Featured post

புத்தியே சிறந்த ஆயுதம் ; க்ரைம் த்ரில்லராக உருவாகும் ‘பீப்’ திரைப்படம்

 *புத்தியே சிறந்த ஆயுதம் ; க்ரைம் த்ரில்லராக உருவாகும் ‘பீப்’ திரைப்படம்* *ரொம்பவே அரிதாக வெளியாகும் ‘ஹை கான்செப்ட்’டில் க்ரைம் டிராமாவாக தய...

Monday, 3 July 2023

ICON Star Allu Arjun and Director Trivikram Srinivas announce their

ICON Star Allu Arjun and Director Trivikram Srinivas announce their 4th Collaboration


ICON Star Allu Arjun and Master Craftsman Trivikram Srinivas have made films like Julayi, S/O Satyamurthy and Ala Vaikuntapurramuloo. Each one has become even bigger blockbuster than the previous one. Ala Vaikuntapurramuloo has become highly popular around the world. 





On the auspicious occasion of Guru Purnima, the combination has announced their 4th collaboration. This time, the combination promises to entertain world cinema audiences along with Telugu audiences. 


Samajavaragamana, Butta Bomma, Ramulo Ramula songs have become hugely famous among the Generation Z from Ala Vaikuntapurramuloo. Now, the superlative combination is coming together to bring a 'Never before seen Visual Spectacle’ on Indian screens. 


The combination is promising to bring an entertainer and give a new experience to audiences on a large scale around the globe. The story-telling prowess of Trivikram Srinivas has made each movie from this combination, most memorable. Allu Arjun has lived in roles like "Ravindra Narayan", "Viraj Anand" and "Bantu". Each role and performance has etched a special place in the hearts of cinema lovers across the globe. 

 

Haarika & Haasine Creations are teaming up once again with ICON Star Allu Arjun and their darling director, Trivikram Srinivas for their 8th production. All the three films from this exceptionally special and distinguished combination have been produced by Haarika & Haasine Creations on a huge scale. Now, they are taking the stakes even higher and aiming at global level production to satisfy every film-lover around the world. 


Highly Renowned and extraordinarily successful Geetha Arts banner is joining in production with Haarika & Haasine Creations just like they did for Ala Vaikuntapurramuloo.  


The movie team will soon announce the details of cast and crew.

பால்சன்ஸ் பியூட்டி அண்ட் ஃபேஷன் பிரைவேட் லிமிடெட், டோனி அண்ட் கெய்யின் 139வது

 பால்சன்ஸ் பியூட்டி அண்ட் ஃபேஷன் பிரைவேட் லிமிடெட், டோனி அண்ட் கெய்யின் 139வது விற்பனை நிலையத்தை திரு.காசி விஸ்வநாதன்  மற்றும்  டாக்டர் சாம் பால் ஆகியோர் திறந்து வைத்தனர்.


பால்சன்ஸ் பியூட்டி அண்ட் ஃபேஷன் பிரைவேட் லிமிடெட் இணைந்து 'பால்சன்ஸ் பியூட்டி அண்ட் ஃபேஷன்' இன் 444வது விற்பனை நிலையத்தை பிரதம விருந்தினர் திரு.காசி விஸ்வநாதன் (சென்னை சூப்பர் கிங்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி), டாக்டர் சாம் பால் (நிர்வாக இயக்குநர் - பால்சன்ஸ் பியூட்டி அண்ட் ஃபேஷன்) முன்னிலையில் திறந்து வைக்கப்பட்டது. திரு. ரஃபி, திரு.  நிஜாம், திருமதிசோனியா, திரு. மனோஜ், மிஸ்.யென் சுன் மா, திரு. பிரிதிவிராஜ், திரு. பிரான்சிஸ் மற்றும் திருமதி அம்ருதா பிரகாசம் ஆகியோர் கலந்து கொண்டனர்.





சென்னை விமான  புதிய வணிக வளாகமான ஏரோஹப்பில் 139வது அவுட்லெட் டோனி அண்ட் கெய்யின் அனைத்து அழகு சேவைகளுக்கும் 20 சதவிகித தொடக்க சலுகை மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட சலுகைகளும் விற்பனை நிலையத்தில் கிடைக்கும்.

மேலும் தகவலுக்கு:

டோனி அண்ட் கெய்
ஏரோஹப்: விமான நிலையம், மீனம்பாக்கம், சென்னை, தமிழ்நாடு 600027, இந்தியா
தொடர்பு விவரங்கள்: டோனி அண்ட் கெய்  – 7094454527

Paulsons Beauty and Fashion Private Limited inaugurated the 139 th outlet of ‘Toni & Guy

Paulsons Beauty and Fashion Private Limited inaugurated  the 139 th outlet of‘Toni&Guy’ by Mr.Kasi Vishwanathan &  Dr. Sam Paul at Aerohub


 Paulsons Beauty and Fashion Private Limited jointly inaugurates the 444th outlet of ‘Paulsons Beauty and Fashion’ in the presence of Chief Guest Mr.Kasi Vishwanathan(CEO,Chennai Super Kings), Dr. Sam Paul (Managing Director - Paulsons Beauty and Fashion),Mr. Rafi(Senior Vice President Toni&Guy),Mr. Nizam (Senior Vice President Toni&Guy), Mrs. Soniya (Vice President –(Toni &Guy), Mr. Manoj(Vice President – Toni &Guy) , Ms. Yen Chun Ma(Vice President – Toni &Guy),Mr.Prithiviraj(Vice President – Toni &Guy) , Mr.Francis(Vice President – Toni &Guy) and Ms. Amrutha Pragasam (Vice President – Marketing, Paulsons Beauty and Fashion) at Aerohub.






The Outlet is at Chennai Airport's newest mall,Aerohub.At the launch of the 139th Outlet Toni&Guy announced an inaugural offer of 20% off on all beauty services and customized offers are also available at the outlet.

For More Information:
Toni&Guy Hairdressing, Aerohub : Airport, Meenambakkam, Chennai, Tamil Nadu 600027, India
Contact Details: Toni&Guy – 7094454527

Sunday, 2 July 2023

சாதனைப் படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகும் டாலி ஐஸ்வர்யா

 *சாதனைப் படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகும் டாலி ஐஸ்வர்யா* 


மாடலிங் துறையில் எட்டு வருட அனுபவம் கொண்ட டாலி ஐஸ்வர்யா விரைவில் வெளியாக இருக்கும் சாதனைப் படமான ‘கலைஞர் நகர்’ படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகிறார். அது மட்டுமல்ல ஒரே சமயத்தில் இன்னும் மூன்று படங்களிலும் நடித்து வருகிறார். 










சமீபத்தில் ‘கலைஞர் நகர்’ படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது. SR பிலிம் பேக்டரி சார்பில் சிவராஜ் தயாரித்துள்ள இந்த  படத்தை இயக்குநர் சுகன் குமார் என்பவர் இயக்கியுள்ளார். நரேஷ் இசையமைத்துள்ள இந்தப்படத்திற்கு இளையராஜா ஒளிப்பதிவு செய்துள்ளார். வசனங்களை பாபா கென்னடி எழுதியுள்ளார்.   


பிரஜின், மிகமிக அவசரம் புகழ் பிரியங்கா, லிவிங்ஸ்டன் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ள இந்த படத்தில் நடித்த அனுபவம் குறித்தும் தனது மற்ற படங்கள் குறித்தும் பகிர்ந்து கொண்டுள்ளார் நடிகை டாலி ஐஸ்வர்யா.


“நடிப்பு தான் ஆர்வம் என்றாலும் மாடலிங் மூலமாக பயணத்தை ஆரம்பித்து சினிமாவில் நுழைவது தான் சரியாக இருக்கும் என நினைத்தேன். ஏற்கனவே காதலே கோமாளி என்கிற குறும்படத்திலும் நடித்துள்ளேன். கலைஞர் நகர் படப்பிடிப்பு துவங்குவதற்கு முன்னதாக அதில் நடித்த ஒரு நடிகை எதிர்பாராத விபத்தில் சிக்கியதால் படப்பிடிப்பு துவங்குவதற்கு இரண்டு நாட்கள் முன்பு தான் அந்த வாய்ப்பு என்னை தேடி வந்தது. இரண்டாம் நாளே படப்பிடிப்பு, அதுவும் 23 நேரத்தில் எடுக்கப்படுகின்ற சாதனை படத்தில் நடிக்க வேண்டும் என்கிற பிரமிப்பும் படபடப்பும் கொஞ்சம் இருக்கத்தான் செய்தது,


அதேசமயம் முதல் நாளே படத்தின் ஸ்கிரிப்டை படித்ததும் நம்பிக்கை பிறந்தது. படப்பிடிப்பு தளத்தில் ஒரே நாளில் அதுவும் 19 லொக்கேஷன்களில் மாற்றி மாற்றி படப்பிடிப்பு நடைபெற்றது. ஒவ்வொரு லொக்கேஷனுக்கும் மாறுவதற்கு 10 முதல் 15 நிமிட இடைவெளி மட்டுமே இருந்தது. 


இந்தப்படம் மேடை நடனக்கலைஞர்களின் வாழ்வாதாரம் மற்றும் சமூகத்தில் அவர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை சொல்லும் கதையாக உருவாகி இருக்கிறது, அவர்கள் மீது பலர் கொண்டுள்ள தவறான அபிப்ராயத்தை மாற்றும் படமாக இது இருக்கும். இதில் பிரஜின், பிரியங்கா என நடிப்பு அனுபவம் மிகுந்த இருவருடன் நடித்தது எனக்கு மிகப்பெரிய அனுபவமாக இருந்தது, 


ஒரேநாளில் படமாக்கப்பட்டாலும் கூட இந்த படத்தில் இடம்பெறும் திருவிழா காட்சிகள் மிக பிரமாண்டமானதாக இருக்கும். பல துணை நடிகர்கள் பங்கு பெற்ற இந்த திருவிழா காட்சியை இந்த படத்திற்காகவே உருவாக்கினார்கள். படத்தின் இயக்குநர் சுகன் குமார் ஏற்கனவே ‘பிதா’ என்ற குறும்படத்தை 23.23 மணி நேரத்தில் இயக்கி சாதனை செய்தவர். இந்தமுறை முழு நீள திரைப்படத்தை 23 மணி நேரத்தில் ஏழு நிமிடம் முன்னதாகவே படப்பிடிப்பை முடித்து விட்டார். 


யுனிவர்சல் ஜீனியஸ் என்கிற சாதனைக்காக இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. சினிமாவில் எனது அறிமுகமே இப்படி ஒரு சாதனை படம் மூலமாக அமைந்ததில் மகிழ்ச்சி. 


இதுதவிர தற்போது இரவின் கண்கள் என்கிற சயின்டிஃபிக் திரில்லர் படத்திலும் ஹேப்பி பர்த்டே ஜூலி என்கிற திரில்லர் மற்றும் கடைசி தோட்டா என்கிற கிரைம் திரில்லர் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறேன். இப்படி ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான ஜானரில் உருவாகி வருகின்றன. 


மிகவும் துணிச்சலான கதாபாத்திரங்கள், அதிக வசனம் கொண்ட, நாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதைகள், லவ் மற்றும் திரில்லர் கதையம்சம் கொண்ட படங்களில் நடிப்பதற்கு அதிகம் விரும்புகிறேன். 


சினிமாவில் ஏற்கனவே நிறைய ஐஸ்வர்யாக்கள் இருக்கின்றனர். அதே சமயம் மாடலிங் உலகில் டாலி ஐஸ்வர்யா என்று தான் என்னை பலருக்கும் தெரியும். அதனால சினிமாவிற்கும் அதே பெயரை பயன்படுத்த ஆரம்பித்து விட்டேன்”. என்று கூறியுள்ளார்.

Actress Dolly Aishwarya debuts in a Record-Creating Movie

 *Actress Dolly Aishwarya debuts in a Record-Creating Movie*


The arrival of talented female models in the Tamil film industry has always enjoyed the privilege of getting the red carpets spread out. Over the years, we have seen many models winning the hearts of audiences and critics as actresses for their great performances. The latest one to join the league is Dolly Aishwarya, who owns an impeccable experience of 8 years in the industry. She is now playing the female lead role in a film titled ‘Kalaignar Nagar’, which is made for the purpose creating a world record. Besides, she is simultaneously acting in three movies at the same time. 








Recently, the promotional event of ‘Kalaignar Nagar’ happened in Chennai, which garnered good response for the unique achievement of the crew. The film is produced by Sivaraj of SR Film Factory, and is directed by Sugan Kumar. Naresh is composing music, and Ilaiyaraaja is handling cinematography with Baba Kennedy as the dialogue writer. 

 

Prajin, Miga Miga Avasaram fame Priyanka, Livingston and many others are a part of this film. Actress Dolly Aishwarya shares her experience of working in this film and other projects as well.


“Although I had a great interest for acting, I felt that embarking on a journey as model would be more beneficial. I have already acted in a short film titled ‘Kadhale Comali’. Initially, another actress was signed to play the female lead in ‘Kalaignar Nagar’. Unfortunately, she met with an accident a couple of days before the commencement of shooting. I got an opportunity to act on the spur of moment, and in next couple of days, I had to face the camera for the shooting. Moreover, the entire film had to be shot completed in 23 hours. 


At the same time, I gained confidence after reading the script. We had to shift nearly 19 locations on the same days with just 10-15 mins gap between each location change during the shoot. 


The film is all about the odds and challenges faced by the stage dancers. It will delve more into their lifestyle and the problems they face in their day-to-day life. It will be a film that will change the wrong perception about them that people have about them. It was a great experience for me to act with Prajin and Priyanka, who own a great track of delivering promising performances in the movies. 


 

Although the entire film is shot in a single day, the festival scene will be off more grandeur. The scene has many junior artists, and it will be one of the greatest highlights of this film. The film’s director Sugan Kumar, has already created a record of directing a short film ‘Pitha’ in a duration of 23.23 hours. And now, he has completed a full length feature film in 23 hours 7 minutes. 


The film has been made for the Universal Genius Record, and I am glad that my debut movie itself is creating such wonderful vibes for me.  


Besides, I am acting in movies ‘Iravin Kangal’, a scientific Thriller, ‘Happy Birthday Julie’, a Thriller movie and Crime Thriller movie titled ‘Kadaisi Thotta’ that are getting materialized simultaneously. 


I am looking forward acting in movies that offers me substantial roles with more dialogues and prominence for the heroine character alongside romantic and thriller movies. 


Since there are many actresses in the film industry with the name ‘Aishwarya’, I have preferred having my name as ‘Dolly Aishwarya’ as many would address me in the fashion and modelling industry.

காடப்புறா கலைக்குழு’ படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு

 ‘காடப்புறா கலைக்குழு’ படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு !! 


Sakti Ciinee Productions Pvt Ltd சார்பில், டாக்டர் முருகானந்தம் வீரராகவன், டாக்டர்  சண்முகப்பிரியா முருகானந்தம் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ராஜா குருசாமி இயக்கத்தில், முனீஸ்காந்த், காளி வெங்கட்  முதன்மை பாத்திரத்தில் நடிக்க, கிராமத்துக் கரகாட்ட கலையின் பின்னணியில், மண் மணக்கும் காவியமாக உருவாகியுள்ள திரைப்படம் ‘காடப்புறா கலைக்குழு’. 


வரும் ஜூலை 7 அன்று திரைக்குவரள்ள இப்படத்தின் பத்திரிக்கை ஊடகவியலாளர் சந்திப்பு இனிதே நடைபெற்றது. 







தயாரிப்பாளர் டாக்டர் முருகானந்தம் வீரராகவன் பேசியதாவது… 

எங்கள்  விழாவிற்கு வருகைக்குத் தந்துள்ள அனைவருக்கும் நன்றி. நான் அறிவியல் துறையில் பணியாற்றி வந்தவன், ஆனாலும் என்னிடம் கலை ஆர்வம் குறையவே இல்லை. எனவே என் துறையில் சாதித்த பிறகு எனக்குப் பிடித்த துறைக்கு வந்துள்ளேன். சினிமா எனக்கு இன்ஸ்பிரேஷன். எனது ஆர்வம் தான் உங்கள் முன் என்னைத் தயாரிப்பாளராக நிறுத்தியுள்ளது.  ‘காடப்புறா கலைக்குழு’ படத்தில் உங்களை ரசிக்க வைக்கும் அனைத்து அம்சங்களும் உள்ளது. தொடர்ந்து எங்கள் நிறுவனம் மூலம் நல்ல படைப்புகளை தருவோம். உங்கள் ஆதரவை தாருங்கள் நன்றி. 


கலை இயக்குநர் இன்பா பேசியதாவது...

இந்தப் படம் ஒரு முக்கிய கலைப்படைப்பு , நீண்ட நாள் இந்த படத்திற்கான பணிகள் நடைபெற்றது, நாம் அனைவரும் பழைய கலைகளை மறந்து கொண்டு வருகிறோம் , இந்தப் படம் நமக்கு ஒரு நினைவூட்டலாக இருக்கும். உங்கள் ஆதரவு இந்தப் படத்திற்குத் தேவை நன்றி,



ஒளிப்பதிவாளர் வினோத் காந்தி பேசியதாவது..

இந்தப்படம் கலை இயக்குநர் சொன்னது போல் ஒரு நல்ல கலை நோக்கத்துடன் எடுத்துள்ளார் இயக்குநர். அவர் இந்தப் படம் ஒரு தேர் எல்லோரும் சேர்ந்து தான் இழுக்கனும் என்பார். இந்தப்படத்தை இங்கு இழுத்து, கொண்டு வந்துவிட்டோம். இனி நீங்கள் தான் மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். எல்லோரும் மிகவும் கஷ்டப்பட்டு உழைத்துள்ளோம், உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி. 


நடிகை ஸ்வேதா ரமேஷ் பேசியதாவது..

இது எனக்கு முதல் படம் , எனக்கு நீங்கள் உங்கள் ஆதரவைத் தர வேண்டும், படத்தைப் பாருங்கள் கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும், படக்குழு அனைவருக்கும் நன்றி.


நடிகை ஶ்ரீலேகா ராஜேந்திரன் பேசியதாவது… 

எல்லோரும் மிகக் கடினமாக உழைத்துள்ளார்கள். நான் ஒரு சிறு கதாப்பாத்திரத்தில் தான் நடித்துள்ளேன், ஆனால் மனதுக்கு நிறைவான கதாபாத்திரம். இப்போது பழமையான கலைகள் அழிந்து வருகிறது. நான் செத்தாலும் ஆயிரம் பொன் என ஒரு படம் நடித்தேன், அதில் ஒப்பாரி அழிந்து போவதைப் பற்றி எடுத்தார்கள். இந்தப்படத்தில் கரகாட்டத்தை எடுத்துள்ளார்கள். இயக்குநர் காலில் அடிபட்டாலும் கட்டுப்போட்டுக் கொண்டு இயக்கினார். இந்தப் படம் கண்டிப்பாக ஜெயிக்கும். தயாரிப்பாளர் கலையின் மீதான அன்பில் இப்படத்தை எடுத்துள்ளார். உங்கள் ஆதரவை இந்தப்படத்திற்குத் தாருங்கள் நன்றி. 


சிறப்பு விருந்தினர் நீலமேகம் பேசியதாவது…

இந்தப்படத்தை உருவாக்கிய தயாரிப்பாளர் இயக்குநர் மற்றும் குழுவிற்கும் எனது நன்றிகள். கள்ளக்குறிச்சி பக்கத்தில் எடுத்தவாய்நத்தம் எங்கள் கிராமம். இயக்குநர் எங்கள் ஊர்ப்பக்கம் படம் எடுக்கனும் என்றார்.  கலையை வளர்க்கும் நோக்கில் இந்தப்படக்குழு பணியாற்றினார்கள். அவர்களுக்கு என்னால் முடிந்த உதவியைச் செய்துள்ளேன். இப்போது உங்களிடம் இப்படத்தை விட்டோம். படத்தை வெற்றி பெறச் செய்யுங்கள் நன்றி.


டெலிபோன் ராஜா பேசியதாவது… 

இன்றைய காலகட்டத்தில் ஜாதியை வச்சுத்தான் படம் செய்து கொண்டிருக்கிறார்கள். இப்படியான காலகட்டத்தில் கலையை வைத்து எடுத்துள்ளார்கள். முனிஷ்காந்த் சார் இந்த படத்தில் இந்த உடம்பை வைத்துக்கொண்டு பம்பரமாக ஆடியிருக்கிறார். காளி வெங்கட்டும் அசத்தியிருக்கிறார். ஆயிரம் பேரின் உழைப்பு இது. படத்திற்கு ஆதரவு தாருங்கள் நன்றி. 


இசையமைப்பாளர் ஹென்றி பேசியதாவது, 

இந்த வாய்ப்பை எனக்கு அளித்த தயாரிப்பாளருக்கு நன்றி,  என் இசையை நம்பி என்னைத் தேர்வு செய்த இயக்குநர் ராஜ குருசாமி அவர்களுக்கும் எனது நன்றி. படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.


நடிகர் சூப்பர் குட் சுப்பிரமணி பேசியதாவது, 

நான் பல படங்களில் நடித்துள்ளேன், ஆனால் எனக்கு மிகப்பெரிய அடையாளம் கொடுத்தது முண்டாசுப்பட்டி படம், அதன் பிறகு அப்படி ஒரு படம் எனக்கு அமையவில்லை. அதை இந்தப்படம் பூர்த்தி செய்யும் என நம்புகிறேன்,  இயக்குநர் உடல் அளவிலும் மனதளவிலும் அதிக மெனக்கெடல் செய்துள்ளார், அவரது உழைப்பிற்கு இந்த படம் கண்டிப்பாக வெற்றியடையும் நன்றி.  


நடிகை சுவாதி முத்து பேசியதாவது..

முதலில் கடவுளுக்கு நான் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன், இது எனக்கு முதல் படம் படக்குழு அனைவருக்கும் நான் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன், இந்தப் படம் குடும்பத்துடன் சேர்ந்து பார்க்க வேண்டிய படம். உங்கள் அனைவருக்கும் நன்றி, என் குடும்பத்திற்கும் நண்பர்களுக்கும்  நன்றி அவர்கள் இல்லாமல் நான் இல்லை, படத்திற்கு உங்கள் ஆதரவு வேண்டும் நன்றி, 


நடிகர் காளி வெங்கட் பேசியதாவது.. 

எனக்கு இது மிக முக்கியமான படம்,  இயக்குநர் குறும்படம் எடுத்த காலத்திலிருந்தே எனக்குப் பழக்கம். ராஜா குருசாமி எனக்கு நெருங்கிய நண்பர். அவர் படம் செய்தது எனக்கு மகிழ்ச்சி. அவருக்குப் படம் தந்ததற்காகத் தயாரிப்பாளருக்கு நன்றி. தயாரிப்பாளர் புரொடக்சனில் தேவைப்படும் அத்தனையும் வாங்கி வைத்து விட்டார். கண்டிப்பாகத் தொடர்ந்து படம் எடுப்பார், அவருக்கு வாழ்த்துக்கள். ஹென்றி மிக எளிமையாக அனைவருக்கும் பிடிக்கும் படி இசையமைத்துள்ளார். இந்தப்படத்தில் முனீஷ்காந்த் இங்கு ஆடியதை வீடியோவில் பார்த்தேன் அவருடன் தொடர்ந்து பணியாற்றுவது மிக மகிழ்ச்சி. லோகேஷனில் மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு தந்தார்கள் அவருக்கு நன்றி. தனுஷ் சார் இந்தப்படத்தின் டிரெய்லர் பார்த்துப் பாராட்டினார். உங்களுக்கும் படம் பிடிக்கும் நன்றி. 


இயக்குநர் ராஜா குருசாமி பேசியதாவது, 

முதலில் என் தயாரிப்பாளர் இல்லாமல் நான் இல்லை , அவருக்கு நன்றி.  படக்குழு அனைவருக்கும் நன்றி எனக்கு மிகப்பெரிய ஒத்துழைப்பு கொடுத்துள்ளீர்கள் , முகச்சுளிப்பு இல்லாமல் இரத்தக் காட்சிகள் இல்லாமல், குடும்பத்தோடு பார்க்கக்கூடிய படமாக இந்தப் படம் இருக்கும், நீங்கள் பார்த்து விட்டு உங்கள் ஆதரவைத் தர வேண்டும் நன்றி.


நடிகர் முனிஸ்காந்த் பேசியதாவது, 

இந்தப் படம் முண்டாசுப்பட்டி படம் போன்று ஒரு குழுவாகச் சேர்ந்து உருவாக்கியுள்ளோம், அனைவரும் இணைந்து கலகலப்பாகப் படப்பிடிப்பை நடத்தினோம், இயக்குநர் பெரும் உழைப்பைக் கொடுத்துள்ளார், இந்தப் படத்தின் மீது மிகவும் நம்பிக்கை வைத்து இரவு பகல் பாராமல் இந்தப் படத்தை உருவாக்கியுள்ளார்.  இப்படி ஒரு கலைப் படைப்பை உருவாக்கியுள்ள தயாரிப்பாளருக்கு நன்றி.  நான் இந்த படத்தில் கரகாட்டம் ஆட முயற்சி செய்துள்ளேன், அது எனக்கு ஒரு புது அனுபவமாக இருந்தது , படம் கண்டிப்பாக வெற்றியடையும் வாழ்த்துகள்.

ரெட் ஜெயன்ட் மூவீஸ் தயாரிப்பில், உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, பஹத் பாசில்

 ரெட் ஜெயன்ட் மூவீஸ் தயாரிப்பில், உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, பஹத் பாசில், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான ‘மாமன்னன்’ திரைப்படம் வசூலில் சாதனை படைத்து வருகிறது. 






ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனம், இயக்குனர் மாரி செல்வராஜ் அவர்களுக்கு பரிசாக மினி கூப்பர் காரை வழங்கிய நிகழ்வின் போது உதயநிதி ஸ்டாலின், ரெட் ஜெயன்ட் மூவீஸ் இணை தயாரிப்பாளர்கள் M.செண்பகமூர்த்தி, R. அர்ஜுன் துரை, ரெட் ஜெயன்ட் மூவீஸ் விநியோக நிர்வாகி C.ராஜா ஆகியோர் இருந்தனர்.

பிரைம் வீடியோவின் 'ஸ்வீட் காரம் காபி' இணையத் தொடரின் இசை வெளியீடு*

 *பிரைம் வீடியோவின் 'ஸ்வீட் காரம் காபி' இணையத் தொடரின் இசை வெளியீடு*


ப்ரைம் வீடியோவின் அசல் தமிழ் இணைய தொடரான 'ஸ்வீட் காரம் காபி' எனும் இணைய தொடரின் இசையை வெளியிடுகிறது. இந்த இணைய தொடரின் இசை ஆல்பத்தில்11 பாடல்கள் இடம் பெற்றிருக்கிறது. 



கோவிந்த் வசந்தா இசை அமைத்திருக்கும் இந்த இணைய தொடரில் ஐந்து பாடல்களும், ஆறு இசைக்கருவிகளின் இசையும் என 11 பாடல்கள் இடம் பெற்றுள்ளன.


இயக்குநர்கள் பிஜாய் நம்பியார், கிருஷ்ணா மாரிமுத்து மற்றும் சுவாதி ரகுராமன் ஆகியோரின் இயக்கத்தில் லட்சுமி, மது, சாந்தி ஆகியோர் நடித்திருக்கும் இந்த இணைய தொடர் எட்டு அத்தியாயங்களை கொண்டிருக்கிறது. இந்த பிரைம் வீடியோவின் அசல் தமிழ் தொடரான 'ஸ்வீட் காரம் காபி ' ஜூலை 6ஆம் தேதி முதல் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது. 


மும்பை இந்தியா ஜூலை 2 2023 - இந்தியாவின் மிகவும் விரும்பி பார்க்கப்படும் பொழுதுபோக்கு தளமான பிரைம் வீடியோவில் ஜூலை 6ஆம் தேதி முதல் வெளியாகவிருக்கும் அசல் தமிழ் இணைய தொடரான 'ஸ்வீட் காரம் காபி ' எனும் இணைய தொடரிலிருந்து மயக்கும் இசை ஆல்பத்தை வெளியிட்டிருக்கிறது. லயன் டூத் ஸ்டுடியோஸ் பிரைவேட் லிமிடெட் எனும் நிறுவனம் சார்பில் ரேஷ்மா கட்டாலா உருவாக்கி இருக்கும் இந்த இணைய தொடரை இயக்குநர்கள் பிஜாய் நம்பியார், கிருஷ்ணா மாரிமுத்து மற்றும் சுவாதி ரகுராமன் ஆகியோர் இயக்கியுள்ளனர். இதில் லட்சுமி, மது, சாந்தி ஆகிய மூன்று நட்சத்திரங்கள் முதன்மையான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். உலகெங்கிலும் உள்ள 240 க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் உள்ள பிரைம் உறுப்பினர்கள் தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் மொழிமாற்றம் செய்து ஜூலை 6ஆம் தேதி முதல் இந்த தொடரை காணலாம். 'ஸ்வீட் காரம் காபி 'என்பது பிரைம் மெம்பர்ஷிப்பில் சமீபத்திய இணைப்பாகும். இந்தியாவில் உள்ள பிரைம் உறுப்பினர்கள், ஆண்டிற்கு ரூபாய் 1499க்கு ஒரே ஒருமுறை செலுத்தி உறுப்பினராக இணைந்திருப்பவர்கள், சேமிப்பு, வசதி மற்றும் பொழுதுபோக்கு ஆகியவற்றை கண்டு ரசிக்கிறார்கள். 


'ஸ்வீட் காரம் காபி'- ஒரே குடும்பத்தை சார்ந்த மூன்று பெண்மணிகள் மற்றும் வெவ்வேறு தலைமுறையினர் எப்படி மறக்க முடியாத பயணத்தை மேற்கொள்கிறார்கள் என்பதை மிக அழகாக படம் பிடித்து காட்டுகிறது. அவர்களின் அன்றாட வாழ்விலிருந்தும்.. அவர்கள் மீது சுமத்தப்பட்ட பழமையான எதிர்பார்ப்புகளிலிருந்தும்... ஓய்வெடுப்பதற்காக ஒரு மனக்கிளர்ச்சியுடன் சாலை பயணத்தை தொடங்குகிறார்கள். அதன் வழியில் தங்களை மீண்டும் கண்டறிந்து, மீதமுள்ள வாழ்க்கையினை வாழ்வதற்கான ஆர்வத்தை மீண்டும் தூண்டுவதற்கான ஒரு பயணமாக மாற்றம் பெறுகிறது. 


இந்த தொடருக்கு இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா இசையமைத்திருக்கிறார். மெல்லிசை, இனிமையான மற்றும் எதிரொலிக்கும் ஒலிப்பதிவுகளின் கலவையுடன் இசை ஆல்பத்தை உருவாக்கி இருக்கிறார். இதில் இடம் பெற்றிருக்கும் 'கார்காலமே..' எனத் தொடங்கும் பாடலும், 'உத்னா ஹை ஐஸ்..' எனத் தொடங்கும் பாடலும்.. என ஒவ்வொரு பாடலும், கதையை நிறைவு செய்யும் விதத்தில் இடம் பிடித்திருக்கிறது. இந்த பாடல்கள் இந்திய பார்வையாளர்களின் மனதில் நிச்சயமாக நீங்கா இடம்பெறும். 


இது தொடர்பாக இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா பேசுகையில், '' ஒரு இணையத் தொடருக்கு இசையமைப்பது பற்றி ரேஷ்மா என்னிடம் சொன்ன போது, முதலில் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை. ஆனால் 'ஸ்வீட் காரம் காபி'யின் ஒவ்வொரு அத்தியாயத்தையும் நான் பார்த்தபோது... கதை, கதாபாத்திரங்கள் மற்றும் அவர்களின் பயணம் ஆகியவற்றால் நான் பெரிதும் ஈர்க்கப்பட்டேன். நான் வீட்டுக்கு வந்தவுடன் தீம் மியூசிக் அமைக்கும் பணியை தொடங்கினேன். நான் இந்த தொடரில் ஒரு பகுதியாக இருக்க விரும்புகிறேன் என்று எனக்குத் தெரியும். 


கதையோட்டத்தில் இசைக்கு ஏராளமான தருணங்கள் உள்ளன. அவை மாண்டேஜஸ்கள்.. பாடல்கள்.. பின்னணி இசை... இதன் மூலம் காட்சியை மேலும் விறுவிறுப்பாக மாற்றுகின்றன. காவேரிக்கு ( மது) வயலின், சுந்தரிக்கு ( லட்சுமி ) புல்லாங்குழல் நிவேதிதாவுக்கு ( சாந்தி ) கிட்டார் என மூன்று கதாபாத்திரங்களுக்கும்.. தனித்தனியான இசைக்கருவிகளின் மூலம் இசையை பிரதிபலிக்க வேண்டும் என்று நாங்கள் முடிவு செய்தோம். இந்தத் தொடருக்கு இசையமைக்க மிகவும் வித்தியாசமான அணுகுமுறையை கடைப்பிடித்து, பாடல் மற்றும் இசைக்கருவி ஆகிய இரண்டையும் உள்ளடக்கிய முழுமையான ஆல்பத்தை உருவாக்கத் தொடங்கினோம். இது எனக்கு முற்றிலும் ரசிக்கத்தக்க அனுபவமாக இருந்தது. இதுவரை என்னுடைய இசைப்பயணத்தில் நான் இசையமைத்த பாடல்களில்.. 'தீர வணம்..' எனத் தொடங்கும் பாடல் தான் எனக்கு மிகவும் பிடித்தது.'' என்றார்.


இசை தொடர்பாக ரேஷ்மா கட்டாலா பேசுகையில், '' பார்வையாளர்களை ஒரு கதையுடன் பிணைப்பதில் இசை மிக முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் அவர்கள் மிகவும் ஆர்வமாக பார்த்துக் கொண்டிருக்கும் மற்றும் பின்பற்றும் கதாபாத்திரங்கள்.. குறிப்பாக 'ஸ்வீட் காரம் காபி ' போன்ற உணர்வு பூர்வமான நாடகத்தில் இந்திய இசைக்கு மரியாதை செலுத்தும் வகையில் ஒரு ஆல்பத்தை உருவாக்க கோவிந்த் வசந்தா சிறந்த தேர்வாக இருக்கும் என்று நான் எப்போதும் நம்பினேன். குறிப்பாக நம் வீடுகளில் நான் கேட்டு வளர்ந்த இசை வகை.. எங்கள் காதுகள் மற்றும் உள்ளுணர்வுகளால் நாங்கள் சம பாகங்களில் வழிநடத்தப்பட்டுள்ளோம்.'' என்றார். 


இந்த ஆல்பத்தில்..


01) இனிப்பு காரம் காப்பி.... (முகப்பு பாடல் - இசைக்கருவி) 


02) கார்காலமே... பாடகர்கள் : சத்ய பிரகாஷ், கீர்த்தனா வைத்தியநாதன். பாடலாசிரியர் - நிக்ஸி


03) மின்மினி... பாடியவர் :கபில் கபிலன். பாடலாசிரியர் - கார்த்திக் நேத்தா


04) தீரவணம்.. பாடியவர் :கபில் கபிலன். பாடலாசிரியர் - நிக்ஸி


05) உத்னா ஹை ஐஸ்.. பாடியவர்: ஜாவேத் அலி. பாடலாசிரியர் - அனுராக் மிஸ்ரா


06) திருநாள்... பாடியவர்கள் : ஆதித்யா ராவ், கபில் கபிலன், கீர்த்தனா வைத்தியநாதன். பாடலாசிரியர் - நிக்ஸி


07) வெறும் தாய்.. இசைக்கருவி


08) விக்ரம் இங்கே இருக்கிறார்- இசைக்கருவி


09) நிதியின் தீம் - இசைக்கருவி


10) காவிரியின் தீம் - இசைக்கருவி


11) சுந்தரியின் தீம் - இசைக்கருவி


திங்க் மியூசிக் மூலம் 'ஸ்வீட் காரம் காபி'யின் இசை ஆல்பம் விநியோகிக்கப்படுகிறது. உலகளவில் அனைத்து முக்கிய இசை தொடர்பான ஸ்ட்ரீமிங் தளத்திலும் இந்த ஆல்பத்தின் பாடல்களும், இசையும் கிடைக்கிறது. 


'ஸ்வீட் காரம் காபி 'என்பது பிரைம் வீடியோவின் பிரைம் டே 2023 வரிசையில் ஒரு பகுதியாகும். இதில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அசல் தொடர்கள் மற்றும் அனைத்து மொழிகளிலும் பிளாக் பஸ்டர் திரைப்படங்கள் உள்ளன. அவற்றில் சில ஏற்கனவே சேவையில் உள்ளன கூடுதலாக பிரைம் உறுப்பினர்கள் பெரிய சேமிப்பு, பெரிய ஒப்பந்தங்கள், பிளாக் பஸ்டர் திரைப்படங்கள், சிறந்த பிராண்டுகள் மற்றும் சிறு மற்றும் நடுத்தர வணிகங்களின் புதிய வெளியீடுகள், தகுதியான பொருள்களுக்கான இலவச ஒரு நாள் டெலிவரி மற்றும் பலவற்றின் மூலம் மகிழ்ச்சியை கண்டறிய தயாராகிறார்கள். பிரைம் வீடியோவின் பிரைம் டே என்பது ஜூலை 15 மற்றும் 16 ஆகிய இரண்டு நாட்களாகும்.


https://youtu.be/mdNLhGFyETU

Prime Video Launches the Music Album of Tamil Original Family-Drama, Sweet Kaaram

 *Prime Video Launches the Music Album of Tamil Original Family-Drama, Sweet Kaaram Coffee Packed with 11 Melodious Tracks*


Composed by Govind Vasantha, the music album comprises of six instrumental pieces and five original songs crooned by popular singers like Javed Ali, Aditya Rao, Kapil Kapilan, Keerthana Vaidyanathan, and Sathyaprakash among others


Starring Madhoo, Lakshmi, and Santhy, and directed by Bejoy Nambiar, Krishna Marimuthu, and Swathi Raghuraaman, the eight-episode Tamil series premieres on 6 July, along with dubs in Telugu, Malayalam, Kannada, and Hindi


Link to Album: https://youtu.be/mdNLhGFyETU


Prime Video, India’s most loved entertainment destination, today launched the mesmerizing and soulful music album of the upcoming Original Tamil series, Sweet Kaaram Coffee, premiering on 6 July. Created by Reshma Ghatala, and produced by Lion Tooth Studios Pvt. Ltd., the heartwarming series is directed by Bejoy Nambiar, Krishna Marimuthu, and Swathi Raghuraaman; and stars Lakshmi, Madhoo, and Santhy. Prime members in more than 240 countries and territories around the world will be able to stream the series starting 6 July in Tamil, along with dubs in Telugu, Malayalam, Kannada, and Hindi. Sweet Kaaram Coffee is the latest addition to the Prime membership. Prime members in India enjoy savings, convenience, and entertainment, all in a single membership for just ₹1499/ year.



Sweet Kaaram Coffee, a fervent family-drama beautifully showcases how three women from the same family, and of different generations embark on an unforgettable journey. What starts as an impulsive road trip to take a break from not only their daily lives but also the archaic expectations laden on them, along the way transforms into a passage to rediscover themselves and reignite their zest for life. 


Govind Vasantha, the music director for the series created the album from the ground up with a mix of melodious, soothing, and resonating soundtracks that create a sense of emotional familiarity with the characters and their journey through the episodes. From a cheerful Cargaalamey to a hum-worthy Udna Hai Aise, every track complements the story in a way that will reverberate and surely stay with the audience until the very end. 


Music Director, Govind Vasantha said, “When Reshma told me about composing music for a series, I was not very keen. But when I sat through the episode-by-episode narration of Sweet Kaaram Coffee, I was hooked to the story, the characters, and their journey, that as soon as I got home, I began working on the first iteration of the theme music. And that’s how I knew I wanted to be a part of this series.” He further added, “There are a lot of musical moments throughout the story, which are conveyed through montages, songs, background scores making the scene or sequence even more lively. We decided that the music for each of the three characters should be represented through individual instruments, for instance a violin for Kaveri (Madhoo), flute for Sundari (Lakshmi), and guitar for Niveditha (Santhy). Adopting a very different approach to compose music for this series, we landed up creating a complete album comprising of both lyrical and instrumental soundtracks, which was a thoroughly enjoyable experience for me. Theeravanam is my absolute favorite from all the songs I have composed in my career thus far.”


“Music plays an extremely crucial role in binding the audience to a story, and the characters they’re so keenly watching and following, especially in an emotional drama like Sweet Kaaram Coffee. I always believed that Govind Vasantha would be the best choice to conceive an album that at its core is a tribute to Indian music- especially the kind of music that we have grown up listening to in our homes. We have been guided in equal parts by our ears, hearts, and instincts,” added creator Reshma Ghatala.


The beautiful album boasts of a collection of five original songs and six instrumental pieces; 

Sweet Karam Coffee - Main Title (instrumental)

Cargaalamey - Singers: Sathyaprakash, Keerthana Vaidyanathan, Lyricist: Nixy

Minmini - Singer: Kapil Kapilan, Lyricist: Karthik Netha

Theeravanam - Singer: Kapil Kapilan, Lyricist: Nixy

Udna Hai Aise - Singer: Javed Ali, Lyricist: Anurag Mishra

Thirunaal - Singers: Aditya Rao, Kapil Kapilan, Keerthana Vaidyanathan, Lyricist: Nixy

Just a Mother (instrumental)

Vikram is here (instrumental)

Nivi’s Theme (instrumental)

Kaveri’s Theme (instrumental)

Sundari’s Theme (instrumental)


Sweet Kaaram Coffee’s music album is distributed by Think Music and is available on all major music streaming services globally.


Sweet Kaaram Coffee is a part of Prime Video’s Prime Day 2023 line-up that includes highly-anticipated original series and blockbuster movies across languages, some of which are already available on the service. Additionally, Prime members get ready to discover joy with big savings, great deals, blockbuster entertainment, new launches from top brands & small and medium businesses, FREE One-Day delivery on eligible items, and much more. Prime Day 2023 is on July 15 & 16.