Featured post

Scroll’ Nominated for ICFT-UNESCO Gandhi Medal at the 57th International Film Festival of India, Goa

 Scroll’ Nominated for  ICFT-UNESCO Gandhi Medal  at the 57th International Film Festival of India, Goa ‘Scroll’, produced under the banner ...

Sunday, 7 January 2024

ஆண்டின் இறுதி நாளான டிசம்பர் 31 ல், 11.25 கோடியை வசூலித்து சாதனை

ஆண்டின் இறுதி நாளான டிசம்பர் 31 ல்,  11.25 கோடியை வசூலித்து சாதனை படைத்திருக்கிறது “டங்கி” திரைப்படம் !!



புதிய ஆண்டு பிறந்துவிட்டது.  டங்கி பட பாக்ஸ் ஆபிஸ் வசூல் இன்னும் தொடர்கிறது.  படம் வெளியான நாளில் 30 கோடியில் ஆரம்பமான இப்பட வசூல்,  ரசிகர்கள் ஆதரவுடன் உயர்ந்து வருகிறது. ரசிகர்களின் பாசிட்டிவ் வார்த்தையுடன், குடும்ப பார்வையாளர்கள் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களிடமிருந்து அபரிமிதமான அன்பைப் பெற்று வருகிறது இப்படம். இரண்டாவது வாரத்திலும் பாக்ஸ் ஆபிஸில் கலக்கி வருவதுடன், புத்தாண்டு கொண்டாட்டமாக கடந்த  ஞாயிற்றுக்கிழமை அட்டகாசமான வசூலைக் குவித்துள்ளது.


இந்த ஆண்டின் இறுதி நாளில் இரட்டை இலக்கத்தில் கோடிகளை குவித்துள்ளது இப்படம்.  இயக்குநர் ராஜ்குமார் ஹிரானியின் டங்கி டிசம்பர் 30 சனிக்கிழமை  அன்று 9 கோடியை ஈட்டியது.; டிசம்பர் 31 ஞாயிறு அன்று இப்படம் 11.25 கோடி வசூல் செய்தது. இதன் மூலம், இந்தியாவில் படத்தின் உள்நாட்டு மொத்த வசூல் 188.07 கோடியை எட்டியுள்ளது. வார இறுதி நாளில் 38 சதவீதத்திற்கும் அதிகமான பார்வையாளர்கள் இப்படத்தை கண்டுகளித்துள்ளனர். இந்த விடுமுறை காலத்தை கொண்டாட,  குடும்ப பார்வையாளர்களுக்கு ஒரு அருமையான படைப்பாக டங்கி அமைந்திருக்கிறது. உலகளவிலான பாக்ஸ் ஆபிஸ் வசூல் சூப்பர் ஸ்டேடியாக 380.60 கோடியை எட்டியுள்ளது. இப்படம்  இந்தியாவில் 200 கோடியையும் உலகளவில் 400 கோடியையும் விரைவில் கடக்கவுள்ளது.


இப்படத்தில் ஷாருக்கானுடன், பூமன் இரானி, டாப்ஸி பண்ணு, விக்கி கௌஷல், விக்ரம் கோச்சார், அனில் குரோவர் உள்ளிட்ட நட்சத்திரக் குழு  'டங்கி' திரைப்படத்தில் நடித்துள்ளது.


இத்திரைப்படத்தை ஜியோ ஸ்டுடியோஸ், ரெட் சில்லீஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் ராஜ்குமார் ஹிரானி பிலிம்ஸ் வழங்குகிறார்கள், ராஜ்குமார் ஹிரானி மற்றும் கௌரி கான் இணைந்து  தயாரித்துள்ளனர். அபிஜத் ஜோஷி, ராஜ்குமார் ஹிரானி மற்றும் கனிகா தில்லான் இணைந்து எழுதியுள்ளனர். டங்கி 2023 டிசம்பர்  21 ஆம் தேதி வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

Dunki ends the year on a high note with a double-digit collection! Rakes in

Dunki ends the year on a high note with a double-digit collection! Rakes in 11.25 Cr. in India nett on 31st December!



The new year has arrived and Dunki fervor continues to hold its strong presence at the box office. Opened with a phenomenal 30 Cr. It made a steady growth and was holding steady over the weekdays. With tremendous positive word of mouth, the film has been garnering immense love from the family audience and worldwide audience. This has made the film maintain its box office position in the second week and has seen growth on Sunday due to New Year’s Eve and managed to have a double-digit number.


Dunki ends the year on a high note, registering double-digit collections. While Rajkumar Hirani's Dunki earned 9 Cr. on Saturday, December 30; on Sunday, December 31 the film collected 11.25 Cr. in India nett. With that, the film’s domestic box office total so far is 188.07 Cr. At night the film witnessed an occupancy of more than 38 percent. The film displays remarkable growth this holiday season as families throng theatres for a feel-good film. The global box office collection stands at a super steady 380.60 Cr. The film is firmly poised to breach the 200 Cr. mark in India and 400 Cr. worldwide!


Dunki features an ensemble cast, with colorful characters portrayed by exceptionally talented actors Boman Irani, Taapsee Pannu, Vicky Kaushal, Vikram Kochhar, and Anil Grover, along with Shah Rukh Khan. A JIO Studios, Red Chillies Entertainment, and Rajkumar Hirani Films presentation, produced by Rajkumar Hirani and Gauri Khan Written by Abhijat Joshi, Rajkumar Hirani, and Kanika Dhillon, Dunki is now released on the big screen.

குளோபல் ஸ்டார்' ராம்சரண் - இயக்குநர் புச்சி பாபு சனா - தயாரிப்பாளர்

 *'குளோபல் ஸ்டார்' ராம்சரண் - இயக்குநர் புச்சி பாபு சனா - தயாரிப்பாளர் வெங்கட சதீஷ் கிலாரு- விருத்தி சினிமாஸ்- மைத்திரி மூவி மேக்கர்ஸ் - சுகுமார் ரைட்டிங்ஸ் ஆகியோரின் கூட்டணியில் தயாராகும் பான் இந்திய திரைப்படத்தில் 'ஆஸ்கார் நாயகன்' ஏ. ஆர். ரஹ்மான் இணைந்திருக்கிறார்.*



'குளோபல் ஸ்டார்' ராம்சரண்- அடுத்ததாக இளம் மற்றும் திறமையான இயக்குநரான புச்சி பாபு சனாவுடன் இணைகிறார். இயக்குநர் புச்சி பாபு சனா - தனது முதல் படைப்பாளியான 'உப்பென்னா' எனும் திரைப்படத்திற்காக தேசிய விருதை வென்றார். இந்தத் திரைப்படம் பிளாக் பஸ்டர் ஹிட்டானது. இவர்களின் கூட்டணியில் உலகளவிலான தொழில்நுட்ப தரத்தில் தயாராகும் பான் இந்திய திரைப்படத்தை முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் பெருமையுடன் வழங்குகிறது. இந்தத் திரைப்படத்தை விருத்தி சினிமாஸ் மற்றும் சுகுமார் ரைட்டிங்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கிறது. இப்படத்தின் மூலம் வெங்கட சதீஷ் கிலாரு திரைப்பட தயாரிப்பில் கால் பதிக்கிறார். 


இந்த மெகா முயற்சிக்கு ஆஸ்கார் விருது பெற்ற இசையமைப்பாளரான ஏ. ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். 'இசைப்புயல்' ஏ. ஆர். ரஹ்மானின் பிறந்த நாளை முன்னிட்டு, படக் குழுவினர் இந்த தகவலை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். உப்பென்னா திரைப்படம் ஒரு மியூசிக்கல் ஹிட். இப்படத்தை இயக்கிய புச்சி பாபு சனாவின் இரண்டாவது படமும் மியூசிக்கல் சார்ட் பஸ்டராக இருக்கும் என எதிர்பார்க்கலாம். 


ஏ. ஆர். ரஹ்மான் - இந்திய சினிமா வரலாற்றில் வெற்றிகரமான இசை அமைப்பாளர்களில் ஒருவர். அவர் நாடு முழுவதும் உள்ள இசை ஆர்வலர்களிடையே பெரும் வரவேற்பினை பெற்றவர். ஆஸ்கார் விருதினை வென்ற பிறகு உலக அளவில் பிரபலமானார். ரஹ்மானின் இசை உலகளாவியது. அவர் இந்த பான் இந்திய படைப்பிற்கு இசையமைப்பது முக்கியத்துவம் வாய்ந்தது. மேலும் ரசிகர்களை ஈர்க்கும் காரணிகளில்  ஒன்றாகவும் அவர் திகழ்வார். 


இயக்குநர் புச்சி பாபு சனா ஆற்றல் வாய்ந்த திரைக்கதையை உருவாக்கி இருக்கிறார். அந்தக் கதை உலகளாவிய கவனத்தை கவரும் வகையில் அமைந்திருக்கிறது. இப்படத்தில் பணியாற்றும் ஏனைய நடிகர்கள் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப குழுவினர் பற்றிய விவரங்களை தயாரிப்பாளர்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்கள்.

Big Breaking: AR Rahman On Board For Global Star Ram Charan, Buchi Babu Sana,

Big Breaking: AR Rahman On Board For Global Star Ram Charan, Buchi Babu Sana, Venkata Satish Kilaru, Vriddhi Cinemas, Mythri Movie Makers, Sukumar Writings Pan India Film



Global Star Ram Charan will next be joining forces with young and talented director Buchi Babu Sana who won a national award for his debut flick Uppena which was a sensational blockbuster. The crazy film in this sensational combination will be high, in terms of technical standards. Proudly presented by the leading production house Mythri Movie Makers, Venkata Satish Kilaru is venturing into film production grandly with the movie to be mounted on a huge scale with a high budget under the banners of Vriddhi Cinemas and Sukumar Writings.


Here comes a breaking news. For this mega venture, Oscar-award-winning composer AR Rahman is roped in to score the music. The makers announced the news officially, on the occasion of Rahman’s birthday. Uppena was a musical hit and we can expect Buchi Babu’s second film is also going to be a musical chartbuster.


AR Rahman is one of the most successful composers ever in Indian cinema history and he enjoys a huge following among music lovers across the country. He became familiar globally after winning an Oscar award. Rahman’s music is universal and his work is going to be one of the major attractions and crowd pulling factor for this Pan India project.


Buchi Babu prepared a powerful script that will have a universal appeal. The makers will announce the details of the other cast and crew of the movie soon.


Cast: Ram Charan


Technical Crew:

Writer, Director: Buchi Babu Sana

Presents: Mythri Movie Makers

Banner: Vriddhi Cinemas, Sukumar Writings

Producer: Venkata Satish Kilaru

Music Director: AR Rahman

Saturday, 6 January 2024

மிஷன்- சாப்டர்1' படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா

 *'மிஷன்- சாப்டர்1' படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா!*

















லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் இயக்குநர் விஜய் இயக்கத்தில் நடிகர்கள் அருண் விஜய், ஏமி ஜாக்சன், நிமிஷா விஜயன் உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் திரைப்படம் ‘மிஷன் சாப்டர்1’. பொங்கல் பண்டிகை விடுமுறையை ஒட்டி இந்தப் படம் ஜனவரி 12 அன்று திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இதன் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. 

இதில் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் பேசியதாவது, “இயக்குநர் விஜய் என்னுடைய வீட்டில் ஒருவர் போலதான். அவருடன் நான் பத்து படங்கள் வேலை செய்துவிட்டேன். என்னுடைய இரண்டாவது படத்தில் இருந்து பல ஹிட் பாடல்கள் விஜயின் படங்களில்தான் அமைந்தது. எங்கள் காம்பினேஷனில் முத்துகுமார் சாரை மிஸ் செய்கிறோம். அருண் விஜய் சாருடன் ‘யானை’, ‘மிஷன் சாப்டர் 1’, அடுத்து பாலா சார் படம் எனத் தொடர்ந்து மூன்று படங்கள் செய்து கொண்டிருக்கிறேன்.  இந்தப் படம் படக்குழுவுக்கு மிகப்பெரிய வெற்றியைக் கொடுக்க வேண்டும் என வேண்டிக் கொள்கிறேன். இந்தப் பொங்கலுக்கு 'கேப்டன் மில்லர்', 'மிஷன் சாப்டர்1' என நான் இசையமைத்த எனது இரண்டு படங்களும் வருகிறது” என்றார். 


ஆடை வடிவமைப்பாளர் ருச்சி, “படக்குழுவினர் அனைவரும் எனக்கு மிகப்பெரிய ஆதரவு கொடுத்தார்கள். எனக்கு இந்தப் படம் அற்புதமான பயணமாக இருந்தது”.


புரொடக்‌ஷன் மேனேஜர் சரவணன், "இந்த வாய்ப்பு கொடுத்த விஜய் சாருக்கு நன்றி. இவ்வளவு பெரிய நடிகர்களோடு முதல் முறை வேலை பார்த்தது நல்ல அனுபவமாக இருந்தது. ஒத்துழைப்பு கொடுத்த படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி". 


படத்தொகுப்பாளர் ஆண்டனி, “படத்தில் அருண் விஜய் கலக்கி இருக்கிறார். இயக்குநர் விஜயின் மற்றப் படங்களைப் போலவே, இந்தப் படமும் மிகப்பெரிய வெற்றிப் பெறும்”.


ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா, “இந்தப் படத்தில் வேலைப் பார்த்தது எனக்கு உண்மையிலேயே மகிழ்ச்சி. ஏனெனில், ஃபைட் மாஸ்டர் விஜய் சாருடனும், ஃபைட்டர் அருண் சாருடனும் வேலைப் பார்த்திருக்கிறேன். முழுக்க முழுக்க சண்டைப் படமாக விஜய் சாருடன் இரண்டாவது படம் இதை செய்கிறேன். பார்வையாளர்கள் படத்தில் நிச்சயம் சண்டையை என்ஜாய் செய்வீர்கள். இந்த சண்டைக்காக நிறைய பயிற்சி எடுத்து கை, கால்களில் அருண் விஜய் சார் அடி வாங்கினார். அந்தக் கட்டோடுதான் இப்போதும் வந்துள்ளார். படக்குழுவினரின் உழைப்புக்காகப் படம் நிச்சயம் வெற்றி பெறும் ”.


இயக்குநர், திரைக்கதை ஆசிரியர் மஹாதேவன், "இது ஒரு நல்ல கதை. என்ன நினைத்து எழுதினேனோ அது அப்படியே விஜய் படமாக எடுத்துள்ளார். அதற்கும் எனக்குக் கொடுத்த வாய்ப்புக்கும் நன்றி. முதல் முறையாக தமிழில் நான் வேலைப் பார்க்கிறேன். இதற்கு முன்பு தெலுங்கில்தான் வேலை பார்த்திருக்கிறேன். படத்தை வெளியிடும் லைகா புரொடக்ஷனுக்கு நன்றி! நான் முதல் முறை தமிழில் எழுதியுள்ள இந்த ஆக்ஷன் கதையில் அருண் விஜய் சார் நடித்திருக்கிறார். அது மிகவும் சந்தோஷம். ஏனெனில், எனக்கு எமோஷனுடன் ஆக்ஷன் கதை எழுதுவது பிடிக்கும். அதை திரையில் சரியான நபர் கொண்டு வந்திருப்பதை நாம் பார்க்கும் பொழுது மகிழ்ச்சியாக இருக்கும். அருண் விஜய் அதை சரியாக செய்துள்ளார். படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி!".


வைட் ஆங்கிள் மீடியா அனிஷ்தேவ், "பொங்கலுக்கு வெளியாக இருக்கும் இந்தப் படம் வெற்றி பெற வாழ்த்துகள்"


நடிகர் பரத் கோபன்னா, "2017 ஆவது வருடம் விஜய் சாரின் ஒரு படத்தில் நான் நடிப்பதாக இருந்து அது மிஸ் ஆனது. அதில் எனக்கு பெரிய வருத்தம். ஆனால் இப்பொழுது 'மிஷன் சாப்டர்1' படம் மூலம் அந்த வாய்ப்பு மீண்டும் வந்திருப்பதில் மகிழ்ச்சி. விஜய் சார் இயக்கத்தில் அருண் விஜய் சாரோட லைகா புரொடக்ஷன் தயாரிப்பில் அறிமுகமாவதில் மகிழ்ச்சி. ஏமி, நிமிஷா என அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர். தமிழ் பார்வையாளர்கள் படத்திற்கு வரவேற்பு கொடுப்பார்கள் என நம்புகிறேன்". 


நடிகர் சரவணன், "விஜய் சாருடைய எல்லாப் படங்களும் எனக்கு பிடிக்கும். அவர் படத்தில் நடிக்க வேண்டும் என்ற நீண்ட நாள் ஆசை எனக்கு இந்த படம் மூலம் நிறைவேறி இருக்கிறது. படம் வெற்றிப் பெற வாழ்த்துக்கள்".


நடிகர் விராஜ், "படத்தில் வேலை பார்த்தால் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள். நன்றி!"


நடிகர் அபிஹாசன், "இந்தப் படத்தில் அசிஸ்டெண்ட்டாக வேலை செய்ய தான் போனேன். ஆனால், விஜய் சார் எனக்கு ஒரு கதாபாத்திரம் கொடுத்தார். அவருக்கு நன்றி. டிரைய்லரில் நிறைய ஆக்ஷன் இருப்பது போல தோன்றும். ஆனால் அதோடு படத்தில் நிறைய எமோஷன்களும் உள்ளது.  படம் உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும்". 


பாடகி உத்ரா உன்னி கிருஷ்ணன், "'மிஷன்' படத்தில் ஒரு அழகான பாடல் பாட வாய்ப்பு கொடுத்த விஜய் அங்கிளுக்கும், ஜிவி அங்கிளுக்கும் நன்றி".



குழந்தை நட்சத்திரம் இயல், “இந்தப் படத்தில் அருண் விஜய் அங்கிள் மகளாக நடித்துள்ளேன். இயக்குநர் விஜய் அங்கிள் அவருடைய பொண்ணு போல என்னைப் பார்த்துக் கொண்டார். அருண் விஜய் அங்கிள் ஃபைட் பண்ணும் போது பார்த்துப் பண்ணுங்க. ஏமி ஜாக்சன் ஆண்ட்டி அழகாக இருந்தாங்க”.


ஹெட் ஆஃப் லைகா புரொடக்‌ஷன்ஸ் ஜிகே தமிழ்க்குமரன் பேசியதாவது, “இந்த வருடத்தின் முதல் படமாக ‘மிஷன் சாப்டர்1’ஐ வெளியிடுகிறோம். படம் நிச்சயம் வெற்றிப் பெறும். படம் நன்றாக வந்திருக்கிறது. படக்குழுவுக்கு வாழ்த்துகள்”.


விநியோகஸ்தகர் மற்றும் தயாரிப்பாளரான, ஸ்ரீகோகுலம் மூவிஸ் கோகுலம் கோபாலன், “தமிழ், மலையாளம் என இரு தரப்பு பார்வையாளர்களும் விரும்பிப் பார்க்கும்படியாக இந்தப் படம் வந்துள்ளது. லைகா புரொடக்சன்ஸ் தயாரிக்கும் படம் என்றால் தானாகவே ஒரு ஆர்வம் பார்வையாளர்கள் மத்தியில் வந்துவிடுகிறது. இந்தப் படத்திலும் திறமையான கலைஞர்களும் நடிகர்களும் இருக்கின்றனர். இந்தப் படத்தை வெற்றிப்படமாக பார்வையாளர்கள் மாற்றித் தருவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது" என்றார். 


நடிகர் அருண்விஜய் பேசியதாவது, "பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என்னுடைய முதல் படம் 'மிஷன் சாப்டர்1' என்பது எனக்கு ரொம்ப சந்தோஷம். நாம் என்னதான் உழைப்பைக் கொடுத்திருந்தாலும் படம் சரியான தேதியில் வெளியாவது என்பது முக்கியமான விஷயம். அதை செய்து கொடுத்த லைகாவுக்கு நன்றி. நான் இதுவரை நடித்தப் படங்களிலேயே 'மிஷன் சாப்டர்1' தான் அதிக பொருட்ச்செலவில் உருவாக்கப்பட்ட படம். இந்த ஸ்கிரிப்ட் கொடுத்த விஜய்க்கு நன்றி. ஆக்‌ஷன், எமோஷன் என எல்லாமே இதில் சரியாக வந்திருக்கிறது. சிறந்த திரையரங்க அனுபவத்தை இந்தப் படம் கொடுக்கும்.  ஏமி ஜாக்சன், நிமிஷா எனப் பலரும் இதில் நடித்துள்ளனர். ஜிவி பிரகாஷின் இசை இந்தப் படத்திற்குப் பெரிய பலம். லண்டன், சென்னை ஆகிய இடங்களில் இதை படமாக்கினோம். நாலரை ஏக்கரில் மிகப்பெரிய ஜெயில் செட்டை இங்கு உருவாக்கினோம். சில காரணங்களால் அது சேதமானது. அப்போது கூட செலவைப் பற்றி பொருட்படுத்தாது லைகா புரொடக்‌ஷனஸ் எங்களுக்கு முழு ஆதரவு கொடுத்தார்கள். தொழில்நுட்பக்குழுவும் படத்திற்குப் பெரிய பலம். படப்பிடிப்புத் தளத்தில் கொஞ்சம் ரிலாக்ஸ் செய்யலாம் என்று நினைத்தேன். ஆனால், விஜய் அதற்கான நேரமே தரமால் திட்டமிட்டபடி சரியாக வேலை செய்து முடித்தார். ஒவ்வொரு நாளும் படப்பிடிப்பு தளத்தில் 1500 பேர் நிச்சயம் இருப்பார்கள். அவர்களை எல்லாம் விஜய் அழகாக மேனேஜ் செய்திருக்கிறார். என்னை வேறொரு கோணத்தில் இந்தப் படம் காட்டும். ஆக்‌ஷன், எமோஷன் என அனைத்து விஷயங்களிலும் புதிதாக முயற்சி செய்திருக்கிறோம். இப்படியான கதையைக் கொடுத்த மகாதேவன் சாருக்கு நன்றி. படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி. பொங்கல் அன்று உங்கள் அனைவரையும் சந்திக்கிறோம். எங்களுடன் வெளியாகும் அனைத்துப் படங்களும் வெற்றி பெற வேண்டும் என்பதுதான் என் விருப்பம்" என்றார். 


இயக்குநர் விஜய் பேசியதாவது, "நிறையப் படங்கள் இயக்கி இருக்கிறேன். ஆனால், இது புது அனுபவமாக இருந்தது. படத்தின் தயாரிப்பாளர்கள் சுவாதி, ராஜசேகர் சாருக்கு நன்றி. எங்களைப் போலவே இந்தப் படத்தின் மீது நம்பிக்கை வைத்த லைகா புரொடக்‌ஷன்ஸூக்கும் நன்றி. தமிழ்க்குமரன் சார் இந்தப் படத்தைப் பார்த்ததும் உடனே இணைத் தயாரிப்பு செய்கிறேன் என்று சொன்னார். அதன்பிறகுதான் இந்தப் படம் அடுத்தக் கட்டத்திற்குச் சென்றது. 'கேப்டன் மில்லர்', 'அயலான்' என இரண்டு அசுரத்தனமான படங்கள் வருகிறது. இந்த வரிசையில் நாங்களும் வருகிறோம். பல சிரமங்களைத் தாண்டிதான் இந்தப் படத்தை வெளியிடுகிறோம். அருண் எங்களுக்கு சிறப்பான ஒத்துழைப்பைக் கொடுத்தார். சினிமாவில் உள்ள திறமையான நடிகைகள் பட்டியலில் நிச்சயம் நிமிஷாவும் இருப்பார். ஏமி,இயல் என அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர். இயல் கதாபாத்திரம் தான் படத்தின் ஆன்மா. தொழில்நுட்பக்குழுவினரும் சிறப்பாக செய்துள்ளனர். இப்போது சினிமா தியேட்டருக்கான படங்கள், டிஜிட்டல் சினிமா எனப் பிரிந்துள்ளது. நிச்சயம் 'மிஷன் சாப்டர்1' உங்களுக்கு சிறந்த திரையரங்க அனுபவத்தைக் கொடுக்கும். எல்லாப் படங்களுமே சேர்ந்து ஜெயிக்க வேண்டும்" என்றார்.

ஹனு-மான் திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு

 *ஹனு-மான் திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு!*







பிரைம்ஷோ என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், இயக்குநர்  பிரசாந்த் வர்மா இயக்கத்தில், நடிகர் தேஜா சஜ்ஜா நடிப்பில், பிரம்மாண்ட பான் இந்தியப் படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் ஹனு-மான்.   


இயக்குநர் பிரசாந்த் வர்மாவின் திரைப்பட யுனிவர்ஸின் முதல் படமாக உருவாகும் ஹனு-மான் படத்தின் கதை அடிப்படையில் "அஞ்சனாத்ரி" என்ற கற்பனை இடத்தில் நடப்பதாக அமைக்கப்பட்டுள்ளது. முழுக்க சிஜியில் உலகத்தரத்தில் இந்த ஃபேண்ட்ஸி உலகம் உருவாக்கப்பட்டுள்ளது.


இப்படம் பொங்கல் கொண்டாட்டமாக திரைக்கு வரவுள்ள நிலையில், இப்படத்தினை விளம்பரப்படுத்தும் பணியில் படக்குழுவினர் பம்பரமாகச் சுழன்று வருகின்றனர்.  இப்படத்தின் தமிழ்ப் பதிப்பினை, விளம்பரப்படுத்தும் வகையில், படக்குழுவினர் சென்னையில், தமிழ் பத்திரிக்கை, ஊடக, பண்பலை நண்பர்களைச் சந்தித்தனர்.  


இந்நிகழ்வினில்


தயாரிப்பாளர் சைத்தன்யா பேசியதாவது…

எல்லோருக்கும் அட்வான்ஸ் பொங்கல் வாழ்த்துக்கள். இந்த நேரத்தில்  நிரஞ்சன் ரெட்டி, அஸ்ரின் ரெட்டி,, வெங்கட் குமார் ஜெட்டி மற்றும் இயக்குநர் பிரசாந்த் வர்மா ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். படத்தின் இறுதிக்கட்ட வேலைகளால் அவர்களால் இங்கு வர முடியவில்லை. திரைப்படத்தின் மீதான எங்களது  காதலின் வெளிப்பாடாக  இப்படைப்பை உருவாக்கியுள்ளோம். இப்படத்திற்காக அனைவரும் கடுமையான உழைப்பைத் தந்துள்ளனர்.  இப்படம் மிகச்சிறப்பாக வந்திருக்கிறது. ஒரு சிறு முயற்சியாக துவங்கி பான் வேர்ல்ட் படமாக மாறியுள்ளது.  உங்கள் எல்லோருக்கும் இப்படம் புது அனுபவமாக இருக்கும். சக்தி பிலிம் பேக்டரி சக்திவேலன் சார் இப்படத்தை வெளியிடுவது எங்களுக்குக் கூடுதல் பலம். அவருக்கு என் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன், படத்திற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள். நன்றி. 


சக்தி பிலிம் பேக்டரி சக்திவேலன் பேசியதாவது..

சைதன்யா மேடம் இந்நிகழ்ச்சிக்குக் கிளம்பும்போது செருப்பு போடவில்லை, மொத்த டீமும் அப்படித்தான். ஹனுமான் மீதான அனைவரின் அர்ப்பணிப்பும்  அங்கேயே தெரிகிறது. நான் கடந்த ஒரு வருடமாக இப்படத்தைக் கவனித்து வருகிறேன். படத்தை முடித்துவிட்டாலும், ஒரு வருடமாக சிஜி வேலை செய்து வருகிறார்கள். உலகத்தரத்தில் இப்படைப்பினை உருவாக்கியுள்ளனர். இந்தப்படத்தை நான் செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டேன். இந்த புது வருடத்தில் இப்படத்துடன் ஆரம்பிப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. பொங்கலை ஹனுமானுடன் ரசிகர்கள் கொண்டாடலாம். பத்திரிக்கை நண்பர்கள்  இந்தப்படத்திற்கும் எப்போதும் போல் உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி. 


நடிகர் வினய் பேசியதாவது…

இது ஒரு தெலுங்குப்படம்,  நான் செய்யும் முதல் தெலுங்குப்படமாக இருந்தது, ஒரு வகையில் அப்படித்தான் ஆரம்பமானது. சின்னப்படமாக தான் ஆரம்பித்தது ஆனால் ஹனுமனின் ஆசீர்வாதத்தில் இப்படம் பான் இந்திய அளவில் மிகப்பெரிய படமாக மாறியுள்ளது.   இந்தப்படத்திற்காக எல்லோரும் கடுமையாக உழைத்துள்ளார்கள். படம் மிகச்சிறப்பாக வந்துள்ளது. படத்தில் நிறைய சர்ப்ரைஸ் இருக்கிறது. தயாரிப்பில் நிரஞ்சன், சைத்தன்யா ஆகியோர் படத்திற்காக ஒவ்வொன்றையும் பார்த்துச் பார்த்து செய்துள்ளனர். நான்   இந்தப்படத்தில் வித்தியாசமான காஸ்ட்யூமில் வித்தியாசமான பாத்திரத்தில் நடித்துள்ளேன். உங்கள் எல்லோருக்கும் கண்டிப்பாகப் பிடிக்கும். சக்தி பிலிம் பேக்டரி ஒரு படத்தை வெளியிட்டால் அது வெற்றிப்படமாக இருக்கும், இப்படத்தை அவர்கள் வெளியிடுவது மகிழ்ச்சி. படத்திற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள்


நடிகை அம்ரிதா ஐயர் பேசியதாவது…

இப்படத்தை தெலுங்குப்படமாக தான் ஆரம்பித்தோம், கொஞ்ச நாளில் பான் இந்தியப்படமாகி, பின்னர் இப்போது பான் வேர்ல்ட் படமாக மாறியுள்ளது. அனுமனின் ஆசீர்வாதம் தான் அதற்குக் காரணம். இப்படத்தைப் பெரிய அளவில் எடுத்துச்சென்ற தயாரிப்பாளர்களுக்கு என் நன்றி. இந்தப்படம் இந்திய சினிமா பெருமைப்படும் படமாக இருக்கும். ரசிகர்கள் தியேட்டரில் கொண்டாடும் படமாக இருக்கும். சாதாரண பையனுக்கு அனுமனின் பவர் கிடைத்தால் என்னாகும் என்பது தான் கதை, ஆன்மீக படமல்ல, எல்லோருக்கும் பிடிக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசிப்பார்கள். திரையரங்கில் பார்க்க வேண்டிய படம் இது புதுமையான அனுபவத்தைத் தரும்.  உங்கள் ஆதரவைத் தாருங்கள் 


நடிகை வரலட்சுமி பேசியதாவது… 

இந்தப்படத்தின் வளர்ச்சி பிரமிப்பாக இருக்கிறது. எல்லோரும் கதை சொல்லும்போது, படம் இப்படி வரும் என நினைப்போம், ஆனால் நாங்கள் யாருமே நினைக்காத அளவு, இப்படம் பிரம்மாண்டமாக வந்துள்ளது. சைத்தன்யா மேடம் பிரசாந்த் கேட்ட அத்தனையும் தந்து, இப்படத்தை மிகப்பெரிய படமாகக் கொண்டு வந்துள்ளார்கள். பிரசாந்த், தேஜா இந்தப்படத்திற்காகக் கடுமையாக, ஒவ்வொரு ஃபிரேமிலும் உழைத்துள்ளனர். இந்தப்படம் இந்தியாவின் முதல் சூப்பர் ஹீரோ படமாக இருக்கும். புதுசாக இருக்கும். டிரெய்லர் பார்த்திருப்பீர்கள், ஆனால் படம் இன்னும் நிறைய ஆச்சரியம் தரும். சில படங்களின் விஷுவலை திரையரங்கில் பார்த்தால் தான் அனுபவிக்க முடியும் இது அப்படியான படைப்பு. படத்திற்கு ஆதரவு தாருங்கள் நன்றி. 


நடிகர் தேஜா சஜ்ஜா பேசியதாவது… 

ஹனுமான் படத்திற்குப் பின்னால்  மிகப்பெரிய உழைப்பு இருக்கிறது. இது தெலுங்குப்படமல்ல, நேரடித்தமிழ் படம் மாதிரி தான் இருக்கும். அதற்காக நிறைய உழைத்துள்ளோம். இப்படத்தை மிகப்பெரிய படமாக்கத் தயாரிப்பு தரப்பில்,சைத்தன்யா மேடம், நிரஞ்சன் சார் மிகப்பெரிய ஆதரவைத் தந்துள்ளார்கள். டிரெய்லரிலேயே படத்தின் தன்மை உங்களுக்குத் தெரியும். படம் கண்டிப்பாக உங்கள் எல்லோருக்கும் பிடிக்கும் வகையில் இருக்கும். சக்தி பிலிம் பேக்டரி இப்படத்தை வெளியிடுகிறார்கள் அவர்களுக்கு எனது  நன்றி. இது முழுக்க முழுக்க கற்பனைக் கதை,"அஞ்சனாத்ரி"  என்ற உலகை இப்படத்திற்காக உருவாக்கியுள்ளோம். ஒரு பையனுக்கு அனுமனின் சக்தி கிடைப்பது தான் கதை. வினய், வரலட்சுமி, அம்ரிதா என எல்லோரும் மிகச்சிறப்பாகச் செய்துள்ளனர்.   படம் மிகச்சிறப்பாக வந்துள்ளது. நம் தென்னிந்தியக் கலாச்சாரத்தில், பொங்கலுக்கு 4,5 படங்கள் பார்க்கும் வழக்கம் இருக்கிறது, அது போல் இந்தப் பொங்கலுக்கு எங்கள் படத்திற்கு ஆதரவு தாருங்கள். இது ஓடிடியில் பார்க்கும் படமல்ல திரையரங்கில் அனுபவிக்க வேண்டிய படம். டிரெய்லருக்கு நல்ல வரவேற்பு தந்தீர்கள் படத்திற்கும் ஆதரவு தாருங்கள். நன்றி.


தெலுங்கு, இந்தி, மராத்தி, தமிழ், கன்னடம், மலையாளம், ஆங்கிலம், ஸ்பானிஷ், கொரியன், சீனம் மற்றும் ஜப்பானியம் உள்ளிட்ட பல மொழிகளில் ஹனு-மான் பான் வேர்ல்ட் படமாக வெளியிடப்படவுள்ளது.  


இப்படத்தில் தேஜா சஜ்ஜாவுக்கு ஜோடியாக அம்ரிதா ஐயர் கதாநாயகியாக நடிக்கிறார், இப்படத்தில் வினய் ராய் வில்லனாகவும், வரலட்சுமி சரத்குமார் முக்கிய வேடத்திலும் நடித்துள்ளனர். 


பிரைம்ஷோ என்டர்டெயின்மென்ட்டின் K நிரஞ்சன் ரெட்டி இப்படத்தை பெருமையுடன் தயாரிக்கிறார், ஸ்ரீமதி சைத்தன்யா வழங்குகிறார். அஸ்ரின் ரெட்டி நிர்வாக தயாரிப்பாளராகவும், வெங்கட் குமார் ஜெட்டி லைன் தயாரிப்பாளராகவும், குஷால் ரெட்டி இணை தயாரிப்பாளராகவும் பணியாற்றியுள்ளனர்.


இந்த பிரம்மாண்டமான படைப்பின்,  ஒளிப்பதிவை சிவேந்திரா செய்துள்ளார், இப்படத்திற்கு  இளம் திறமையாளர்களான கவுரஹரி, அனுதீப் தேவ் மற்றும் கிருஷ்ணா சவுரப் ஆகிய மூவர் இணைந்து இசையமைத்துள்ளனர். ஸ்ரீநாகேந்திரா தாங்கலா தயாரிப்பு வடிவமைப்பாளராக பணியாற்றியுள்ளார். மிகவும் எதிர்பார்ப்பில் உள்ள  இப்படம் ஜனவரி 12, 2024 பொங்கல் அன்று திரைக்கு வரவுள்ளது.

Friday, 5 January 2024

Sathyaraj & Vetri unite for a new movie

 *Sathyaraj & Vetri unite for a new movie*







Documentary film maker in USA and Malaysia Narendran Murthy is all set for debut in Kollywood. The flick is bankrolled by Illayaraja Sekar under the banner Sekar G Productions. Narendran Murthy has come up with a story revolving around dark comedy genre. 


The Untitled movie has Sathyaraj, Vetri, MS Bhaskar, Kovai Sarala, Sachu, Prarthana, Airaa in prominent roles. N.S. Uthaya Kumar known for his works in Kodiyil Oruvan and Kurangu Bommai is the cinematographer for the film. 


Music is done by Jerard Felix and editing by Ramar. Ramar has earlier worked in Asuran, Vadachennai and Viduthalai movies. Senthil Kumar is named Executive Producer. Creative Producer-Noor and Bala. The movie has kick started with official pooja and shooting is set to begin soon.

சத்யராஜ், வெற்றி இணையும் டார்க் காமெடி படம்

சத்யராஜ், வெற்றி இணையும் டார்க் காமெடி படம்






*டார்க் காமெடி படத்தில் இணையும் சத்யராஜ், வெற்றி*


அமெரிக்கா மற்றும் மலேசியாவில் ஆவண படங்களை எடுத்திருக்கும் நரேந்திர மூர்த்தி தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகிறார். சேகர் ஜி புரோடக்ஷன்ஸ் சார்பில் இளையராஜா சேகர் தயாரிக்கும் இந்த புதிய படம் டார்க் காமெடி கதையம்சத்தில் உருவாக இருக்கிறது.


இந்த படத்தில் சத்யராஜ், வெற்றி எம்.எஸ்.பாஸ்கர், கோவை சரளா, சச்சு, பிராத்தனா, ஐரா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.  கோடியில் ஒருவன் மற்றும் குரங்கு பொம்மை படங்களில் பணியாற்றிய ஆர்.உதயகுமார் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார்.


ஜெரார்டு ஃபெலிக்ஸ் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு ராமர் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். இவர் முன்னதாக அசுரன், வடசென்னை மற்றும் விடுதலை போன்ற படங்களுக்கு படத்தொகுப்பு செய்திருக்கிறார். நிர்வாக தயாரிப்பை செந்தில் குமார் கவனிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியுள்ளது. முழு வீச்சில் இதன் படப்பிடிப்பு சென்னை மற்றும் பல இடங்களில் தொடர்ந்து நடைபெற இருக்கிறது.

Wednesday, 3 January 2024

மக்களின் இதயங்களை வென்ற டங்கி !! 400 கோடி வசூலைக் கடந்து

 *மக்களின் இதயங்களை வென்ற டங்கி !! 400 கோடி வசூலைக் கடந்து  சாதனை !!*



இந்தியாவில் மட்டும் 200 கோடியை கடக்கவுள்ளது ! 


உலகம் முழுதும் பெரும் வரவேற்பை பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது டங்கி திரைப்படம். இந்த விடுமுறைக்காலத்தில் குடும்ப பார்வையாளர்களுக்கு கொண்டாட்டமாக அமைந்ததுடன் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைத்து வயதினரும் ரசிக்கும் படியான அற்புதமான் படைப்பாக அமைந்துள்ளது டங்கி திரைப்படம். 



இந்த ஃபீல் குட் சினிமாவை ரசிப்பதற்காக குடும்பங்கள் திரையரங்குகளில் திரள்வதால், படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் தொடர்ந்து ஏறுமுகத்தில் இருக்கிறது! டங்கி வணிக ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் பாராட்டுக்களைக் குவித்திருப்பதுடன், உலகம் முழுவதும் 400.40 கோடி வசூல் செய்து, சாதனை படைத்துள்ளது. மேலும்  இந்திய பாக்ஸ் ஆபிஸில் விரைவில் 200 கோடியை கடக்கவுள்ளது.


டங்கி படத்தின் அற்புதமான வெற்றியின் மூலம், ஷாருக்கான் 2023 இல் ஹாட்ரிக் சாதனை படைத்துள்ளார். பதான், ஜவான், இப்போது டங்கி என  ஷாருக்கான் கடந்த  ஆண்டு முழுவதும் பாக்ஸ் ஆபிஸை ஆட்சி செய்துள்ளார். பதான் 1,050.30 கோடி வசூலித்தது, ஜவான் உலகளவில் வாழ்நாள் வசூல்  சாதனையாக 1,148.32 கோடி வசூலித்தது. இப்போது டங்கி 400 கோடியைத் தாண்டியுள்ளது. ஒரே வருடத்தில் மூன்று பிளாக்பஸ்டர்களை தந்து,  கிங்கான் ஷாருக்கான் பாக்ஸ் ஆபிஸ் மன்னன் என நிரூபித்துள்ளார். 



ராஜ்குமார் ஹிரானியின் டங்கி உலக பாக்ஸ் ஆபிஸில் 400+ கோடி கிளப்பில் இணைந்திருக்கிறது. தாயகத்தை இழந்து வாடும் ஒவ்வொருவரும் தங்கள் வாழ்கையை நெருக்கமான உணரும் படைப்பாக அவர்களின் வலியைப் பேசும் படைப்பாக இதயம் வருடுகிறது டங்கி. 


இப்படத்தில் ஷாருக்கானுடன், பூமன் இரானி, டாப்ஸி பண்ணு, விக்கி கௌஷல், விக்ரம் கோச்சார், அனில் குரோவர் உள்ளிட்ட நட்சத்திரக் குழு  'டங்கி' திரைப்படத்தில் நடித்துள்ளது.


இத்திரைப்படத்தை ஜியோ ஸ்டுடியோஸ், ரெட் சில்லீஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் ராஜ்குமார் ஹிரானி பிலிம்ஸ் வழங்குகிறார்கள், ராஜ்குமார் ஹிரானி மற்றும் கௌரி கான் இணைந்து  தயாரித்துள்ளனர். அபிஜத் ஜோஷி, ராஜ்குமார் ஹிரானி மற்றும் கனிகா தில்லான் இணைந்து எழுதியுள்ளனர். டங்கி 2023 டிசம்பர்  21 ஆம் தேதி வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.


https://x.com/redchilliesent/status/1742131936481657034?s=46&t=PusltWkTns46RNMqjWxAeA