023 at Bharatiya Vidya Bhavan Main Hall, Mylapore Chennai.


The event will begin with a tribute group musical to Guruji Dr.M.Balamuralikrishna lead by Kalaimāmani Dr.K.Krishnakumar & Kalaimāmani Binni Krishnakumar.


Felicitations will be by the guests of honour:

N.Ravi - Chairman Bharatiya Vidya Bhavan Chennai,

Murali Nāda Lahari Dr.T.V.Gopalakrishnan,

Kalaimāmani Sri.K.N.Ramaswami - Director Bharatiya Vidya Bhavan Chennai, 


Sri.Mohandoss - Trustee, SSVM Instituitions, Coimbatore will launch the logo on Balamurali ViSākham Concerts 23-24 - A series of concerts as tribute to the legend to be launched at the event. Balamurali ViSākham Concert series - a concert on the ViSākham star day of every month - the birth star of Dr.M.Balamuralikrishna - will highlight the newer generation of musicians who will perform concerts with Balamurali Kritis and  Kritis popularised by the Genius vaggeyakara. 


Dr.Rajamani - CEO Newgen Media

Dr.Vamsie Mohan & Kalaimāmani Dr.K.Krishnakumar - Trustees, Dr.M.Balamuralikrishna Memorial Trust, 

Sri.K.Venkitachalam - Deputy Director, Bharathiya Vidya Bhavan Chennai also participate.

Isaikkavi Ramanan will be the MC.


The award event will highlight and cherish the experiences with the greatest musician of the century Dr.M.Balamuralikrishna. All are welcome.


For more details, Pls contact Dr. K. Krishnakumar +919840134742

சாதனை படைத்த ஷாருக்கானின் 'ஜவான்' பட ஆடியோ உரிமை

 *சாதனை படைத்த ஷாருக்கானின் 'ஜவான்' பட ஆடியோ உரிமை*


*முப்பத்தியாறு கோடி ரூபாய்க்கு விற்பனையானது ஷாருக்கானின் 'ஜவான்' பட இசை உரிமை*



இயக்குநர் அட்லீ குமார் இயக்கத்தில் 'பாலிவுட் பாட்ஷா' ஷாருக்கான், 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி, 'லேடி சூப்பர் ஸ்டார்: நயன்தாரா ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கும் 'ஜவான்' திரைப்படத்தின் ஆடியோ உரிமையை டி-சிரிஸ் நிறுவனம் 36 கோடி ரூபாய்க்கு கைப்பற்றி இருக்கிறது. இது புதிய சாதனை என்றும், இதன் மூலம் திரையுலகில் ஷாருக்கானின் ஆதிக்கம் தொடர்கிறது என்றும் திரையுலக வணிகர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள்.


'ஜவான்' படத்தின் இசை உரிமையை பெற பல முன்னணி நிறுவனங்கள் போட்டியிட்டது. இதில் டி- சிரீஸ் நிறுவனம் இதுவரை இல்லாத அளவிற்கு அதிக தொகையை செலுத்தி இப்படத்தின் ஆடியோ உரிமையை பெற்றிருக்கிறது. 


இது தொடர்பாக முன்னணி ஊடக நிறுவனம் ஒன்று வெளியிட்டிருக்கும் பதிவில்,  ''ஜவான் படத்தின் இசை உரிமைகளை டி- சிரீஸ் நிறுவனம் 36 கோடி ரூபாய்க்கு பெற்றிருக்கிறது. இதன் மூலம் ஷாருக்கானின் ஆதிக்கம் தொடர்கிறது'' என குறிப்பிட்டிருக்கிறது. 


https://twitter.com/boworldwide/status/1674720558301290496?s=46


இப்படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு ஏற்கனவே திரையுலக ஆர்வலர்களிடத்தில் அதிகரித்திருக்கும் நிலையில்... இப்படத்தில் ஆடியோ உரிமை குறித்த ஒப்பந்த விலை பேசு பொருளாக மாறி இருக்கிறது. ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி ஆகியோரின் திறமையும், அட்லீ குமாரின் நேர்த்தியான இயக்கத்தையும் இணைத்து 'ஜவான்' அற்புதமான படைப்பாக தயாராகி இருக்கிறது. உணர்வுபூர்வமான ஆக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படம் செப்டம்பர் 7ஆம் தேதியன்று வெளியாகிறது.

Shah Rukh Khan's Dominance Continues as Jawan Music Rights Smash Records with

Shah Rukh Khan's Dominance Continues as Jawan Music Rights Smash Records with Whopping ₹36 Crores Deal!


In an unprecedented deal, the music rights of the highly anticipated Shah Rukh Khan film Jawan, also starring  Nayanthara and Vijay Sethupathi, helmed by renowned director Atlee Kumar have been sold for an astounding ₹36 crores to the music label T-Series. The fierce competition for these rights witnessed several major players vying for the deal, but it was T-Series' astronomical bid that emerged as a winner, securing the highly sought-after music rights of Shah Rukh Khan’s Jawan. 



The jaw-dropping ₹36 crores deal for the music rights of ‘Jawan’ has shattered all previous records in the industry, reaffirming Shah Rukh Khan's unrivaled dominance and star power. Taking to social media, a media house shared “ Mega #EXCLUSIVE: 

Jawan Music Rights Sold For ALL TIME Record Price Of 36 Crores To T-Series, Shah Rukh Khan Dominance Continues! “


Checkout: https://twitter.com/boworldwide/status/1674720558301290496?s=46


The film is already generating immense buzz among cinephiles and has become the talk of the town with this new agreement. Jawan is poised to be a cinematic spectacle, combining the talents of Shah Rukh Khan, Nayanthara, and Vijay Sethupathi with the directorial finesse of Atlee Kumar. The film is set to deliver an enthralling narrative, filled with emotions, action, and gripping storytelling. Releasing on 7th September .